பிக்பாஸில் நழுவிய வெற்றிக்காக, சர்வைவரில் கடினமாக உழைக்கும் விஜயலட்சுமி...குவியும் வாழ்த்துக்கள்
சென்னை : கடினமான உழைப்புக்கு வெற்றி நிச்சயம் கிடைக்கும் என்று மீண்டும் ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்ட விஜயலட்சுமிக்கு அவருடைய ரசிகர்கள் வாழ்த்துக்களை குவிக்கிறார்கள்.
சன் டிவி, விஜய் டிவி க்கு மாற்றாக ஜீ தமிழும் ரியாலிட்டி ஷோவில் காலடி எடுத்து வைத்து ரசிகர்களுக்கு செம என்டர்டைன்மென்ட் கொடுக்க காத்திருக்கிறது.
இதுவரைக்கும் எந்த ஷோவிலிலும் இல்லாத வகையில் திரிலிங்கும், எதிர்பார்ப்பும் அதிகமாக இருக்கும் சர்வைவரில் சாதிப்பாரா விஜயலட்சுமி என்று அவருடைய ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கின்றனர்.

வந்தாச்சு பிக் ப்ரோமோ
விஜய் டிவியில் ஒளிபரப்பாக இருக்கும் சர்வைவர் நிகழ்ச்சியில் இதுவரைக்கும் பல கண்டஸ்டாண்ட்கள் கலந்து கொள்வதாக செய்திகள் வெளிவந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை இதில் கலந்துகொள்ளும் கன்டஸ்டண்ட் களின் விவரங்களையும் அவர்களுடைய பெயர்களையும் வெளியிட்டிருக்கிறது. அதில் சென்னை 6 லட்சத்து இருபத்தி எட்டு திரைப்படத்தின் மூலம் வெள்ளித்திரையில் பிரபலமான விஜயலட்சுமி இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப் போகிறார் என்று நிரூபணமாகிவிட்டது. இதை பார்த்ததும் இவருடைய ரசிகர்கள் பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெற்றி பெறவில்லை என்றாலும் இந்த நிகழ்ச்சியில் விடாமுயற்சியோடு போராடி வெற்றி பெற்று விடுங்கள் என்று வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

காட்டுக்குள்ள மிரட்டுறாங்க
ரசிகர்களின் வாழ்த்து மழையில் நனைந்து கொண்டிருக்கும் விஜயலட்சுமி தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஐடியில் சர்வைவர் நிகழ்ச்சிக்கான லேட்டஸ்ட் ப்ரோமோவை வெளியீட்டு கலக்கலான கேப்ஷனும் கொடுத்திருக்கிறார். அதில் உயிர் பிழைத்தவரின் பெரிய விளம்பரம் இங்கே. அதிரடிக்கு கிங்குடன் அதன் ஒரு பகுதியாக இருப்பதில் மிகுந்த உற்சாகம் அடைகிறேன் என்றும் களத்தில் சந்திக்கலாம் செப்டம்பர் 12 முதல் தினமும் இரவு ஒன்பது முப்பது மணிக்கு இணைந்து இருங்கள் என்று தன்னுடைய ரசிகர்களுக்கு கூறியிருக்கிறார். அதுமட்டுமல்லாமல் 100% நகர பெண்ணாக இருப்பதால் 100 நாட்கள் காட்டில் வாழ்வது எனக்கு பெரும் சவாலாக இருக்கும் எனக்கு வாழ்த்துக்கள் தோழர்களே என்று கேட்டிருக்கிறார். ஏற்கனவே ஜீ தமிழில் ப்ரோமோவை பார்த்ததும் சந்தோஷமாக ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துகளைத் கொண்டிருக்கும் நிலையில் விஜயலட்சுமியின் லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் போஸ்ட் பார்த்ததும் அவருக்கு வாழ்த்துக்களை மழை போல பொழிகிறார்கள்.

பாக்கும்போதே புல்லரிக்குது
சும்மாவே சர்வைவர் நிகழ்ச்சி பிக் பாஸ் நிகழ்ச்சியை போன்று இருக்குமா என்று அனைவரும் ஆர்வத்துடன் காத்திருக்கும்போது காட்டுக்குள்ள இவர்கள் செய்யும் கடின செயல்களைப் பார்த்து பலர் அதிர்ச்சி அடைந்திருக்கின்றனர். இதில் கலந்து கொள்ளும் முழு கண்டஸ்டன்கள் விவரங்கள் வெளியிடப்பட்டு விட்டாதால் இந்த நிகழ்ச்சி எப்போது ஒளிபரப்பாகும் என்றுதான் ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். ஆனால் இந்த நிகழ்ச்சியை பிக்பாஸ் நிகழ்ச்சியை போன்று இல்லாமல் தனித்துவமாகவும் ரொம்பவே த்ரில்லிங்காக இருக்கும் என்றும் ப்ரோமோவை பார்க்கும்போதே தெரிகின்றது. அதுமட்டுமல்லாமல் பிக்பாஸ் நிகழ்ச்சியில் வீட்டுக்குள்ளேயே இவர்கள் செய்யும் செயல்களை விடவும் சர்வைவர் நிகழ்ச்சியில் காட்டுக்குள்ளே இவர்கள் செய்யும் வீரதீர செயல்களை பார்ப்பது கொஞ்சம் பயம் கலந்த திரில்லிங்காக தான் இருக்கிறது.

போராட்டம் புதுசுதான்
அதுவும் ப்ரோமோவின் முதல் கன்டஸ்டன்ட்டாக வரும் விஜயலட்சுமி புதைகுழியில் இருந்து தப்பித்து வெளியே வந்து திரும்பி பார்க்கும் போது அங்கே ஒரு முதலை இருப்பதை பார்த்து அவர் மட்டுமல்ல அவருடைய ரசிகர்களும் ஷாக் ஆகி விட்டனர். என்னது இந்த மாதிரி எல்லாம் டாஸ்க் இருக்கா என்று புலம்பத் தொடங்கி விட்டனர். அதுவும் "இன்று எனது இலக்கினை அடையும் வழிகளை தாண்டி போகிறேன்" என்ற கலக்கலான பாடல் வரிகளோடு இவர் புறப்படும் தில்லை பார்க்கும்போதே சிலருக்குப் புல்லரிக்கிறது. இது ப்ரோமோ மட்டும்தான் இப்படி எடுத்திருக்கிறார்களா அல்லது நிகழ்ச்சி முழுக்க இப்படியே திரில்லிங்வாகத்தான் இருக்குமா என்று ரசிகர்கள் ஆர்வம் பொங்க விஜயலட்சுமி இடம் கேட்டு வருகின்றனர். அவருக்கு கூலாக சீக்கிரத்தில் இதற்கு விடை கிடைத்துவிடும் என்று கூறியிருக்கிறார்.

கடின முயற்சியும் கைகோர்க்கும் வெற்றியும்
இவர் ஏற்கனவே விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒரு கன்டஸ்டன்ட் ஆக கலந்து கொண்டு இருந்தார். அந்த நேரத்தில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த நாயகி சீரியலிலும் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருந்தாலும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் வாய்ப்புக்காக அந்த சீரியலை விட்டு விலகி விட்டார். ஆனால் இவரால் அந்த பிக்பாஸ் வீட்டிற்குள் கடைசி வரைக்கும் இருந்து டைட்டிலை வின் பண்ண முடியவில்லை. ஆனாலும் வைல்ட் கார்டு போட்டியாளராக நுழைந்து இரண்டாவது ரன் ஆப்பாக முடித்தார். இவர் டைட்டிலை வின் செய்யவில்லையே என்று இவருடைய ரசிகர்கள் பீல் பண்ணி வந்தனர். தற்போது இந்த சர்வைவர் நிகழ்ச்சியில் இவர் வெற்றி அடைவதற்கு இவருடைய ரசிகர்கள் மட்டுமல்லாமல் அவருடைய உறவினர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதுபோலத்தான் இவருடைய சகோதரியான கனியும் இவருக்கு வாழ்த்து கூறி இன்ஸ்டாகிராமில் போஸ்ட் போட்டிருக்கிறார்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications