தங்க உடையுடன், கழுத்தில் மோடி நெக்லஸுடன் வந்த நடிகையை நினைவிருக்கா? இப்ப செருப்பை கழட்டி பரபர
சென்னை: கேன்ஸ் திரைப்பட விழாவில் வித்தியாசமான நெக்லஸ் அணிந்து அனைவரையும் திகைக்க வைத்தாரே நடிகை ருச்சி குஜ்ஜார்? அவரை நினைவிருக்கிறதா? தற்போது 'சோ லாங் வேலி' என்ற படத்தின் தயாரிப்பாளர்கள் மற்றும் நடிகர்கள் மீது கோர்ட்டில் சிவில் வழக்கு தொடர்ந்துள்ளார். இது மும்பையில் பெரும் பரபரப்பை உண்டுபண்ணி வருகிறது.. இந்த பரபரப்புக்கு நடுவில் தியேட்டரில் சலசலப்பு சம்பவம் ஒன்று நடந்து, அத்தனை பேரையும் அதிர வைத்து வருகிறது.
கேன்ஸ் திரைப்பட விழா என்பது, வெறும் சினிமாவின் நிகழ்வாக மட்டுமே பார்க்கப்படுவதில்லை.. இங்கு கண்கவர் நவநாகரிக ஆடைகளை வெளிப்படுத்தும் பிரதான மேடையாகவும் கருதப்படுகிறது..
எனவே, இங்கு வரும் பிரபலங்களின் ஆடைகள், அணிகலன்கள் போன்றவை உலக அளவில் கவனிக்கப்பட்டு, பேசப்படுவதும் வாடிக்கையாகும்..அந்தவகையில், கேன்ஸ் 2025 ரெட் கார்பெட்டில், இந்திய கைவினைத் திறனை வெளிப்படுத்தும் விதமாக தங்க திருமண லெஹங்கா அணிந்து சென்ற நடிகைதான் இந்த ருச்சி குஜார்.. எம்பிராய்டரி, கண்ணாடி வேலைப்பாடுகள் அமைந்த டிரஸ்ஸை அணிந்து வந்ததுடன், கழுத்தில் ஒரு நெக்லஸும் அணிந்திருந்தார்..

தங்கத்திலேயே டிரஸ் - மோடி நெக்லஸ்
அதாவது, தங்கத்திலேயே திருமண லெஹங்கா அணிந்து சென்றார் ருச்சி.. அவரது ஆடை முழுக்க எம்பிராய்டரி, கண்ணாடி டிசைன்கள் செய்யப்பட்டிருந்தன.. தங்கத்திலேயே டிரஸ் என்பதை காட்டிலும், அவர் அணிந்திருந்த நெக்லஸ்தான் அப்போது பேசுபொருளானது.. காரணம், அந்த நெக்லஸில் இருந்த பதக்கத்தில், பிரதமர் மோடியின் முகத்தை பதித்து சென்றிருந்தார் ருச்சி.
இதுகுறித்து ருச்சி சொல்லும்போது, "இந்த நெக்லஸ் வெறும் நகை கிடையாது.. இது வலிமை, தொலைநோக்குப் பார்வை, உலக அரங்கில் இந்தியாவின் எழுச்சியை வெளிப்படுத்துகிறது... நெக்லஸை அணிந்து வந்ததன் மூலம், பிரதமர் மோடியை நான் பெருமைபடுத்த நினைக்கிறேன். காரணம், அவரது தலைமைதான் இந்தியாவை புதிய உயரங்களுக்கு இட்டு சென்றுள்ளது" என்று ருச்சி பெருமிதமாக கூறியிருந்தார்.
அழகி பட்டம் நடிகை
ஜெய்ப்பூர் மகாராணி கல்லூரியில் படித்தவர் இந்த ருச்சி.. சினிமா ஆசையில் மும்பைக்கு குடியேறியவர்.. பல்வேறு மியூசிக் வீடியோக்களில் தோன்றி புகழ் பெற்றார்.. கடந்த 2023 மிஸ் ஹரியானாவாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டவரும்கூட.
இந்த புகழ்வாய்ந்த நடிகைதான், தற்போது பரபரப்பு புகாரை கிளப்பியிருக்கிறார்.. ருச்சி குஜார், அதாவது, தயாரிப்பாளர் கரண் சிங் செளகான் என்பவர் ரூ.24 லட்சம் மோசடி செய்துவிட்டதாக' கூறி தற்போது போலீஸ் வரை புகார் சென்றிருக்கிறார்..
ருச்சி தந்துள்ள அந்த புகாரில், ''கரண் சிங் செளகான் என்னிடம் முதன்முதலில் வாட்ஸ் ஆப் மூலம்தான் தொடர்பு கொண்டார்.. ஒரு ஹிந்தி சீரியல் தயாரிக்க உள்ளதாகவும், அது சோனி டிவியில் ஒளிபரப்பாக உள்ளதாகவும், அதில் என்னையும் இணை தயாரிப்பாளராக சேரும்படி கேட்டுக்கொண்டார்.. நானும் அவரது பேச்சை நம்பினேன்..
டிரான்ஸ்பர் செய்யப்பட்ட பணம்
கரண் சிங் செளகானின் கே ஸ்டூடியோ நிறுவனத்திற்கு 2023-24ம் ஆண்டில் 25 லட்சத்தை, பல கட்டங்களில் சிறு சிறிதாக டிரான்ஸ்பர் செய்தேன். இது தொடர்பாக அவர் தேவையான ஆவணங்களை அனுப்பி ஒப்பந்தமும் செய்து கொண்டார்.ஆனால், கரண் சிங் சொன்னபடி , இதுவரை அந்த ஹிந்தி சீரியல் தயாரிக்கவில்லை... நான் அனுப்பிய வைத்து, So Long Valley என்ற படத்தை கரண் சிங் தயாரித்து கொண்டது, பிறகுதான் எனக்கு தெரியவந்தது..
தியேட்டருக்கு சென்ற நடிகை
அப்படம் 27-ம் தேதி வெளியாவதாக தெரிகிறது.. எனவே, நான் கொடுத்த பணத்தை திரும்ப கொடுக்கும்படி கேட்டதற்கு, அதை திரும்ப தராமல் என்னை மிரட்டுகிறார் என்று தெரிவித்தார்.. அத்துடன், கரண் சிங்குக்கு பணம் டிரான்ஸ்பர் செய்யப்பட்ட வங்கி விபரங்களையும் ஆதாரங்களாக ருச்சி தாக்கல் செய்துள்ளார்.
இந்த புகாரின்பேரில், மும்பை ஓசிவாரா போலீஸார், சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர் மீது மோசடி வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள்.. இதனிடையே, So Long Valley படத்தை தயாரிப்பாளர்கள் உள்ளிட்ட தன்னுடைய நண்பர்களுக்கு சினிபோலிஸ் தியேட்டரில் படத்தை போட்டு காட்டுவதற்கு, கரண் சிங் தயாராகி வருவதாக ருச்சிக்கு தகவல் சென்றது.
செருப்பை கழட்டி அடித்த நடிகை
இதைக் கேள்விப்பட்ட ருச்சி தன்னுடைய ஆதரவாளர்கள் சிலருடன், சினிபோலிஸ் தியேட்டருக்கே சென்றுவிட்டார்.. தியேட்டரில் படம் ஓடிக் கொண்டிருந்தபோதே, போராட்டத்தில் ஈடுபட்டார் ருச்சி.. பிறகு, கரண் சிங்கின் போட்டோவுடன் கூடிய பேனர்களை ஏந்தியபடி போராட்டம் நடத்தினார்கள்..மேலும், கரண் சிங்கிடமும், தன்னுடைய ஆவேசமான கேள்விகளை முன்வைத்தார்..
இதனால் இரு தர்ப்பிலும் வாக்குவாதம் வெடித்தது.. ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த ருச்சி, செருப்பை கழட்டி அடிக்க போனார்.. ஆனால், கரண் சிங் செளகானை அடிப்பதற்கு பதில், இன்னொரு தயாரிப்பாளரான மான் சிங் என்பவரை செருப்பால் அடித்துவிட்டார்.. இதனால் தியேட்டரில் மட்டுமல்லாமல் மும்பை சினிமா வட்டாரத்தில் பரபரப்பை உண்டுபண்ணி வருகிறது.
-
தடுமாறுதே தங்க சந்தை.. மாறி மாறி சரிந்து எகிறும் தங்கத்தின் விலை! இப்போ வாங்கலாமா? வேண்டாமா? -
ஈரான் காட்டிய பச்சைக்கொடி.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்த 2 எல்பிஜி கப்பல்கள்.. கெத்து காட்டும் இந்தியா! -
பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு என வட மாநிலங்களில் பரவும் வதந்தி..பங்குகளை நோக்கி படையெடுத்த மக்கள்! -
இந்தியாவுக்கு எதிரான தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் அடைக்கலம் தருவது உண்மைதான்! அம்பலப்படுத்திய அமெரிக்கா -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்?












Click it and Unblock the Notifications