இனியாவை நினைத்து கண்கலங்கிய கோபி.. ராதிகா எடுத்த முடிவு.. இப்படி ஒரு நிலைமை தேவை தானா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் தன்னுடைய மகள் இனியாவின் மீது வைத்திருக்கும் பாசத்தை குறித்து கோபி கண்கலங்கியபடி ராதிகாவிடம் பேசிக் கொண்டிருக்கிறார்.

கோபியின் மகள் பாசத்தை பார்த்ததும் கடுப்பான ராதிகா தன்னுடைய சுய கேரக்டரை காண்பிக்க தொடங்கி இருக்கிறார்.

மகளை நினைத்து கண் கலங்கிய கோபி

மகளை நினைத்து கண் கலங்கிய கோபி

பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட்டை ஆரம்பத்தில் மயூ கோபி இடம் உங்கள் இருவருக்கும் திருமணம் முடிந்து விட்டதா? என்று கேட்டுக் கொண்டிருக்கிறார். அதற்கு கோபி மற்றும் ராதிகா இருவரும் ஷாக் ஆகி, கோபி ஆமாம் உன் கண்ணு முன்னாடி தானே நான் உங்க அம்மாவுக்கு தாலி கட்டுனேன் என்று சொல்லும் போது, அப்ப நான் எதுக்கு உங்களை அங்கிள் என்று கூப்பிடுகிறேன். இனி உங்களை அப்பா என்று கூப்பிடவா? என கேட்டதும் கோபிக்கு சந்தோஷம் வருகிறது .கண்டிப்பா நீ இப்படி கூப்பிட வேண்டும் என்று தான் நானும் ஆசையாக எதிர்பார்த்தேன். இன்னொரு தடவை கூப்பிட்டு என்று மயூவை அப்பா என அழைக்க சொல்லி கேட்டு ரசிக்கிறார். அப்போது ராதிகாவும் அருகில் இருந்து ரசித்துக் கொண்டிருக்கிறார் .அதைத் தொடர்ந்து மயூ தூங்கிய பிறகு இனியாவை நினைத்து கண்கலங்கி ராதிகாவிடம் அழுது கொண்டிருக்கிறார்.

ராதிகாவின் வருத்தம்

ராதிகாவின் வருத்தம்

அடுத்த நாள் காலை மயூவின் ஸ்கூலுக்கு ராதிகா கிளம்பி இருக்கிறார். என்ன காரணம் என்று கேட்டதற்கு இன்று மயூவின் ஸ்கூலில் பேரன்ஸ் மீட்டிங் இருக்கிறது. நானும் வருகிறேன் என்று கூறுகிறார். அதற்கு கோபி அப்போ நீங்க ரெண்டு பேரும் போயிட்டு வாங்க நான் வரவில்லை என்று கூறுகிறார் .அதிர்ச்சியான ராதிகா ஏன் என்று கேட்கிறார் அங்கே நான் பலமுறை இனியாவுக்கு அப்பாவாக வந்திருக்கிறேன் .அதனால் இப்போ வரலை என்றால் தப்பா போய்விடும் என்று கூறுகிறார் .உடனே ராதிகா கண்கலங்கியபடியே மயூ உங்களை ரொம்பவே எதிர்பார்த்தாள். இதுவரைக்கும் நான் மட்டும்தான் தனியாக அவளுக்கு பேரன்ஸ் மீட்டிங்கு சென்று இருக்கிறேன் என்று கூறுகிறார்.

ஸ்கூலில் கிடைத்த அவமானம்

ஸ்கூலில் கிடைத்த அவமானம்

வேறு வழி இல்லாமல் கோபி பேரன்ஸ் மீட்டிங் செல்ல ஸ்கூலுக்கு செல்கிறார். அங்கே பாக்யாவுடன் இனியாவும் வந்து பைக்கில் இறங்குகிறார். அப்போது கால் தவறி இனியா கீழே விழ இருக்கிறார். உடனே பதறி போன கோபி, பார்த்து இனியா ! என்று கூறி கவனமா வண்டி ஓட்டக் கூடாதா என்று பாக்கியாவை திட்டுகிறார் .இதனால் கடுப்பான ராதிகா வாங்க போகலாம் என்று இழுத்தபடி போகிறார். பாக்யாவின் அப்பா வரவில்லையா? என்று இனியாவின் கிளாஸ்மேட் அம்மா கேட்கிறார் .அதற்கு பாக்கியா இல்லை என்று கூறுகிறார் .அடுத்து கோபி ராதிகாவோடு செல்வதை பார்த்த அந்தப் பெண் இனியா அப்பா வரவில்லை என்று சொன்னீங்க? ஆனா அவர் வந்திருக்கிறார் .ஆனால் உங்க கூட வராமல் எதற்கு அந்த பொண்ணு கூட போகிறார் என்று கேள்வி எழுப்புகிறார்.

ராதிகாவின் முகமாற்றம்

ராதிகாவின் முகமாற்றம்

அப்போது இனியாவின் வகுப்பு அருகே நடந்து வந்த கோபியை மையூ என்னுடைய கிளாஸ் இந்தப் பக்கம் இல்லை. இங்க வாங்க என்று வேறு பக்கமாக கூட்டிக்கொண்டு செல்கிறார். அப்போது இனியாவின் தோழி உங்க அப்பா வராரு என்று சொன்னதும் இனியா அதிர்ச்சியாகி இருக்கிறார். இனியாவை பார்த்ததும், நடந்து கொண்டிருந்த கோபி நின்று விடுகிறார். இதை பார்க்கும் ராதிகாவின் முகம் மாறிவிடுகிறது. இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைந்து இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+