ஒரே எபிசோட்டில் எதிர்நீச்சல் செய்த சாதனை.. நம்பர் ஒன் இடத்தை பிடித்து அசத்தல்... காரணம் இதுதானா?
எதிர்நீச்சல் சீரியலில் பிரமோவிற்கு தற்போது ட்ரெண்டிங்கில் முதல் இடம் கிடைத்திருக்கிறது.
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் திங்கள்கிழமைக்கான ப்ரோமோ ட்ரெண்ட்ங்கில் முதல் இடத்தை பிடித்திருக்கிறது.
குணசேகரனை அவமானப்படுத்திய சக்தியின் செயலை ரசிகர்கள் அதிகமாக பாராட்டி வருகின்றனர்.
அண்ணனால் அவமானப்பட்ட ஞானம் தன்னுடைய தம்பியின் ஆறுதலை பார்த்து கண்கலங்கி கதறி அழுது ரசிகர்களை அழ வைத்திருக்கிறார்.

குணசேகரனின் உண்மை குணம்
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற இருக்கிறது. இந்த சீரியலுக்கு நாளுக்கு நாள் ரசிகர்கள் அதிகரித்து வருகிறார்கள். ஒவ்வொரு வாரமும் இந்த சீரியல் டிஆர்பி யில் முன்னணியில் இருந்து வருகிறது. அதுவும் இந்த வாரத்தில் ஆதிரையின் திருமண விஷயத்தில் குணசேகரன் எடுத்திருக்கும் முடிவிற்கு யாரெல்லாம் எதிராக பேசினார்களோ அவர்களை எல்லாம் வார்த்தையாலே குணசேகரன் வசைப்பாடி தன்னுடைய சுயரூபத்தை வெளிக்காட்டிக் கொண்டிருக்கிறார்.

தைரியம் இல்லாத ஞாணம்
இதுவரைக்கும் தம்பிகள் தான் எனக்கு உலகம். தம்பிகளுக்காக தான் நான் வாழ்கிறேன் என்று நடித்துக் கொண்டிருந்த குணசேகரனின் சுயரூபம் தற்போது தம்பிகள் ஒவ்வொருவருக்காக தெரிய வந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே சக்தி குணசேகரனை எதிர்த்து பேசி அதற்கு பிறகு குணசேகரின் குணத்தை அறிந்து அவர் பட்டம்மாள் மற்றும் ஜனனியின் பக்கம் மாறி இருக்கிறார். பெண்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் ஒரே நபராக சக்தி மட்டும் தான் குணசேகரனின் வீட்டில் இருந்து வந்தார். ஞாணம் தான் அண்ணன் குணசேகரன் எடுக்கும் முடிவு தவறாக இருந்தாலும் அதை எதிர்த்துப் பேசும் தைரியம் இல்லாத ஒரு நபராக இருந்து வந்தார்.

கதறி அழுத ஞானம்
இந்த நிலையில் நேற்று எபிசோடில் ஞாணத்தை குணசேகரன் என்னுடைய சம்பாத்தியத்தில் சாப்பிட்டுக் கொண்டு இருக்கும் நபர் என்றும் தரக்குறைவான வார்த்தைகளை பேசியதால் ஞாணத்தால் எதிர்த்துப் பேச முடியாமல் ரூமுக்குள் உட்கார்ந்து அழுது கொண்டிருந்தார். பிறகு சக்தி சென்று சமாதானம் செய்ய அதே நேரத்தில் ரேணுகா குழந்தைகள் என மொத்த குடும்பமும் குணசேகரனை சமாதானம் செய்தனர். பிறகு அடுத்த நாள் காலையில் வீட்டில் அனைவரும் இருக்கும் போது சாப்பிடலாம் என ஞாணம் வரும் நிலையில் குணசேகரன் ஞாணத்தை மீண்டும் அவமானம் செய்கிறார். எனக்கு சரிசமமாக சாப்பிடுவதற்கு ஒரு அருகதை வேண்டும். இங்கே யாருக்கும் அது இல்லை என்று திட்ட, ஞாணம் மீண்டும் அழுது கொண்டு அந்த இடத்தை விட்டு எழுந்து போகிறார். அப்போது சக்தி அண்ணே என்று கூப்பிட, அதற்கு குணசேகரன் என்னப்பா என்று திரும்பி கேட்க, அதற்கு அண்ணே ஞாணம் அண்ணே உங்களைத்தான் கூப்பிட்டேன் என்று சொல்ல, குணசேகரன் அதிர்ச்சியாகி என்ன ரெண்டு பேரும் ஒன்று சேர்ந்துட்டீங்களா? என்று கேட்டிருந்தார். இந்த எபிசோடுகள் பார்க்கும்போது எங்களுக்கு அழுகை வந்துவிட்டது என்று அதிகமான ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

நம்பர் ஒன் இடம்
இந்த நிலையில் நேற்றைய எபிசோட்டுக்கான ப்ரோமோ வெளியானதும். அது அதிகமான ரசிகர்களால் பார்க்கப்பட்டு லைக் மட்டும் ஷேர் செய்யப்பட்டது. அது மட்டும் அல்லாமல் இந்த ப்ரோமோ அதிகமான ரசிகர்களால் பார்க்கப்பட்ட நிலையில் 1.8 மில்லியன் வியூஸ் சென்று இந்த பிரமோ ட்ரெண்டிங்கில் நம்பர் ஒன் இடத்தை பிடித்திருக்கிறது. இது இந்த சீரியலின் ரசிகர்களின் பாராட்டையும் பெற்றிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் பல வருடங்களுக்குப் பிறகு சீரியலை பார்த்து தாங்களும் அழுதோம் என்று பலர் கருத்து தெரிவித்து தங்களுடைய அனுபவங்களை பகிர்ந்து வருகிறார்கள்.
-
இந்த வார இறுதியில் ஓடிடியில் என்ன பார்க்கலாம்? ‘வாரண்ட்’ சீரிஸ் விமர்சனம்! விலங்கு கொடுத்த அதே தரமா? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications