கயல் சீரியலை முந்திய எதிர்நீச்சல் சீரியல்.. இதுதான் காரணமா..? ரசிகர்கள் கேட்கும் அந்த ஒரு கேள்வி!?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியல் தான் டிஆர்பியில் முதல் இடத்தில் இருந்து வருகிறது.

சமீபத்தில் ஒளிபரப்பாக தொடங்கிய எதிர்நீச்சல் சீரியல் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தற்போது டிஆர்பியில் முன்னேறிக் கொண்டிருக்கிறது.

கயல் சீரியலில் பிரமோவில் ரசிகர்கள் அதிகமாக எதிர்நீச்சல் சீரியலில் ப்ரோமோ எப்போது என்று தான் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

குடும்ப சுமையை சுமப்பவள்

குடும்ப சுமையை சுமப்பவள்

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இரவு நேர சீரியல் ரசிகர்களை அதிகமாக கவர்ந்து விடும். அதனாலயே இந்த சீரியல்கள் வேற சேனல்களில் சீரியல்களை விட அதிகமான டிஆர்பியில் பிடித்து விடுகிறது. இந்த வகையில் சீரியல் ரசிகர்களை அதிக மாக கவர்ந்திருக்கிறது. இந்த சீரியலில் கயல் ஒரு அடிதட்டு குடும்பத்தை சேர்ந்தவராக இருந்தாலும் தன்னுடைய குடும்பத்தில் கஷ்டங்களுக்காக மொத்த சுமையையும் தன்னுடைய தோளிலே சுமந்து வருகிறார். அதோடு அவருடைய சொந்த பெரியப்பாவே தன்னுடைய தம்பியின் குடும்பத்தினை மட்டம் தட்ட வேண்டும் என்று பல்வேறு முயற்சிகளை எடுத்துக் கொண்டிருக்க அவரிடமிருந்து தன்னுடைய குடும்பத்தையும் கர்த்தர் சுய கௌரவத்தையும் கயல் ஒவ்வொருவரையும் காப்பாற்றி வருகிறார்.

கிட்னி எல்லாம் விக்கிறாங்க

கிட்னி எல்லாம் விக்கிறாங்க

தன்னுடைய தங்கைக்காக தன்னுடைய கிட்னியையும் விற்கத் துணிந்து விட்ட கயலுக்கு ஒரு பக்கம் ஆதரவு குவிந்து வந்தாலும் இன்னொரு பக்கம் இதை வைத்து நெட்டிசன்கள் பல்வேறு விதமாக கலாய்த்து வருகின்றனர். இப்போது கிட்னி சட்டப்படி விற்பது தண்டனையாகும். ஆனால் இப்படி ஒரு முன்னணி சீரியலில் இந்த மாதிரி ஒரு அபத்தமான சீன்களை வைப்பது நியாயமா? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பிக் கொண்டிருக்கின்றனர். என்ன தான் இதை நெட்டிசன்கள் கலாய்த்து கொண்டிருந்தாலும் தியாகத்தின் சுடராக கயல் பார்க்கப்படுவதால் குடும்பத்து ரசிகர்கள் இந்த சீரியலை அதிகமாக பாராட்டி வருகின்றனர்.

எதிர் நீச்சலுக்கு அதிகரிக்கும் ஆதரவு

எதிர் நீச்சலுக்கு அதிகரிக்கும் ஆதரவு

கயல் சீரியலுக்கு நாளுக்கு நாள் ரசிகர்கள் பட்டாளம் அதிகரிக்க இந்த சீரியல் தொடர்ந்து கிராமப்புறம் மற்றும் நகரப்புறங்களில் டிஆர்பி யில் முதல் இடத்தில் இருந்து வருகிறது. இந்த நிலையில் ஒரு சில மாதங்களுக்கு முன்பு ஒளிபரப்பாக தொடங்கிய எதிர்நீச்சல் சீரியலும் தற்போது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்று வருகிறது. இந்த சீரியலில் பெண்களின் அடிமைத்தனத்தை உடைத்து எறிந்து எப்படி அவர்கள் முன்னேறி மேலே வருகிறார்கள் என்பது பற்றியதாக இருந்து வருவதால் இந்த சீரியலுக்கும் அனைத்து தரப்பட்ட ரசிகர்களும் தொடர்ந்து ஆதரவு கொடுக்க தொடங்கி இருக்கின்றனர்.

ப்ரோமோக்காக அடம் பிடிக்கும் ரசிகர்கள்

ப்ரோமோக்காக அடம் பிடிக்கும் ரசிகர்கள்

இந்த நிலையில் தற்போது கயல் சீரியலில் ப்ரோமோவில் கூட அதிகமான ரசிகர்கள் எதிர்நீச்சல் சீரியலில் ப்ரோமோ எப்போது வரும் என்றும், எதிர்நீச்சல் சீரியலில் அப்பத்தா கேரக்டர் பிடித்திருக்கிறது என்றும், ஜனனியின் கேரக்டரையும் பாராட்டி, அதே நேரத்தில் குணசேகரனை திட்டியும் கமெண்ட் செய்து வருகிறார்கள். இதை பார்க்கும் ரசிகர்கள் போகிற போக்கை பார்த்தால் இனி விரைவில் எதிர்நீச்சல் சீரியல் கயல் சீரியலை முந்திவிடும் போல என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+