கார்த்திக் எப்படிப்பட்டவர்னு தெரியுமா? ஊட்டியில் முதல் ஆளாக அங்கே இருப்பாரு! இயக்குனர் ஓப்பன் அப்
சென்னை: நடிகர் மற்றும் இயக்குனராக பிரபலமடைந்த ஜிஎம் குமார் நடிகர் கார்த்திக் பற்றி யாருக்கும் தெரியாத தகவல்களை பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் அதிகமான கருத்துக்களை பெற்று வருகிறது.
நடிகர் கார்த்திக் அலைகள் ஓய்வதில்லை என்ற படத்தில் மூலமாக திரைத்துறையில் அறிமுகமாகி தொடர்ந்து 125க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். அதிலும் தமிழில் மட்டுமல்லாமல் பல மொழிகளில் பிசி நடிகராக இருந்த கார்த்திக் சில வருடங்களாக சினிமாவை விட்டு விலகி இருந்தார்.

ஆனால் இப்போது மீண்டும் ஒரு சில திரைப்படங்களில் நடிக்க தொடங்கி இருக்கிறார். புகழின் உச்சத்தில் இருக்கும்போது கார்த்திக் அதிகமான சர்ச்சைகளையும் சந்தித்து இருந்தார். அவருடைய திருமண வாழ்க்கை மற்றும் சில நடிகைகளோடு கிசுகிசுப்பு என்று கார்த்திக்கு எதிராக பல செய்திகள் பரவி வந்தாலும் அதை அவர் கண்டு கொள்வதே கிடையாது.
தன்னுடைய வேலைகளில் அடுத்தடுத்து போய்க் கொண்டிருந்த கார்த்திக் சில வருடங்களாக எந்த சினிமாவிலும் இல்லாமல் இருந்த நிலையில் அவருடைய ரசிகர்கள் அவரை தேடிக் கொண்டிருந்தனர். அதற்கு பிறகு தான் அனேகன் திரைப்படத்தில் அவருடைய ரீஎன்றி பெரிய அளவில் பேசப்பட்டது. கதாநாயகனாக பலரையும் கவர்ந்த கார்த்திக் வில்லனாகவும் அனேகன் திரைப்படத்தில் மிரட்டி இருந்தார்.
பொதுவாக நடிகர்கள் மற்றும் பிரபலங்கள் பற்றி பல வதந்திகள் பரவி வரும் அது உண்மையாக இருப்பது மிக மிக குறைவு தான். அது போல தான் ஒரு சிலர் ஆரம்ப காலகட்டத்தில் கார்த்திக் சூட்டிங்கிற்கு சரியாக வர மாட்டார் என்று கூறி இருக்கிறார்கள். ஆனால் கார்த்திக் அப்படிப்பட்டவர் கிடையாது என்று இயக்குனர் ஜி எம் குமார் பேசியிருக்கிறார்.
அதில் ஜி எம் குமார் பேசுகையில் கார்த்திக் பற்றி பலர் பலவிதமாக பேசுவார்கள், ஆனால் நான் பார்த்த நடிகரில் கார்த்திக் போல யாரும் கிடையாது. தான் பணியாற்றிய படத்தில் கார்த்திக் நடித்திருந்தார். அப்போது நாங்கள் சூட்டிங் எடுக்கப் போகும்போது அதற்கு முன்பு முதல் ஆளாக சூட்டிங் ஸ்பாட்டில் கார்த்திக் தான் இருப்பார். அதிலும் ஊட்டி குளிரில் எல்லா நடிகர்களும் வருவதற்கு சிரமப்படுவார்கள்.
ஆனால் அங்கே முதல் ஆளாக காத்திருப்பது கார்த்திக் தான். சூட்டிங் முடிந்த பிறகு தான் அங்கிருந்து கிளம்புவார். ஒரு பக்க டயலாக் கூட ஒரே டேக்கில் ஈசி ஆக முடித்து விடுவார். என்ன ஷார்ட் சொன்னாலும் அதை நல்லா உள்வாங்கி அப்படியே நடித்துக் காட்டி விடுவார். நானே பலமுறை வியந்து இருக்கிறேன். இவ்வளவு பெரிய நடிகராக இருக்கிறார் ஆனால் எவ்வளவு சிம்பிளாக முதலாக வந்து எல்லோருடமும் சிரித்து பேசிக் கொண்டிருக்கிறார் என்று நினைத்திருக்கிறேன்.
அதற்கு பிறகு தான் கார்த்திக் பற்றி நானா ஒரு விஷயத்தை கண்டுபிடித்தேன். அது என்னவென்றால் கார்த்திக்குக்கு அவர் நடிக்கும் படத்தில் வேலை செய்பவர்களை பிடித்து விட்டால் அவரால் அந்த படத்திற்கு என்னவெல்லாம் செய்ய முடியுமோ அவ்வளவு பார்த்து பார்த்து செய்வார் என்று நானே பார்த்தேன். அதுபோல கார்த்திக்கிடம் எப்போது பேசினாலும் சிரித்த முகமாக கலகலவென பேசிக் கொண்டிருப்பார் என்று அந்த பேட்டியில் ஜிஎம் குமார் பேசியிருக்கிறார்.
-
இந்த வார இறுதியில் ஓடிடியில் என்ன பார்க்கலாம்? ‘வாரண்ட்’ சீரிஸ் விமர்சனம்! விலங்கு கொடுத்த அதே தரமா? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications