Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரஜினிகாந்த் நெற்றிக்கண் சம்பவம் தெரியுமா? தனுஷிடம் இல்லாத பணமா? உடைத்து பேசிய வெற்றிமாறன்: பிரபலம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தனுஷூடன் சேர்த்து தன்னை பற்றி பரவி வரும் வதந்திகளுக்கு வெற்றிமாறன் ஒரு விளக்கத்தை தந்துள்ளார்.. சிம்புவை வைத்து வெற்றி மாறன் வட சென்னை 2 என்ற படத்தை எடுத்து வரும்நிலையில், அதற்கு தனுஷ் என்ஓசி தருவதற்கு ரூபாய் 20 கோடி கேட்டதாகவும் இணையத்தில் செய்திகள் பரவின.. இதுகுறித்துதான் வீடியோ மூலம் வெற்றிமாறன் விளக்கம் தந்துள்ளார் . இந்த விளக்கத்திற்கு தன்னுடைய கருத்தை பதிவு செய்துள்ளார் மூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலு.

வெற்றிமாறன் தன்னுடைய விளக்க வீடியோவில் பேசும்போது, வடசென்னை படத்துக்கு தனுஷ் NOC கொடுக்க பணம் கேட்டார் என்று சிலர் youtube சேனல்களில் தவறாக பேசி வருகின்றனர். ஆனால் அது உண்மை கிடையாது..

Television vetrimaaran dhanush

தாராளமாக வட சென்னை உலகில் படம் பண்ணிக்குங்க, எனக்கு ஒரு பைசா கூட வேண்டாம்னு சொல்லிவிட்டார். "ஒரு கனாக்காலம்" படத்தில் உதவி இயக்குனராக நான் பணியாற்றிய காலத்திலிருந்தே, எனக்கும் தனுஷூக்கும் நல்ல புரிதல் இருக்கிறது.

சிம்புவுக்கு விளக்கம்

தனுஷ் என்னுடைய நல்லதுக்காக நிறைய விஷயங்களை செய்திருக்கிறார். ஒரு படத்துக்காக எங்களுடைய நட்பு எந்த வகையிலும் கெட்டுப் போகாது..

சில நாட்களுக்கு முன்பு சிம்பு வந்து என்னை சந்தித்தார்.. "இப்படி எல்லாம் பேசுறாங்க, தனுஷுக்கும் உங்களுக்கும் இடையிலான நட்பு என்னால் கெட்டுப் போய் விடக்கூடாது, நீங்க ஸ்டாண்ட் அலோன் படம் கொடுத்தால்கூட நான் அதில் நடிக்க ரெடி" என்றார் சிம்பு.. உடனே நான் சிம்புவிடமும் நடந்ததை சொல்லிவிட்டேன். சீக்கிரமாக இந்த படத்தை ஆரம்பித்து நல்லபடியாக முடித்து கொடுப்பேன்" என்றெல்லாம் வெற்றிமாறன் விளக்கம் தந்திருந்தார்.

மணிரத்னம், சங்கர்

இந்நிலையில், Cheyyaru Balu என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்திருக்கும் செய்யாறு பாலு, "ஒருகாலத்தில் வடமாநில பிரபலங்கள், யாருடைய படத்தில் நடிக்க விருப்பம் என்று கேட்டால், மணிரத்னம், அல்லது சங்கர் படம் என்று சொல்வார்கள். ஆனால், இன்று வெற்றிமாறன் பெயரை சொல்லுகிறார்கள். இது வெற்றிமாறனின் தனித்திறமை.

ஒரு படைப்பு இலக்கியத்தை, நாவலை சினிமாவாக,அதுவும் வெற்றிப்படமாக மாற்றுவதில்தான் வெற்றிமாறன் இன்றும் சிறந்து நிற்கிறார்.. தனுஷுக்கும், வெற்றிமாறனுக்கும் நல்ல பிணைப்பு இருந்து வருகிறது.

இன்று வெற்றிமாறன் வெளியிட்டுள்ள ஒரு வீடியோவில் பல விளக்கத்தை தந்துள்ளார்.. குறிப்பாக, "என்னை ஒரு செயலை செய்யும்படி யாருமே நிர்ப்பந்தப்படுத்த முடியாது, கட்டாயப்படுத்த முடியாது. அதேசமயம் நான் திமிர் பிடித்தவனும் கிடையாது.. படைப்பாளிக்கான சுதந்திரம் என்று உள்ளது, அதை தந்தாலே எனக்கு போதும்" என்று வெற்றிமாறன் தெரிவித்துள்ளார்.

"நான் உதவி இயக்குநராக இருந்த காலத்திலிருந்தே தனுஷூடன் எனக்கு பழக்கம் உள்ளது.. அண்ணன் தம்பி உறவு, குருசிஷ்யன் உறவு, என என்ன பெயர் வேண்டுமானாலும் அதற்கு வைத்து கொள்ளலாம். எனக்கு ஒருமுறை நிதி சிக்கல் வந்தபோது , ஒரு தயாரிப்பாளராக தனுஷிடம் பணம் கேட்டேன்" என்று வெளிப்படையாகவே வெற்றிமாறன் விளக்கம் தந்துள்ளார்.

இதுதான் வெற்றிமாறன்

ஒரு ஆட்டோ டிரைவரின் சொந்த வாழ்க்கையில் நடந்த சம்பவத்தை வைத்துதான் விசாரணை என்ற படம் எடுக்கப்பட்டது-. இதை எப்படி திரைக்கதையாக கொண்டுவந்திருக்க முடியும்? என்று பலருக்கும் ஆச்சரியம் எழுந்தது.. இந்த படத்தை பெர்லின் திரைப்பட விழாவில் ஒளிபரப்பப்பட்ட போது, மூலக்கதையை எழுதிய ஆட்டோ டிரைவரையும் பெர்லினுக்கே அழைத்து சென்று விட்டார் வெற்றிமாறன்.

அப்போது படம் பார்த்து அனைவரும் எழுந்து நின்று கை தட்டியபோது, இவர்தான் அந்த படத்தின் நாயகன் என்று சொல்லி, ஆட்டோ டிரைவரை அறிமுகப்படுத்தியிருக்கிறார்.. இதுதான் வெற்றி மாறனின் குணம்..

இப்படிப்பட்ட படைப்பாளியை , பொல்லாதவன் படத்திலிருந்தே தனுஷ் எந்த அளவுக்கு புரிந்து வைத்திருப்பார் பாருங்கள்.. ஒரு சிறந்த இயக்குனரின் உறவை 5 கோடி, 10 கோடிக்காகவெல்லாம் முறித்து கொள்ள முடியுமா? அப்படியே அந்த பணத்தை தந்தாலும், அதற்கு பிறகு இருவரும் சேர்ந்து படம் இணைந்து செய்ய முடியுமா?

நெற்றிக்கண் - ரஜினி

இங்கு ஒரு உதாரணத்தை சொல்ல விரும்புகிறேன். கே.பாலச்சந்தரின் கவிதாலயா நிறுவனம் தொடங்கியதுமே ரஜினியை வைத்து நெற்றிக்கண் என்ற படம் எடுப்பதாக பேசப்பட்டது. அப்போது தயாரிப்பு நிர்வாகத்தை கவனித்து கொண்டிருந்த பிரமிட் நடராஜன், இதுகுறித்து ரஜினியிடம் பேசியிருக்கிறார்.. கவிதாலயா என்றதுமே அதற்கு ரஜினி, அந்த படத்தில் நடிக்க தனக்கு 10 பைசா கூட தனக்கு வேண்டாம் என்றாராம்.

அதற்கு பிரமீடு நடராஜன், "பாலச்சந்தர் மீதுள்ள அன்பு காரணமாக நீங்கள் பணம் வாங்காவிட்டாலும், நாங்கள் அடுத்தடுத்து உங்களை வைத்துதான் நிறைய படங்களை எடுக்க போகிறோம். உங்களது மார்க்கெட் வேல்யூ என்னவென்பதை ஏவிஎம் நிறுவனம் மூலமாக அறிந்து கொண்டோம். இந்த தொகையை பெற்றுக் கொள்ளுங்கள்" என்று கட்டாயப்படுத்தி ரஜினிக்கு அட்வான்ஸ் பணம் தந்தாராம்.

ஆக, இத்தனை கோடி தந்தால்தான் படம் செய்வேன் என்று தனுஷ் வெற்றிமாறனை நிர்ப்பந்தித்தால், அடுத்து எப்படி இருவரும் படம் பண்ணுவார்கள்? தனுஷிடம் இல்லாத கோடிகளா? அப்படி நிர்ப்பந்தித்து பணம் பெற்றுக் கொள்ளக்கூடியவரா தனுஷ்? இதெல்லாம் சும்மா கட்டுக்கதை.. இதைத்தான் வெற்றிமாறன் இன்று வீடியோ மூலம் வெளிப்படுத்தியிருக்கிறார்" என்று தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+