Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சீரியல் நடிகை நந்தினி தற்கொலை.. போல்டான கதாநாயகியாக நடித்த நடிகையின் எதிர்பாராத முடிவு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'கௌரி' சீரியலில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துவந்த நடிகை நந்தினி, பெங்களூருவில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம், தொலைக்காட்சி மற்றும் சின்னத்திரை உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

'கௌரி' சீரியலில் துர்கா - கனகா என இரட்டை வேடங்களில் நடித்த நந்தினி, தனது நடிப்புத் திறமையால் ரசிகர்களிடையே கவனம் பெற்றிருந்தார். பூர்வீகமாக ஆந்திராவை சேர்ந்தவர் என்றாலும், கன்னட சீரியல்கள் மூலம் நடிப்புலகில் தனது பயணத்தை தொடங்கிய நந்தினி, பின்னர் தமிழில் 'கௌரி' தொடரின் மூலம் அறிமுகமானார்.

Serial Actress Nandini Kalaignar TV

பொதுவாக சீரியலில் நடிக்கும் நடிகைகள் ரசிகர்கள் மத்தியில் நல்ல பிரபலம் அடைந்து விடுகிறார்கள். அதேபோலத்தான் நடிகை கௌரிக்கும் தமிழில் பிரபலம் கிடைத்திருக்கிறது. இந்த சீரியல் கடந்த வருடத்தில் தொடங்கப்பட்டு ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலின் படப்பிடிப்பு தொடக்கத்தில் முழுமையாக பெங்களூருவிலேயே நடைபெற்றதால், நந்தினி அங்கேயே வசித்து வந்ததாக கூறப்படுகிறது.

சமீப காலமாக படப்பிடிப்பு சென்னைக்கு மாற்றப்பட்ட நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை ஷூட்டிங்கில் பங்கேற்ற அவர், அதன்பிறகு பிரேக் காரணமாக பெங்களூருவுக்கு திரும்பியதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், நேற்று இரவு பெங்களூருவில் அவர் தங்கியிருந்த அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுவரை தற்கொலைக்கான காரணம் குறித்து எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை.

'கௌரி' தொடரில் அவருடன் இணைந்து நடித்த நடிகர் சதீஷ், இந்த சம்பவம் குறித்து தனியார் செய்தி சேனலுக்கு பேசுகையில்,"எப்போதும் கலகலப்பாக பேசக்கூடியவர். சமீபத்தில் கூட ஷூட்டிங்கில் மிகவும் உற்சாகமாக நடித்தார். இரட்டை வேடம் என்பதால் கூடுதல் பொறுப்புடன் செயல்பட்டார். இவ்வளவு பெரிய முடிவை எடுப்பார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. யூனிட்ல எல்லாருக்குமே இது பெரிய ஷாக்" என தெரிவித்துள்ளார்.

Serial Actress Nandini Kalaignar TV

நந்தினி, இளம் வயதிலேயே சின்னத்திரையில் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கிய நடிகையாக பிரபலமாக இருந்தார். குறிப்பாக 'கௌரி' சீரியலில், இரண்டு வித்தியாசமான வேடங்களில் ஒரே சீரியலில் நடித்தது பெரிதாக பாராட்டப்பட்டு வந்தது. உணர்ச்சிப்பூர்வ காட்சிகளிலும், வலிமையான காட்சிகளிலும் அவர் காட்டிய இயல்பான நடிப்பு ரசிகர்களிடையே பாராட்டைப் பெற்றிருந்தது.

மேலும், அவர் இன்னும் திருமணம் ஆகாதவர் என்றும், நடிப்பில் முழு கவனம் செலுத்தி வந்தவர் என்றும் சக நடிகர்கள் கூறுகின்றனர். எதிர்காலத்தில் மேலும் வாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இத்தகைய துயரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது சின்னத்திரை உலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, 'கௌரி' சீரியல் யூனிட் உறுப்பினர்கள் மற்றும் சக நடிகர்கள் சிலர் பெங்களூரு சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சமூக வலைதளங்களில் பலரும் நந்தினிக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

நடிகை நந்தினியின் மறைவு, திறமைமிக்க இளம் நடிகையை தமிழ் சின்னத்திரை இழந்துவிட்டதாக ரசிகர்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர். சமீபத்தில் தான் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் நடித்து வந்த நடிகை ராஜேஸ்வரியையும் தற்கொலை செய்திருந்தார். அந்த அதிர்ச்சியில் இருந்தே மீளாத நிலையில் இப்போது இந்த நடிகையையும் தற்கொலை செய்தது சின்னத்திறையில் ரசிகர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

முக்கிய குறிப்பு:
மனஅழுத்தம், மன வேதனை போன்ற பிரச்சனைகள் யாருக்கும் எப்போது வேண்டுமானாலும் ஏற்படலாம். அப்படி உணரும்போது, தனியாக இருப்பதை தவிர்த்து, குடும்பத்தினர், நண்பர்கள் அல்லது மனநல ஆலோசகர்களிடம் பேசுவது மிகவும் அவசியம்.
இந்தியாவில் மனநல உதவிக்காக Kiran (1800-599-0019) போன்ற உதவி எண்கள் 24 மணி நேரமும் செயல்படுகின்றன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+