10 வருஷமாக அண்ணனிடம் பேசல! பிரேம்ஜிக்கு இனிதான் இருக்கு! வைரமுத்து அப்படி சொன்னாரு! கங்கை அமரன் பேட்டி

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ் சினிமாவில், இசைஞானி இளையராஜாவின் இசையில், தனது சகோதரர் கங்கை அமரன், இசை, இயக்கம், பாடல்கள், தயாரிப்பு என, பல துறைகளில், தன்னை, நிரூபித்துள்ளார். ஆனால், ஒரு நிகழ்ச்சியில் பேசிய அவர், 10 வருடங்களாக, அண்ணனிடம் பேசுவதில்லை, என்று ஒரு பெரிய உண்மையை, வெளிப்படையாகக் கூறியுள்ளார்.

Gangai Amaren Ilaiyaraaja Vairamuthu

கங்கை அமரனின் பேச்சு

"அண்ணனுக்கும், எனக்கும், சண்டை வந்திருக்கிறது. சில இடங்களில், வெளிப்படையாக, திட்டிவிடுவேன். அதனால் என்னை விட்டுவிட்டார். நான், அவரிடம் 10 வருடமாக, பேசுவதே இல்லை. நான், அவருக்கு, பாடல் எழுதியதில்லை," என்று, கங்கை அமரன் நெகிழ்ச்சியுடன், கூறினார். "அந்த நேரத்தில் தான், வைரமுத்து, இடத்தை பிடித்துவிட்டார். வைரமுத்து வந்தவுடன், எனக்கு சந்தர்ப்பங்கள் குறைய ஆரம்பித்தது. அது, நல்ல விஷயம் தான். புதியவர்களை, அறிமுகப்படுத்த வேண்டும் என்று, நினைக்கிறோம். ஆனால், அவர்கள் வந்தவுடன், 'நான் வந்த பின்னால் தான், அவருக்கு முகவரி தெரிய ஆரம்பித்தது,' என்று சொல்கிறார்கள்," என்று, அவர் வேதனையுடன், தெரிவித்தார்.

வைரமுத்துவின் பேச்சு

"அவர், எப்போது அவ்வாறு பேசத் தொடங்கினாரோ, அப்போதே என் மனதில் பட்டது. 'யாரையும் காட்டி கொடுக்கும் வேலையை, செய்யக் கூடாது. அவன், பாடல் எழுதுவது உனக்கு பிடிக்கவில்லை. அதுக்குத்தான், இப்படி சொல்கிறேன்,' என்று, சொல்வார்கள் என்பதால், விட்டுவிட்டேன். அது, அவருக்கே, தெரியவில்லை. இது தான், காரணம்," என்று, கங்கை அமரன், கூறினார்.

அடையாளம்

"பல இடங்களில் போய், 'இளையராஜா என்ற, ஒரு இசையமைப்பாளன், வளர்ந்து வருகிறான், அதற்கு, என் பாடல்களின் அடையாளம், பெரியதாக, வந்திருக்க முடியாது,' என்று, பேசியிருக்கிறார். 'நான் வந்த பிறகு தான், இளையராஜாவுக்கு, அடையாளம் வந்தது,' என்று, சொல்கிறார். அதுக்கு முன்னால், வந்த அடையாளம், எப்படி? நான், கஷ்டப்பட்டு வந்தேன்," என்று, கங்கை அமரன் உணர்ச்சிபூர்வமாக பேசியுள்ளார்.

கண்ணதாசன், எம்.ஆர். ராதா:

"எம்.ஆர். ராதா, சரியாகப் பேசினார். எம்.ஆர். ராதா பேசினால், நல்ல நியாயமாக இருக்கும். அந்த மாதிரி, இயல்பில், யாருமே இல்லை," என்று அவர், பழைய கலைஞர்களைப் பற்றி, பேசினார். கண்ணதாசனை பற்றி பேசும்போது, கவிஞராக இருப்பவருக்கு, எல்லா உணர்ச்சிகளும், அடக்கிக்கொண்டு, மென்மையாகப் பேசுவது தான், கவிஞரின் பண்பாடு," நான் வைரம் முத்து பற்றி திட்டவில்லை இளையராஜா மற்றும் வைரமுத்து ஏன் பிரிந்தார்கள் என்ற கேள்வி இருக்கிறது அதற்காகத்தான் பதிலை நான் சொல்கிறேன் நான் வந்த பிறகு தான் இளையராஜாவுக்கு அடையாளம் வந்தது என்று அவர் சொல்கிறார் அதற்கு முன்னாள் வந்த அடையாளம் எப்படி நான் கஷ்டப்பட்டு வந்தேன் என்று, கங்கை அமரன், தனது கருத்தை, பதிவு செய்துள்ளார்.

அதோடு தன்னுடைய மகன்கள் பற்றி பேசும் போது நான் என்னுடைய மகன்களுக்கு சிறந்த அப்பாவாக இருக்கிறேன். எந்த இடத்திலும் நீ இப்படித்தான் இருக்க வேண்டும் அப்படித்தான் இருக்க வேண்டும் என்று சொல்லி நான் வளர்த்தது கிடையாது. என்னுடைய பிள்ளைகள் அவர்களுடைய விருப்பத்திற்கு வளர வேண்டும் அவர்கள் இந்த உலகத்தில் எல்லா விஷயத்தையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று நான் நினைத்தேன். அதனால் தான் அவர்களை ஜாலியாக விட்டுவிட்டேன்.

பிரேம்ஜி

இப்போது எல்லோரும் நல்ல நிலைமையில் தான் இருக்கிறார்கள் பிரேம்ஜிக்கு மட்டும் இன்னும் சில முன்னேற்றம் தேவை. ஆரம்பத்தில் பிரேம்ஜிக்கு நாங்கள்தான் பொண்ணு பார்த்தோம் ஒவ்வொரு பொண்ணு போட்டோ காட்டும்போது அவன் வேண்டாம் என்று சொல்லிக் கொண்டிருப்பான். அவன் ஓகே சொல்லிவிட்டால் பொண்ணு வீட்டில் வேண்டாம் என்று சொல்லிவிடுவார்கள். அதற்கு காரணம் அவன் பேட்டிகளிலும், படங்களில் குடிகாரன் போல நடித்துதான். அப்படி நடித்தால் அப்படித்தான் இருப்பான் என்று சிலர் நினைத்து விட்டார்கள்.

ஆனால் நான் என்னுடைய பிள்ளைகள் என்று அவர்கள் பற்றி பெருமையாக சொல்லவில்லை. சில விஷயங்களை சொல்லாமலேயே அவர்களுடன் பழகியவர்களுக்கு புரிந்திருக்கும். பிரேம்ஜியும் சரி அவன் கூட உள்ளவர்களும் சரி எப்படிப்பட்டவர்கள் என்று அவர்களுடன் பழகியவர்களுக்கு தெரியும்‌ இன்று பிரேம்ஜி நல்லாதான் இருக்கிறான் என்று கங்கை அமரன் அந்த நிகழ்ச்சியில் பேசி இருக்கிறார். கங்கை அமரனின் இந்த வெளிப்படையான பேச்சு, சமூக வலைத்தளங்களில், ஒரு பெரிய விவாதப் பொருளாக, மாறியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+