“கணவர் சொன்ன ஒரு வார்த்தை… உடைந்து அழுத ஜெனிலியா!” இதுதான் ரியல் லவ்.. நெகிழ வைத்த காட்சி
சென்னை: நடிகை ஜெனிலியா சமீபத்தில் தன்னுடைய கணவருடன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது கணவர் சொன்ன வார்த்தையை கேட்டு கதறி அழுதிருக்கிறார். எவ்வளவோ முயற்சி செய்தும் தன்னுடைய கண்ணீரை கட்டுப்படுத்த முடியாமல் அவர் தவித்ததை பார்த்து பலரும் அவருக்கு ஆறுதல் சொல்லி வருகின்றனர்.

ட்ரைலர் வெளியீட்டு விழா
சமீபத்தில் நடந்த 'ராஜா சிவாஜி' திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில், மேடையில் பேசிக்கொண்டிருந்த ரித்தேஷ் தேஷ்முக், தன்னுடைய சினிமா பயணத்தை பற்றி பேசிக் கொண்டிருந்தார். அப்போது, இந்த படம் எனக்கு சாதாரண படம் அல்ல... பல வருடங்களாக மனதில் வைத்திருந்த ஒரு கனவு. அந்த கனவை நிறைவேற்ற எவ்வளவு தடைகள் வந்தது என்றும்எப்படி மீண்டும் மீண்டும் முயற்சி செய்தார் என்பதையும் அவர் பகிர்ந்து கொண்டிருந்தார்.
கணவரின் அன்பு
அதன் பின்பு தான் அந்த ஒரு முக்கியமான விஷயம் வந்தது. "இந்த கனவு நனவாக காரணம் நான் மட்டும் இல்லை... என் பக்கம் நின்ற ஒருத்தர் இருக்கிறார்... அது ஜெனிலியா," என்று அவர் சொன்னார்.
இந்த ஒரு வரி தான் நிகழ்ச்சியின் முழு சூழ்நிலையையும் மாற்றியது. அந்த வார்த்தைகளை கேட்டவுடன், மேடையில் நின்றிருந்த ஜெனிலியா திடீரென உடைந்து கண்ணீர் விட ஆரம்பித்தார். ஆரம்பத்தில் அதை கட்டுப்படுத்த முயன்றாலும் முடியவில்லை. ஒரு கட்டத்தில் முகத்தை திருப்பி வைத்து அழுதார். அந்த தருணம் அங்கே இருந்தவர்களையே சற்று அமைதியாக்கியது.
ஜெனிலியாவிற்கு கிடைத்த பெருமை
ரித்தேஷ் கூட ஒரு நிமிடம் பேச முடியாமல் நின்றார். பின்னர் தன்னுடைய உணர்ச்சியை கட்டுப்படுத்திக்கொண்டு, "கனவு காண்றது எல்லாராலும் முடியும்... ஆனா அந்த கனவை நம்பி நின்னு உன்னை தள்ளி கொண்டு போகிற ஒருத்தர் இருந்தா தான் அது நிஜமா மாறும்... எனக்கு அந்த நம்பிக்கை கொடுத்தது ஜெனிலியா தான்" என்று மீண்டும் தன்னுடைய மனைவி பற்றி பெருமையாக பேசிக் கொண்டிருந்தார்.

ஜெனிலியாவின் பயணம்
ஜெனிலியா டிசோசா தமிழ் ரசிகர்களுக்கு புதுசா அறிமுகம் செய்ய வேண்டியவர் இல்லை.
பாய்ஸ் படத்தில் ஆரம்பித்து, சச்சின் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்தது வரை பல முக்கியமான படங்களில் நடித்திருக்கிறார்.
ஆனால் அவரை ரசிகர்கள் மனதில் நிலைத்துவைத்தது சந்தோஷ் சுப்ரமணியம் படத்தில் நடித்த "ஹாசினி" கேரக்டர் தான். அந்த கதாபாத்திரம் இன்னும் பலருக்கும் பிடித்தமானதாகவே இருக்கிறது.
தமிழ் மட்டுமல்ல... தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளிலும் முன்னணி நடிகையாக விளங்கிய ஜெனிலியா, தனது இயல்பான நடிப்பாலும், க்யூட்டான ரியாக்ஷனாலும் ரசிகர்களை ஈர்த்தவர்.
குடும்பம்
சினிமாவை விட ஜெனிலியாவின் நிஜ வாழ்க்கை தான் இன்னும் சுவாரசியமான கதை. பல வருட காதலுக்குப் பிறகு, 2012ஆம் ஆண்டு ரித்தேஷ் தேஷ்முக் அவரை திருமணம் செய்து கொண்டார். இன்று இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். சினிமாவிலிருந்து ஓரளவு விலகி இருந்தாலும், குடும்பத்தோடு நேரம் செலவிடுவது, கணவரின் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வது போன்ற விஷயங்களில் தொடர்ந்து ஆக்டிவாக இருக்கிறார் ஜெனிலியா.
வைரலாகும் வீடியோ
மேடையில் ஜெனிலியா அழுத சம்பவம் வீடியோவாக வெளியானதும், "இது தான் உண்மையான கணவன்-மனைவி பந்தம்", "இவ்வளவு வருடத்துக்கு பிறகும் இப்படி அன்பு இருக்கிறதா!",
"ஹாசினி இன்னும் அதே மாதிரி தான் இருக்காங்க..." என்று பலரும் எமோஷனலாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.
சினிமா உலகில் பாராட்டுகள், விருதுகள் எல்லாம் சாதாரணம். ஆனால் ஒருவரின் வாழ்க்கை துணை, எல்லோருக்கும் முன் நின்று "நீ தான் என் பலம்" என்று சொன்னால்... அந்த தருணம் எந்த விருதுக்கும் சமமானது. அந்த உணர்ச்சிதான் ஜெனிலியாவின் கண்ணீரில் வெளிப்பட்டது.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications