அப்படில்லாம் சொல்லாதீங்க.. நான் நல்லாதான் இருக்கேன்.. பதறிப் போன "சுந்தரி"
சென்னை: நான் இந்த மாதிரி ஒரு நிலைமைக்கு போகவில்லை தயவுசெய்து அப்படி சொல்லாதீங்க என்று ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார் கேப்ரில்லா செல்லஸ்.
ஒருவர் நல்லா இருக்கும் நேரத்தில் அவரைப் பற்றி வதந்திகள் பரவுவது கேட்டிருப்போம். ஆனால் இந்த மாதிரியெல்லாம் சிலர் கிளப்பி விடுவார்களா என்று அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது.
நல்லா இருக்கிறவங்க உயிருக்கு போராடுகிறார் என சிலர் விபரீதமாக வீடியோ வெளியிட்டு அதிர்ச்சி ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, தன்னோட உண்மை நிலையை ரசிகர்களுக்கு தெரியப்படுத்திய சன்டீவி சுந்தரி சீரியல் நாயகி கேப்ரில்லா செல்லஸ்.

சன் டிவி சுந்தரி
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சுந்தரி சீரியலில் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருக்கும் கேப்ரில்லா செல்லஸ் பலருக்கும் பரிச்சயமான நபர்தான் .இவர் இந்த சீரியலில் மட்டுமல்லாமல் இதற்கு முன்பு விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப் போவது யாரு நிகழ்ச்சி மூலமாகவே சின்னத்திரையில் காலடி எடுத்து வைத்திருந்தாலும் தற்போது திரைப்படங்களில் கால்ஊன்ற ஆரம்பித்திருக்கிறார் .

டிக்டாக் பிரபலம்
இவர் இதற்கு முன்பு டிக் டாக்கில் பட்டிதொட்டி எல்லாம் ரொம்பவே பிரபலமாகிவிட்டார் .கவிதை வாசிப்பதிலும் சரி தன்னுடைய திறமையை அழகாக பார்ப்பவர்கள் நன்றாக புரியும்படி தன்னுடைய தெளிவான தமிழ் உச்சரிப்பினாள் அனைவரையும் வசீகரித்த அவர் தற்போது சீரியலில் படு பிசியாக இருந்து வருகிறார். இவர் சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் தான் உலகையே ஆட்டி கொண்டிருக்கும் கொரோனா இவரையும் ஒரு பாடு படுத்தி விட்டது .

கொரோனா பாசிட்டிவ்
இவருக்கு கொரானா பாசிட்டிவ் என வந்ததும் வீட்டில் தனிமைப் படுத்திக் கொண்டு சமூக வலைத்தளங்களில் பிஸியாக இருந்து வருகிறார் .அதுவும் பாசிட்டிவ் என வந்த முதல் நாளே தன்னுடைய இன்ஸ்டாகிராமில் ரசிகர்களுக்கு அன்பான வேண்டுகோளையும் வைத்திருந்தார் .யாரும் எளிதாக ஈசியாக நினைத்துவிடாதீர்கள் வீட்டிலேயே இருங்கள் பாதுகாப்பாக இருங்கள் என அறிவுரை கூறியிருந்தார் .

பீதி கிளப்பிய வீடியோ
ஆனால் இவர் இந்த மாதிரி பேசி இருப்பதை பார்த்ததும் ஒரு யூடியூப் சேனல் இவரை உயிருக்கு ஆபத்தான நிலையில் ரொம்ப சீரியஸாக இருக்கிறார் என போஸ்ட் போட்டு விட்டனர். அதனை பார்த்து அவருடைய உறவினர்கள் ரசிகர்கள் அனைவருமே பதறி விட்டார்களாம் .அதற்கு விளக்கம் கொடுத்து தற்போது அவர் இன்ஸ்டாகிராமில் ஒரு போஸ்ட் போட்டிருந்தார். அதுவும் போதாது என்று ஒரு வீடியோவும் போட்டு தெளிவுபடுத்தி இருக்கிறார்.

தப்பா பேசாதீங்கப்பா
ஒருவரைப் பற்றி வதந்தி பரப்புவது ஒன்று புதிதான அல்ல ஆனால் இந்த அளவிருக்கு யாரும் பரப்பக்கூடாது நன்றாகத்தான் நான் இருக்கிறேன் எனக்கு கொரோனா பாசிட்டிவ் வந்து இருக்கிறது என்பது உண்மைதான் .ஆனால் பாசிட்டிவ் வந்ததும் நான் வீட்டிலேயே என்னை தனிமை படுத்தி கொண்டு பாதுகாப்பாக இருக்கிறேன். முதல் 14 நாட்களுக்கு தான் ரொம்பவும் கஷ்டமாக இருந்தது .தற்போது நான் நலமாகத்தான் இருக்கிறேன்.

பார்த்துப் போடுங்க
ஆனால் அதை நினைத்து யாரும் கவலைப்பட வேண்டாம் .அதுவும் இல்லாமல் தப்பான விஷயங்களை பரப்பாதீர்கள். எதையும் போடுவதற்கு முன்பு கொஞ்சம் யோசிச்சி போடுங்க .பார்க்கும் உறவினர்கள் எல்லோரும் கஷ்டப்பட்டு பயப்படுகிறார்கள் என்று இவரைப் பற்றி தப்பாக கமெண்ட் போட்டு இருப்பவர்களுக்கும் ரசிகர்களுக்கும் வேண்டுகோள் வைத்திருக்கிறார்.

சீக்கிரம் மீண்டு வாங்க
தற்போது இவர் இந்த மாதிரி பேசி ஒரு வீடியோவை வெளியிட்டதும் இவருடைய ரசிகர்கள் தொடர்ந்து இவருக்கு சீக்கிரத்தில் குணமாகி மீண்டும் வந்து விடுவீர்கள் என ஆசீர்வாதங்களையும் வாழ்த்துக்களையும் கூறி வருகின்றனர் .ஆனாலும் தன்னைப்பற்றி தவறாக போட்ட கமெண்ட்டுக்கு இவ்வளவு தெளிவாக விளக்கத்தை கொடுத்து இந்த பிரச்சனைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்.
-
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு












Click it and Unblock the Notifications