நிலத்தில் விதைக்கப்பட்ட விதை நான்! மிதித்தாலும் முளைப்பேன்! கெத்தாக இசைவாணி போஸ்ட்,குவியும் அட்வைஸ்
சென்னை: கானா பாடகி இசைவாணி பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பெரிய அளவில் பிரபலமானார். அந்த நிகழ்ச்சிக்கு பிறகு அவர் அதிகமான சர்ச்சைகளிலும் சிக்கி இருந்தார். அவர் பாடிய பாடல் அவருக்கே வினையாக வந்தது. சில மாதங்களாக எந்த பாடல்களும் பாடாமல் இருந்த நிலையில் இப்போது மீண்டும் பாடத் தொடங்கி இருக்கிறார். அது குறித்த பதிவுகளை இசைவாணி தன்னுடைய சோசியல் மீடியா பக்கங்களில் பகிர்ந்து இருக்கிறார். அது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
கானா பாடகி இசைவாணிக்கு அதிகமான ரசிகர்கள் இருக்கின்றனர். அதே நேரத்தில் அவருக்கு அதிகமான விமர்சனங்களும் வந்து கொண்டிருக்கிறது. சில வருடங்களுக்கு முன்பு அவர் ஐயப்பன் கோவில் பற்றி பாடிய வரிகள் பல வருடம் கழித்து அவருக்கு எதிர்ப்பாக மாறியது. கோவிலுக்குள் பெண்கள் வரக்கூடாதா? என்று இசைவாணி பாடிய பாடலை பலரும் எதிர்த்து வந்தனர்.

இசைவாணி பாடல்கள்
இசை வாணி மீது பலர் புகார் கொடுத்து இருந்தனர். அதற்கு முன்பு இசைவாணி பல கெத்தான பாடல்கள் பாடி இருந்தார். அதுபோல ரஞ்சித் நடத்தும் நீலம் பவுண்டேஷன் சார்பாக மார்கழி மாதத்தில் நடக்கும் நிகழ்ச்சிகளிலும் பெண் முன்னேற்றம், ஜாதிய அடக்குமுறைகளுக்கு எதிராக இசைவாணி பாடல்கள் பாடி இருக்கிறார். இசைவாணி பாடல்கள் சோசியல் மீடியாவில் அடிக்கடி டிரெண்ட் ஆகி கொண்டு இருந்தாலும் அவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சி நல்ல ஒரு அடையாளத்தை கொடுத்தது.

இசைவாணி போஸ்ட்
ஆனாலும் அந்த நிகழ்ச்சியில் இசைவாணியால் அதிக நாட்கள் தாக்குபிடிக்கவில்லை. சில வாரங்களில் நிகழ்ச்சியில் இருந்து எலிமினேஷன் ஆன இசைவாணிக்கு மீண்டும் வாய்ப்பு கிடைத்தது. அதற்குப் பிறகு சில மாதங்கள் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வந்தார். ஆனாலும் அந்த நிகழ்ச்சிக்கு பிறகு அவர் பற்றிய சர்ச்சைகள் அதிகமாக இருந்ததால் சில மாதங்களாக எந்த போஸ்டும் போடாமல் இருந்தார். இந்த நிலையில் நேற்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய லேட்டஸ்ட் போட்டோ சூட் எடுத்து ஒரு பதிவு வெளியிட்டிருக்கிறார்.

ரசிகர்களின் அட்வைஸ்
அதில்" நான் நிலத்தில் விதைக்கப்பட்ட விதை. என்னை மிதித்து ஏறி போனாலும் நான் முளைத்து வருவேன்" என்று கேப்ஷன் கொடுத்திருக்கிறார். இசைவாணி சமீபத்தில் கொஞ்ச நாட்களாக எந்த போஸ்டும் போடவில்லை. பாடலும் பாடவில்லை என்று அவருடைய ரசிகர்கள் அவரிடம் கேள்வி கேட்டு இருக்கிறார்கள். நீங்கள் மீண்டும் கம்பேக் கொடுக்க வேண்டும், பழையபடி கெத்தான பாடல்கள் பாட வேண்டும் என்றும் பலர் அட்வைஸ் கொடுத்திருக்கிறார்கள். அதோடு தற்போது அவர் வெளியிட்ட பதிவை பலரும் பாராட்டி ஷேர் செய்து வருகிறார்கள்.

-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications