கர்ப்பமா? விவாகரத்தா? நஸ்ரியா போட்ட போஸ்ட் பார்த்து பதறிய ரசிகர்கள்.. குவியும் அட்வைஸ்
சென்னை: நடிகை நஸ்ரியா நசீம் ஃபகத் நேற்று தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் ஒரு நீண்ட அறிக்கை வெளியிட்டிருந்தார். அதை பார்த்ததும் ரசிகர்கள் இவர் விவாகரத்து அறிக்கை வெளியிட்டிருக்கிறாரோ என்று பதறி போயிருக்கிறார்கள். பிறகு தான் எதற்காக சோசியல் மீடியாவில் இல்லை என்பது பற்றி நஸ்ரியா கூறியிருப்பதை பார்த்து மனம் ஆறுதல் அடைந்தார்களாம். அதோடு நஸ்ரியா வெளியிட்ட பதிவுக்கு அதிகமான பிரபலங்களும் தங்களுடைய வருத்தங்களை தெரிவித்து இருக்கிறார்கள்.
நேற்று மாலை சோசியல் மீடியா பக்கங்களில் பல செய்திகள் திடீர் வைரல் ஆனது. விஜே பிரியங்காவின் திருமண புகைப்படங்கள் பரபரப்பு ஏற்படுத்தியது. அடுத்த சில நிமிடங்களில் நடிகை நஸ்ரியா வெளியிட்ட பதிவு பலருக்கும் அதிர்ச்சியும் ஆச்சரியத்தையும் கொடுத்திருந்தது. சமீப காலமாகவே பிரபலங்கள் பலர் திடீர் விவாகரத்து செய்தியை மாலை நேரங்களில் அறிவித்து வரும் நிலையில் அதே போல நஸ்ரியாவும் ஏதோ ஒரு அறிக்கையை வெளியிட்டு இருக்கிறாரே அதனால் விவாகரத்தாக இருக்குமோ என்று சிலர் நினைத்திருக்கிறார்கள்

நஸ்ரியாவின் திடீர் பதிவு
இன்னும் ஒரு சிலர் நஸ்ரியா கர்ப்பமாக இருக்கிறாரா? அது குறித்து அறிவிப்பு வந்திருக்கிறதா என்று அந்த அறிக்கையை பார்த்தார்களாம் ஆனால் கடைசியில் நஸ்ரியா வேறொரு விஷயத்தை சொல்லி இருக்கிறார். அதாவது அந்த அறிக்கையில் தன்னுடைய நண்பர்கள் மற்றும் உடன் பணி புரிபவர்களால் தொடர்பு கொள்ள முடியாத நிலையில் தான் இருந்ததற்கு மன்னிப்பு கேட்டிருக்கிறார்.
பதிவு வைரல்
பிரபல நடிகையாக நஸ்ரியா இருந்தாலும் அடிக்கடி போட்டோ ஷூட் மற்றும் ஜாலியாக ரீல்ஸ் வீடியோக்களை சோசியல் மீடியா பக்கங்களில் பகிர்ந்து வருகிறார். சோசியல் மீடியா பக்கங்களில் ஆக்டிவாக இருக்கும் நஸ்ரியா சில மாதங்களை எந்த போஸ்ட்டும் போடவில்லை. அது குறித்து அவர் வெளியிட்ட பதிவு வைரல் ஆகி வருகிறது.
காரணம் இதுதான்
அதின் நான் இத்தனை நாள் விடுபட்டு போனது ஏன் என தெரிவிக்க விரும்புகிறேன். நான் இந்த சமுதாயத்தில் மிகவும் ஆக்டிவான உறுப்பினராக இருந்திருக்கிறேன். ஆனால் கடந்த சில மாதங்களாக என் உணர்வு ரீதியான பிரச்சனைகள் மற்றும் தனிப்பட்ட சவால்களுடன் போராட்டம் கடுமையாக இருந்ததால் என்னால் பொது வெளியில் இருக்க முடியவில்லை.

தவறவிட்டவை
என்னுடைய முப்பதாவது பிறந்த நாள், புத்தாண்டு, என் சூட்சமதர்ஷினி திரைப்படத்தில் வெற்றி மற்றும் பல முக்கிய நிகழ்வுகளை தவறவிட்டு விட்டேன். ஏன் நான் விடுபட்டேன் உங்கள் கால்கள் மெசேஜ்களுக்கு பதிலளிக்காமல் இருந்தேன் என்பதை விளக்குவதற்காக என் நண்பர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். நான் ஏற்படுத்திய கவலைகளுக்காகவும் அசவுகரியத்திற்காகவும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.
மன்னிப்பு
என்னை பணி நிமித்தமாக தொடர்பு கொள்ள முயன்ற பல பணியாளர்களுக்கும் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். பாசிட்டிவாக நான் நேற்று சிறந்த நடிகருக்கான கேரளாத்திறை விமர்சகர்கள் விருதைப் பெற்றேன் என்பதை கூறுவது சிறப்பாக உணர்கிறேன். எனக்கு கிடைத்த அங்கீகாரத்திற்கு நன்றி. அனைத்து நாமினிகள் மற்றும் வெற்றியாளர்களுக்கும் நன்றி. இது கடுமையான பயணம். ஆனால் நான் ஒவ்வொரு நாளும் நலமடைந்து வருகிறேன் என்பதை உங்களுக்கு தெரிவிக்க விரும்புகிறேன்.

நஸ்ரியா வெளியிட்ட அறிக்கை
இந்த நேரத்தில் என்னை புரிந்து கொண்டதற்கும் ஆதரவு தெரிவித்தவர்களுக்கும் நன்றி நான் முழுமையாக திரும்பி வர இன்னும் சில நாட்கள் ஆகலாம். ஆனால் நான் சத்தியம் செய்கிறேன் நான் குணமாவதற்கான பாதையில் இருக்கிறேன் என்று கூறியிருக்கிறார். நான் திடீரென மறைந்ததற்கான என் நண்பர்கள் மற்றும் ரசிகர்களுக்கு விளக்கம் அளிப்பது என் கடமை என நினைத்ததால் இதை எழுதியுள்ளேன் என்று நஸ்ரியா அந்த பதிவில் தெரிவித்திருக்கிறார்.
ரசிகர்களின் அட்வைஸ்
இந்த அறிக்கை ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆனாலும் நஸ்ரியா மீண்டும் சமூக வலைத்தளங்களிலும் திரையிலும், விழாக்களிலும் தோன்ற வேண்டும் என்று ரசிகர்கள் கமெண்ட் கொடுத்து இருக்கிறார்கள். அதே நேரத்தில் இதுபோன்ற அறிக்கையை இனி வெளியிட வேண்டாம் நீங்கள் முழுமையாக பழைய நிலைக்கு திரும்ப வேண்டும் என்பதும் பலருடைய அட்வைஸ் ஆக இருக்கிறது.
மனசோர்வு
ரசிகர்கள் மட்டுமல்லாமல் தமிழ் மலையாள நடிகர்கள் நடிகைகள் பலரும் நஸ்ரியாவிற்கு அட்வைஸ் கொடுத்திருக்கிறார்கள். திரைப்படங்களிலு, பேட்டிகளிலும் எப்போதும் சிரித்த முகமாக கலகலவென பேசும் நஸ்ரியா தான் மனசோர்வுடன் சில மாதங்களாக இருப்பதாக தெரிவித்திருக்கும் நிலையில் அவருடைய குடும்பத்தில் ஏதேனும் பிரச்சனையா என்று சிலர் சந்தேகங்களை கிளப்பியிருக்கிறார்கள்.
கணவர் பெயர் இருக்கு
நஸ்ரியா அந்த பதிவில் தன்னுடைய கணவர் பகத் பெயரையும் சேர்த்து தான் குறிப்பிட்டிருக்கிறார். அதனால் அவருடைய குடும்பத்தில் பிரச்சனை இல்லை என்று நஸ்ரியா மற்றும் பகத் ரசிகர்கள் விளக்கம் கொடுத்து வருகிறார்கள். சமீப காலமாகவே மக்கள் மத்தியில் மன அழுத்தம் அதிகரித்து வரும் நிலையில் நஸ்ரியாவின் இந்த பதிவு இணையத்தில் அதிகமாக பேசப்படுகிறது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications