கங்கை அமரன் கதாநாயகன் வாய்ப்பை மறுத்தது இத்தனை படங்களா? அதுவும் அந்த நடிகைக்கு ஜோடி!
சென்னை: இயக்குனராகவும் இசையமைப்பாளராகவும் பாடகராகவும் பல்வேறு முகங்களை கொண்டிருக்கும் கங்கை அமரனுக்கு பல வெற்றி திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருந்தும் அவர் நடிக்க மறுத்து இருக்கிறாராம். அது பற்றி அவர் ஒரு பேட்டியில் பேசி இருந்த நிலையில் அந்த வீடியோ இணையத்தில் இப்போது அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
இளையராஜா இசையமைப்பாளராக வேண்டும் என்ற ஆசையில் சென்னைக்கு வந்தது போலவே அவருடைய தம்பி கங்கை அமரனும் ஒரு பாடகராக வேண்டும் அல்லது பாடல் ஆசிரியராக வேண்டும் என்ற ஆசையில் தான் சென்னைக்கு வந்திருக்கிறார். ஆனால் சென்னைக்கு வருவதற்கு முன்பே கவிஞர் வாலியிடம் உதவியாளராக சேர்வதற்கு அவருக்கு கடிதம் எழுதி இருந்தாராம்.

ஆனால் வாலி அதை கண்டுகொள்ளவில்லையாம். பிறகு சினிமாவில் தன்னுடைய அண்ணன் இளையராஜாவுக்கு உறுதுணையாக ஆரம்பத்தில் கங்கை அமரன் இருந்து இருக்கிறார். அந்த நேரத்தில் இளையராஜாவுக்கு பல வாய்ப்புகள் வந்து கொண்டே இருந்தது. அப்போது இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் இளையராஜாவுக்கு இடையே கங்கை அமரன் தான் பாலமாக இருந்திருக்கிறார்.
அதுபோல இளையராஜாவின் இசையில் பல பாடல்களை கங்கை அமரன் எழுதியும் இருக்கிறார் பாடியும் இருக்கிறார். அப்படியே போய்க் கொண்டிருந்த நேரத்தில் தான் ஒரு கட்டத்தில் தனியாக இசையமைக்க துவங்கியிருக்கிறார். இதனாலையே அண்ணன் தம்பிக்குள் பிரச்சனை வந்துவிட கங்கை அமரன் அதற்குப் பிறகு தனியாக பிரிந்து இருக்கிறார். ஆனாலும் பாடகராகவும் பாடல் ஆசிரியராகவும் மட்டுமல்லாமல் அதற்கு பிறகு இயக்குனராக மாறி இருக்கிறார்.
கோழி கூவுது, ஊரு விட்டு ஊரு வந்து, கரகாட்டக்காரன், கும்பக்கரை தங்கையா, கோவில் காளை, சின்னவர், தெம்மாங்கு பாட்டுக்காரன் என்று பல படங்களை கங்கை அமரன் இயக்கி இருக்கிறார். இப்படி பாடலாசிரியர், இயக்குனர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர் என்று பல அவதாரங்களை எடுத்து இருந்த கங்கை அமரனை நடிகராகவும் மாற்றி விட வேண்டும் என்று "பாரதிராஜா" ஆசைப்பட்டிருக்கிறார்.
பாரதிராஜா இயக்கிய "புதிய வார்ப்புகள்" என்ற திரைப்படத்தில் முதலில் கங்கை அமரனை தான் நடிக்க கேட்டிருந்தாராம். ஆனால் அவர் அதற்கு மறுத்து விட்டாராம். அதற்குப் பிறகு நிழல்கள் படத்திலும் கங்கை அமரனிடம் முதலில் கதை சொல்லி நடிக்க சொல்லி இருக்கிறார். ஆனால் அதற்கும் கங்கை அமரன் மறுத்திருக்கிறார்.
ஆனாலும் விடாத பாரதிராஜா அவர் இயக்கிய காதல் ஓவியம் என்ற படத்தில் நடிகை ராதாவுக்கு ஜோடியாக கங்கை அமரனை நடிக்க கேட்டிருக்கிறார். ஆனால் அதற்கு கங்கை அமரனின் மனைவி சம்மதம் தெரிவிக்கவில்லையாம். இப்படியாக பாரதிராஜாவின் மூன்று படங்களில் கதாநாயகனாக நடிக்கும் வாய்ப்பை கங்கை அமரன் மறுத்து விட்டாராம்.












Click it and Unblock the Notifications