"மறைந்த அம்மாவே மீண்டும் வரப்போகிறார்”அப்பாவாகப் போகும் அஜய் கிருஷ்ணா..குவியும் இரண்டு வாழ்த்துக்கள்
சென்னை: சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான அஜய் கிருஷ்ணா விரைவில் அப்பாவாக போகும் மகிழ்ச்சியை ரசிகர்களோடு பகிர்ந்து இருக்கிறார்.
சமீபத்தில் தான் அஜய் கிருஷ்ணாவிற்கு ஜெசி என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது.
அஜய் கிருஷ்ணாவின் அம்மா ஏற்கனவே மறைந்து விட்டார் அவர் மீண்டும் வந்து பிறக்கப் போகிறார் என்று ரசிகர்கள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

ஏழ்மையான குடும்பம்
விஜய் டிவி பிரபலமான அஜய் கிருஷ்ணா சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலமாக பலருக்கும் பரிச்சயம் ஆனவர்தான். இவர் அந்த சீசனில் அவ்வளவு பெரிய அளவில் பிரபலமாகவில்லை என்றாலும் இவர் ஜூனியர்களுக்காக சப்போர்ட் பண்ணி கொண்டிருந்த சீசனில் அதிக அளவில் பிரபலமாகி விட்டார். ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து வளர்ந்த அஜய் கிருஷ்ணா மூன்று அக்காக்களுக்கு ஒரே தம்பியாக இருந்திருக்கிறார். இவருடைய அம்மாவும் இவர் சிறுவயதில் இருக்கும் போதே இறந்து விட்டாராம். அக்காவின் அரவணைப்பில் தான் இவர் வளர்ந்து வந்துள்ளார். அந்த நேரத்தில் திடீரென இவருடைய அப்பாவிற்கு விபத்து ஏற்பட்டதால் அவரும் வீட்டிலே முடங்கி விட்டார்களாம்.

வாழ்த்து முதல் திருமண வரை
இவருடைய அக்காக்கள் தான் இவரை படிக்க வைத்து, இவருக்குள் இருக்கும் பாடல் திறமையை வெளிக்கொண்டு வருவதற்காக பல முயற்சிகளை எடுத்து இருக்கின்றனர் .குடும்பத்தின் மீது எப்போதுமே பாசமாகவும் அன்பாகவும் இருக்கும் அஜய் கிருஷ்ணா தான் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் குடும்பத்தை பற்றி கண்ணீர் மல்க பேசி இருக்கிறார். இந்த நிலையில் தான் இவருடைய வாழ்க்கைக்கு மகிழ்ச்சியை கொடுக்க வந்த ஜெஸ்ஸியை இவர் இன்ஸ்டாகிராம் மூலமாக பார்த்திருக்கிறாராம். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவர் தன்னுடைய பாடல் ஒன்றை பதிவிட அதற்கு வாழ்த்து கூறிய ஜெஸி ரிப்ளை செய்திருக்கிறார். ஆரம்பத்தில் இவர்கள் இருவரும் நட்பாக பழகி பின்பு காதலித்து திருமணம் செய்து இருக்கின்றனர்.

விரைவில் அம்மா அப்பா
அஜய் கிருஷ்ணாவின் அக்காக்கள் எல்லோருக்கும் திருமணம் முடிந்து விட்டதாம். அதற்குப் பிறகு அஜய் கிருஷ்ணாவிற்கு அம்மா ஸ்தானத்தில் இருந்து ஜெஸி இருந்து வருவதாகவும் அவர் மீது இருக்கும் காதலை பலமுறை சமூக வலைத்தளத்தில் தெரிவித்து இருக்கிறார். இவர்களுடைய காதல் வாழ்க்கைக்கு சாட்சியாக தற்போது இவர்கள் இருவரும் அம்மா அப்பா ஆகப் போகும் மகிழ்ச்சியான விஷயத்தை தங்களுடைய இன்ஸ்டாகிராம் பக்கங்களில் ரசிகர்களோடு பகிர்ந்து இருக்கின்றனர்.

இரண்டு வாழ்த்து
அஜய் கிருஷ்ணா தன்னுடைய அம்மாவை நினைத்து பல இடங்களில் கண் கலங்கி இருப்பது அனைவருக்கும் தெரிந்ததுதான். அதனாலே இந்த மகிழ்ச்சியான செய்தியை இவர்கள் அறிவித்ததும் ரசிகர்கள் மீண்டும் உங்கள் அம்மா உங்களிடம் வரப் போகிறார் என்று வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். ரசிகர்கள் மட்டுமல்லாமல் சின்னத்திரை பிரபலங்களும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் இன்று அஜய் கிருஷ்ணாவின் பிறந்தநாளாம். அதனால் அவருடைய பிறந்த நாளில் அவருக்கு டபுள் வாழ்த்து கிடைத்து வருகிறது.
-
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications