2 வாரங்கள்.. அந்த பிரபல நடிகைக்கா இந்த கோலம்? அப்பார்ட்மென்ட் வீட்டில் என்னாச்சு.. எதிர்பார்க்கலியே
கராச்சி: பாகிஸ்தானை சேர்ந்த பிரபல நடிகையான ஹுமைரா அஸ்கர் அலிக்கு என்ன ஆயிற்று? ஏன் இப்படியொரு முடிவை எடுத்தார்? என்று ரசிகர்கள் அதிர்ச்சியுடன் கேள்விகளை எழுப்பி கொண்டிருக்கிறார்கள்.. இது தொடர்பான விசாரணையை போலீசாரும், தடவியியல், கைரேகை நிபுணர்கள் மேற்கொண்டு வந்தபோதிலும், அந்நாட்டு மக்கள் இன்னும் அந்த அதிர்வலையிலிருந்து மீளவில்லை.. என்ன நடந்தது நடிகைக்கு?
கராச்சியின் உயர்ரக பாதுகாப்பு வீட்டுவசதி ஆணையத்திலுள்ள அப்பார்ட்மென்ட் ஒன்றில்தான் இந்த நடிகை வசித்து வந்திருக்கிறார்.. வாடகைக்குதான் அங்கு நடிகை குடியிருந்ததாக சொல்கிறார்கள்.

இவரது சடலம் தற்போது அந்த வீட்டிலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.. அழுகிய நிலையில் போலீசாரால் சடலத்தை மீட்டு போஸ்ட் மார்ட்டத்துக்கு அனுப்பி வைத்துள்ளனர்.. தடயவியல் வல்லுநர்கள், கைரேகை நிபுணர்களை விரைந்து வந்து, தடயங்களை சேகரித்து வருகிறார்கள்.
2 வாரங்களுக்கு முன்பேயே நடிகை இறந்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.. இப்போதுகூட இந்த விஷயம் வெளியே தெரிந்திருக்காதாம்,
வாடகை வீடு
தற்போது குடியிருந்து வரும் வீட்டுக்கு வாடகையை பல மாதமாக நடிகை செலுத்தாமல் இருந்திருக்கிறார்.. இதனால், ஹவுஸ் ஓன்ர, அவரை வீட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்று, கோர்ட்டில் வழக்கும் தொடர்ந்திருக்கிறாராம். எனவே, நடிகை தங்கியிருக்கும் அடுக்குமாடி குடியிருப்பை பார்வையிட போலீசாருக்கு கோர்ட் உத்தரவிட்டிருக்கிறது.
நீதிமன்ற உத்தரவுப்படி, போலீசாரும் வீட்டுக்கு வந்துள்ளனர்.. காலிங் பெல் அழுத்தியும், கதவை பலமுறை தட்டியும் எந்த சத்தமும் வரவில்லை.. இதற்கு பிறகுதான், வீட்டின் கதவை உடைத்து கொண்டு உள்ளே சென்று பார்த்துள்ளனர்.. உள்ளே நுழையும்போது, குப்பென்ற துர்நாற்றம் வீசியிருக்கிறது. இதற்கு பிறகே நடிகை ஹுமைரா இறந்து சம்பவம் வெளியே தெரிய வந்தது.
குறுகிய காலத்தில் புகழ்
நடிகை மரணம் தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது, ஹுமைரா ஏதாவது மன உளைச்சலில் இருந்திருக்கலாம் என்கிறார்கள்.. எனினும் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டுக்காக போலீசார் காததிருக்கிறார்கள்..
பாகிஸ்தானை சேர்ந்த பிரபல நடிகையான ஹுமைரா அஸ்கர் அலி.. இவர் மாடலிங் துறையிலும் புகழ் பெற்றவர்.. தற்போது நடிகைக்கு 32 வயதாகிறது. தன்னுடைய கியூட்டான நடிப்பார் மிகக்குறுகிய காலத்திலேயே ஏகப்பட்ட ரசிகர்களை சம்பாதித்தவர்..
இதைத்தவிர, "தமாஷா கர்" என்ற ரியாலிட்டி ஷோவில் பங்கேற்று, சோசியல் மீடியாவில் லட்சக்கணக்கான ஃபாலோயர்ஸ்களை பெற்றவர்.. கடந்த 2015-ல் ஜலைபீ என்ற படத்தில் நடித்ததன் மூலம், சோஷியல் மீடியா புகழை இரட்டிப்பாக்கியவர்..
பன்முகத் திறமைசாலி
இவர் ஒரு நாடகக் கலைஞராகவும் இருந்துள்ளார்.. நன்றாக ஓவியம் வரைவாராம்.. சிற்பக் கலையில் ஆர்வம் உள்ளதால், சிற்பமும் செய்வாராம். இன்ஸ்டாவில் மட்டும் இவருக்கு 713,000 க்கும் மேற்பட்ட ஃபாலோயர்களை சம்பாதித்திருக்கிறார். இந்த அளவுக்கு பாப்புலாரிட்டியின் உச்சத்தில் திகழ்ந்த நடிகைக்கு என்னவாயிற்று என்பதுதான், அங்குள்ள ரசிகர்களின் கேள்வியாக எழுந்துள்ளது.
ஆனால், கடந்த வருடம் செப்டம்பர் 30ம்தேதிதான், கடைசியாக தன்னுடைய போட்டோக்களை பதிவிட்டுள்ளார்.. அதற்கு பிறகு ஏன் ஆக்டிவ்வாக இல்லை என தெரியவில்லை.
சந்தேகம் வரவில்லை
அப்பார்ட்மென்ட் வீடு என்றாலும், நடிகையை 2 வாரமாக காணாதது அங்குள்ளவர்களுக்கு பெரிதாக எந்த சந்தேகத்தையும் ஏற்படுத்தவில்லையாம்.. எங்காவது அவுட்டோர் ஷூட்டிங்கிற்கு சென்றிருப்பார் என்று நினைத்துள்ளார்கள். இதற்கு பிறகுதான் வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசி, போலீசார் வந்து நடிகையின் சடலத்தை மீட்டதாகவும் சொல்கிறார்கள்.
நடிகை இறந்து 15, 20 நாள் ஆகியிருக்கும் என்பதால், 20 நாளுக்கு முன்பு, நடிகையுடன் செல்போனில் பேசியவர்கள் யார் யார் என்ற லிஸ்ட்டையும் போலீசார் மேற்கொண்டுள்ளனர்.. மக்களின் அபிமானத்தை பெற்ற நடிகை, அழுகிய நிலையில் கிடந்த சம்பவம் பாகிஸ்தானில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications