என்னாச்சுப்பா... கோகுலத்தில் சீதை சீரியல் நிறுத்தப்படுதா!?.. கேள்விக்குறியில் ரசிகர்கள்
சென்னை: விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் கோகுலத்தில் சீதை சீரியலுக்கு என்னதான் ஆச்சு என்று ரசிகர்கள் குழப்பி இருக்கின்றனர்.
ஆனால் சீரியலை குளோஸ் பண்ணலையாம். ஒரே ஒரு வாரம் தான் ஒளிபரப்புவதை தடை செய்திருக்கிறார்களாம்.
சீரியலின் கதாநாயகி ஆஷா கவுடாவுக்கு தான் உடல்நிலை சரியில்லை என்று கூறுகின்றனர். அதனால் தான் சீரியலை ஒரு வாரம் ஒளிபரப்ப போவதில்லையாம்.

ஒரு வாரம் சீரியல் இல்லையா
ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் கோகுலத்தில் சீதை சீரியல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இந்த சீரியல் இப்போதுதான் விறுவிறுப்பான கதைக்களத்துடன் ஒளிபரப்பாகி வருகிறது. பல நாட்களாக காத்துக் கொண்டிருந்த வசு தான் தன்னுடைய ஹாட் பிரண்ட் என்பதை அர்ஜுன் தெரிந்து கொள்வாரா? சின்னவயசு பிரண்டு என்பதை தெரிந்து அவரையே திருமணம் செய்வாரா? அல்லது வசுவை காதலித்து திருமணம் செய்வாரா! என்று பல்வேறு கோணங்களில் ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டு வரும் நேரத்தில் இந்த சீரியலை பற்றி பலவிதமான செய்திகள் பரவி வருகிறது.

அர்ஜுனையே திருத்திட்டாங்க வசு
இந்த சீரியல் தன்னுடைய குழந்தைப் பருவத்தில் தனக்கு உதவி செய்த பெண்ணையே அர்ஜுனாக நடிக்கும் நந்தா காதலித்துக் கொண்டிருக்கிறார். ஆனால் அவருடைய சின்ன வயசு பிரண்டாக வசுந்தரா அவரிடமே வேலைக்கு செல்கிறார். முதலில் ரவுடி போல குடித்துவிட்டு சுற்றிக்கொண்டிருந்த அர்ஜூன் இவரை பார்த்து இவரிடம் பழகிய பிறகுதான் தற்போது திருந்தி கம்பெனியை நல்ல முறையில் பாதுகாத்து வருகிறார். இந்த நிலையில் வசுவுக்கு அர்ஜுன் தான் தன்னுடைய குழந்தை பருவ நண்பன் என்பது தெரிந்து கொண்டார். ஆனால் அர்ஜுனுக்கு இன்னும் தெரியவில்லை. இனியா எனும் பெண் பல்வேறு திருட்டுகளில் சம்பந்தமுள்ள பெண் தான் தான் அர்ஜூனின் சின்னவயது பிரண்டு என்று அந்த வீட்டிற்குள் வந்து அர்ஜுனனையும் குடும்பத்தையும் நம்ப வைத்திருக்கிறார்.

காதல் கைகூடுமா
வசுவின் மீது வைத்திருக்கும் மரியாதை காரணமாக வசுவுக்கு திருமணம் செய்து கொடுக்கும் பொறுப்பை தானே ஏற்றிருக்கும் அர்ஜுன் ஒவ்வொரு இடமாக மாப்பிள்ளை பார்த்துக் கொண்டிருக்கிறார். ஆனால் நடக்கும் திருமண ஏற்பாடுகள் எல்லாம் கடைசியில் நின்று கொண்டே இருக்கிறது. அதனால் வசுவையும் தன்னுடைய வீட்டிலேயே தங்க வைத்திருக்கிறார். வசு அர்ஜுன் மீது வைத்திருக்கும் காதலை எவ்வளவு முறை எடுத்துக் காட்டியும் அர்ஜுன் கண்டு கொள்ளவில்லை. ஆனால் தற்போது இவர் வெளிநாடு செல்ல இருக்கும் நேரத்தில் தான் வசுவின் மீது தனக்கு இருக்கும் காதலை அர்ஜுன் புரிந்திருக்கிறார். அதைப்பற்றி தன் தாயிடமும் கூறிவிட்டார்.

விறுவிறுப்பான கதைக்களம்
ஏற்கனவே அர்ஜுனுக்கு இனியா உடன் எங்கேஜிமெண்ட் முடிந்துவிட்டாலும் அர்ஜுனும் வசுவும் சேர்வார்களா இல்லையா என்றுதான் பரபரப்பாக கதை போய்க்கொண்டிருக்கிறது. அதுவும் தற்போது வசுவின் மீது காதலோடு அர்ஜுன் சுற்றி வருவதைப் பார்க்கும்போது அர்ஜுனுக்கு உண்மை தெரிந்து விட்டுதான் சும்மா நடிக்கிறாரா அல்ல அவர் மீது உண்மையாகவே காதல் வந்து விட்டதா! என்று தெரியவில்லை ஆனாலும் இந்த சீரியலின் கெஸ்டாக வந்த குஷ்புவும் தன்னுடைய ரோலை நன்றாகவே செய்து விட்டு சென்றுவிட்டார். இந்தநிலையில் இந்த சீரியல் திடீரென்று ஒரு வாரம் ஒளிபரப்பப்பட போவதில்லை என்ற செய்திகள் பரவி வருகிறது.

ஐயோ அவருக்கு என்ன ஆச்சு
அதுவும் வசுவாக நடிக்கும் ஆஷா கவுடாவுக்கு உடல்நிலை சரியில்லை. அதனால் அவர் வந்த பிறகுதான் இந்த சீரியல் தொடர்ந்து ஒளிபரப்பப்படும் என்று கூறி வந்தாலும், ஆஷா கௌடா தன்னுடைய இன்ஸ்டாகிராமில் தினமும் போஸ்ட் போட்டுக் கொண்டுதான் இருக்கிறார். அதுவும் மாடலிங்கில் கலக்கிக் கொண்டிருக்கும் இவர் சீரியலில் மட்டும்தான் புடவையில் வருகிறார். இன்ஸ்டாகிராமில் எல்லாம் கன்னாபின்னாவென்று உடையை கிழித்து போட்டபடி கவர்ச்சி தூக்கலாக போட்டோசூட் எடுத்துக்கொண்டிருக்கிறார். அதனால்தான் இந்த செய்தி உண்மையா இல்லையா என்று ரசிகர்கள் பெரும் குழப்பத்தில் இருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications