தாமரைக்காக ராஜூ கேட்ட ஒரு வார்த்தை...ஆடி போன பாவனி..ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தான் ஒரு ஹீரோ என்பதை ராஜூ நேற்றைய எபிசோடில் நிரூபித்துவிட்டார்.

இதுவரைக்கும் பிரச்சனைகளில் அதிகம் தலையிடாமல் இருந்த இவர் நியாயமாக பேசிய வார்த்தை ரசிகர்களை ஈர்த்து விட்டது.

கோபமான வார்த்தையை கோபத்தைக் காட்டாமல் இவர் பேசிய விதமும் பலரை கவர்ந்து இருக்கிறது.

ரசிகர்களின் எண்ணமும் அதுதான்

ரசிகர்களின் எண்ணமும் அதுதான்

என்னதான் டாஸ்க் என்றாலும் நேற்றைய எபிசோடில் பிக்பாஸ் போட்டியாளர்கள் ஒரு சிலர் செய்த செயல் ரசிகர்கள் பலரையும் முகம் சுழிக்க வைத்திருக்கிறது. ஆனால் இவர்கள் செய்த செயல் தவறு என்பதை சக போட்டியாளர்கள் விளக்கிய விதம் பலருக்கு பிடித்திருக்கிறது. ரசிகர்களின் மனநிலையை அப்படியே பிரதிபலித்து விட்டார் என்று ராஜுவுக்கு தொடர்ந்து ஆதரவு கிடைத்துக் கொண்டிருக்கிறது.

நியாயமான பேச்சு

நியாயமான பேச்சு

இதுவரைக்கும் கலகலப்புக்கு மட்டுமே பெயர் வாங்கிக் கொண்டிருந்த ராஜூ எந்த ஒரு பிரச்சனையிலும் தலையிடாமல் ஒதுங்கி இருக்கிறார் என்று ரசிகர்கள் பலர் கருத்துக்களை தெரிவித்துக் கொண்டிருந்தனர். இவர் ஜாலியாக இருந்தாலும் சில பிரச்சனைகளில் தீர்க்கமான முடிவு எடுக்கவில்லை என ஒரு சிலர் கூறிக் கொண்டிருந்த நேரத்தில் அதையெல்லாம் பொய்யென்று நேற்றைய எபிசோட்டில் இவர் நிரூபித்துவிட்டார். ஏற்கனவே இந்த சீசனில் இவருக்கு ரசிகர்கள் அதிகரித்திருக்கும் நிலையில் தற்போது இவருடைய ரசிகர்கள் ஆர்ப்பரித்து வருகின்றனர்.

தவறான கருத்து

தவறான கருத்து

தான் இருக்கும் இடத்தில் ஒரு பிரச்சனை அதுவும் நியாயமான பிரச்சனை என்றால் என்னுடைய கருத்து ஆணித்தரமாக அவர் இருக்கும் என்பதை தற்போது இவர் நிரூபித்து விட்டார் என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். நேற்றைய எபிசோட் ப்ரமோவை பார்த்ததும் பலரும் தாமரைச்செல்வியையும் அவருக்கு சப்போர்ட் செய்யும் போட்டியாளர்களையும் தான் திட்டி கலாய்த்துக் கொண்டிருந்தனர். ஒருதலைப்பட்சமாக போட்டியாளர்கள் சிலர் நடந்து கொள்கின்றனர், அதுவும் ராஜுக்கு தாமரையை பிடிக்கும் என்பதற்காக இப்படி செய்கிறார் என்று கூறிக் கொண்டிருந்தனர்.

வாழ்த்தும் ரசிகர்கள்

வாழ்த்தும் ரசிகர்கள்

ப்ரமோவில் காட்டியது வேறு நிஜத்தில் எபிசோட்டில் இருந்தது வேறு என்பதை எபிசோடை பார்த்ததும் ரசிகர்கள் புரிந்து கொண்டனர். அதுவும் மாஸாக என்ட்ரி கொடுத்த ராஜு தனக்கே உரிய அந்த ஒரு கேரக்டரில் பாவனியின் கேள்விக்கு, காயினை எப்போதும் உடம்பிலே வைத்துக்கொண்டிருந்தால் நாங்க எப்படி எடுப்பது என்ற அசட்டுத்தனமான கேள்விக்கு, அப்போ..நான் நீ உடை மாற்றும் போது வந்து எடுக்கலாமா!!?? என்று கேட்டுவிட்டார். இதைப் பார்த்ததும் பாவனி மட்டும் அல்லாமல் ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்திருக்கின்றனர். ஆனாலும் தங்களுடைய மனதில் இருப்பதை அப்படியே கேட்டு விட்டார் என்று ராஜூவுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+