பேச்சு வார்த்தைக்கு பின்னர்தான் சின்னத்திரை ஷூட்டிங்!
சென்னை: அரசு அனுமதி அளித்து இருந்தாலும், சின்னத்திரை சீரியல் தயாரிப்பாளர்களுடன் பேச்சு வார்த்தை நடத்திய பிறகே ஷூட்டிங் தொடங்குவோம் என்று, நடிகை குஷ்பூ தெரிவித்துள்ளார்.
ஆர்.கே.செல்வமணி, மனோபாலா, சுஜாதா விஜயகுமார் உள்ளிட்டவர்கள் இன்று தமிழக அரசுக்கு கோரிக்கை ஒன்றை வைத்துவிட்டு, செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய செல்வமணி, சின்னத்திரை சீரியல் ஷூட்டிங் நடத்த 20 பேர் போதாது என்று கூறினார்.
அதிகம் பேரை அனுமதித்தால் மட்டுமே, ஷூட்டிங்கை நடத்த முடியும். இதை தமிழக அரசுக்கு கோரிக்கையாக வைத்துள்ளோம் என்று சொன்னார். கடந்த வாரம் தமிழக அரசு சின்னத்திரை சீரியல்கள் ஷூட்டிங் நடத்த அனுமதி வழங்கியது.

தமிழக அரசின் கெடுபிடிகள்
சின்னத்திரை சீரியல்கள் படப்பிடிப்பு தளம் முழுக்க கிருமிநாசினி தெளிக்கப்பட்டதாக இருக்க வேண்டும். பயன்படுத்தப்படும் கேமிரா உள்ளிட்டவைகளையும் கிருமிநாசினியால் நன்கு சுத்தப்படுத்தி இருக்க வேண்டும். வெளியூரில் மட்டுமே திறந்த வெளியில் படப்பிடிப்பு நடத்தலாம் என்று விதிமுறைகளை விதித்தது. அதோடு, கேமிராவுக்கு பின் இருப்பவர்கள் கட்டாயம் மாஸ்க் அணிந்து இருக்க வேண்டும். காட்சி இல்லாதபோது நடிகர்களும் மாஸ்க் அணிந்து இருக்க வேண்டும்...என்றும் தெரிவித்து இருந்தது.

20 நபர்கள் மட்டுமே
படப்பிடிப்பு 20 பேர்களை மட்டுமே வைத்து நடத்தப்பட்ட வேண்டும் என்றும் அதில் முக்கிய விதிமுறையாக இருந்தது. இதற்குத்தான் இன்று தமிழக அரசை சந்தித்து குறைந்த் பட்சம் 50 நபர்களையாவது அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். பார்க்கப்போனால் அதிக செலவில் எடுக்கப்படும் சீரியல்களுக்கு 100 பேராவது தேவைப்படுவர் என்றும் கூறினார்.

கட்டுப்பாடுகளுடன் அனுமதி
தமிழக அரசு கட்டுப்பாடுகளுடன் தேவையான ஆட்களை வைத்து சின்னத்திரை சீரியல்களை ஷூட்டிங் செய்ய அனுமதி தர வேண்டும். ஷூட்டிங் நடத்துவதன் மூலம் கொரோனா பரவல் இருக்காது என்று ஒவ்வொருவரும் உறுதி அளிக்கிறோம் என்றும் கூறி உள்ளனர்.

முடிவு குஷ்பூ
அரசு அனுமதி அழைத்தவுடன் யார் வேண்டுமானாலும் முதலில் ஷூட்டிங் தொடங்கிவிடலாம் என்பது இல்லை. சின்னத்திரை சீரியல்கள் தயாரிப்பாளர்கள் பேசி முடிவு எடுத்த பின்னர்தான், ஒட்டு மொத்தமாக சின்னத்திரை சீரியல்கள் ஷூட்டிங் துவங்கும் என்றும் கூறி இருக்கார் நடிகை குஷ்பூ.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications