Gandhi Kannadi Box Office: பல எதிர்ப்பு.. அதையும் மீறி முதல் நாள் 'காந்தி கண்ணாடி’ செய்த வசூல் விபரம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பான 'கலக்கப்போவது யாரு' நிகழ்ச்சி மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் கே.பி.ஒய். பாலா. தன்னுடைய டைமிங் காமெடியால் சிரிக்க வைத்து, விரைவில் ரசிகர்களின் மனம் கவர்ந்த நகைச்சுவை நடிகராக மாறினார். கலக்கப்போவது யாரு மட்டுமில்லாமல், விஜய் டிவியின் பல நிகழ்ச்சிகளிலும், இசை நிகழ்ச்சிகளிலும் இவரது பங்களிப்பு இருக்கும். உள்ளே வந்த கொஞ்ச நேரத்திலேயே ஒரு காமெடி செய்து, ரசிகர்களைச் சிரிக்க வைத்து விடுவார்.

KPY Bala vijay tv

யார் இந்த கே.பி.ஒய். பாலா

சினிமா உலகில் பலரும் பணத்தை நோக்கி ஓடிக் கொண்டிருக்கும் நிலையில், தான் சம்பாதிக்கும் பணத்தில் ஒரு பகுதியை மற்றவர்களுக்கு உதவுவதிலேயே செலவு செய்கிறார் பாலா. "என்னுடைய சொந்த செலவுக்கு மாதம் ₹25 இருந்தால் போதும், மற்ற பணத்தை எல்லாம் கஷ்டப்படும் மக்களுக்குக் கொடுத்து விடுகிறேன்" என்று ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.

ஆம்புலன்ஸ் வாங்கி கொடுப்பது, ஆட்டோ வாங்கி கொடுப்பது, மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனங்கள் வாங்கிக் கொடுப்பது, மருத்துவ செலவுக்குப் பணமில்லாமல் கஷ்டப்படுபவர்களுக்கு நேரடியாகப் பணம் கொடுப்பது எனப் பல வழிகளில் பலருக்கும் உதவி வருகிறார் பாலா. இவருடைய இந்த சேவை உள்ளம், இவரை ரசிகர்கள் மத்தியில் மேலும் உயர்த்தியுள்ளது.

காந்தி கண்ணாடி கதை

கே.பி.ஒய். பாலா இதற்கு முன்னர் பல திரைப்படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும், 'காந்தி கண்ணாடி' திரைப்படம் மூலம் கதையின் நாயகனாக மாறியுள்ளார். இந்த படத்தில் இயக்குநர் பாலாஜி சக்திவேல் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஒரு நடுத்தர வயது மனிதனின் வாழ்க்கையில் நடக்கும் எதிர்பாராத சம்பவங்களை உணர்வுபூர்வமாக இந்தப் படம் பேசியுள்ளது.

KPY Bala vijay tv

நேற்று வெளியான இந்த படத்திற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. முதல் பாதியில் ரசிகர்களைச் சிரிக்க வைத்தாலும், படத்தின் கடைசி அரை மணி நேரம் அனைவரையும் அழ வைத்துவிட்டதாக பல பிரபலங்களும், ரசிகர்களும் கூறி வருகிறார்கள். பாலாவின் நடிப்பு பெரிய அளவில் பாராட்டப்படுகிறது. ஒரு நகைச்சுவை நடிகர் ஹீரோவாக மாறி, இவ்வளவு உணர்வுபூர்வமாக நடித்தது பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

முதல் நாள் வசூல்

'காந்தி கண்ணாடி' திரைப்படம் வெளியான முதல் நாளில் ₹17 லட்சம் வரை வசூல் செய்திருக்கிறது. ஒரு சிறிய பட்ஜெட் படத்திற்கு இது ஒரு நல்ல ஆரம்பம். இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், இந்த படத்திற்காக பாலா முழு சம்பளத்தையும் வாங்கவில்லை. ஒரு சிறிய தொகையை மட்டுமே அட்வான்ஸாக வாங்கிக் கொண்டு நடித்திருக்கிறார். படத்தில் லாபம் வந்தால், தயாரிப்பாளர் தனது சம்பளத்தைக் கொடுப்பார் என நம்பிக் கொண்டிருக்கிறார் பாலா.

மொத்தத்தில், ஒரு நகைச்சுவை கலைஞராக மட்டுமல்லாமல், ஒரு கருணை உள்ளம் கொண்ட மனிதராகவும் வலம் வரும் பாலாவின் இந்த ஹீரோ அவதாரம் வெற்றியடைந்துள்ளது. இந்த படத்தின் வெற்றி, அவருக்கு அடுத்தடுத்து நல்ல பட வாய்ப்புகளைக் கொடுக்கும் என்று ரசிகர்கள் நம்பிக்கையுடன் இருக்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+