கோபிநாத்துக்கு ஏறும் மவுசு.. விஜய் டிவியை அம்பானி ஏன் வாங்குனாரு தெரியுமா? இனி இந்த நிகழ்ச்சி வராதா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவி கைமாறி 4 மாதம் ஆகிவிட்டது என்றாலும், இன்னும் சேனல் பொலிவுபடுத்தப்படவில்லை.. இதற்கெல்லாம் இன்னும் 3 மாசத்தில் இதற்கு விடை கிடைத்துவிடும்" என்று பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். அத்துடன் கைமாறியிருக்கும் விஜய் டிவியில் இனிமேல் என்னென்ன நிகழ்ச்சிகள் ஒளிபரப்ப வாய்ப்புள்ளதாகவும் அந்த பேட்டியில் பாலாஜி பிரபு கூறியிருக்கிறார்.

Public Wing என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள பாலாஜி பிரபு, "விஜய் டிவியில் வந்தவர்கள் ஏராளமானோர் இன்று மிகப்பிரபலமாக இருக்கிறார்கள்.. விஜய் டிவியின் எல்லா நிகழ்ச்சிகளிலிருந்தும் வந்தவர்கள், இன்று சினிமாவில் கோலோச்சி வருகிறார்கள்.. சினிமா பிரபலமாக இல்லாவிட்டாலும்கூட, மக்களின் கவனத்தை அதிகமாக ஈர்த்துவிடுகிறார்கள்..

Television Gopinath Ambani

மணிமேகலை - பிரியங்கா சர்ச்சை

சமீபத்தில் மணிமேகலைக்கும், பிரியங்காவுக்கும் சர்ச்சை வெடித்தது. பிரியங்காவின் தலையீடு அதிகமாக உள்ளதே இதற்கு காரணம் என்று சொல்லி, இதை வைத்தே, சோஷியல் மீடியாக்களில் விவாதங்களும் நடந்தன. அந்த அளவுக்கு விஜய் டிவியின் நிகழ்ச்சிகளும், தொகுப்பாளர்களும், மக்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறார்கள்.

இப்போது, விஜய் டிவியை விட்டு பலரையும் வெளியே அனுப்ப துவங்கிவிட்டார்கள். இதற்கு காரணம், ஹாட் ஸ்டாரை ஜியோ வாங்கிவிட்டார்கள். ஹாட் ஸ்டாரில் ஐபிஎல் ஒளிபரப்பப்பட்டதால், ஐபிஎல் பார்ப்பதற்காகவே நிறைய பேர் ஹாட்ஸ்டாரை சப்ஸ்கிரைப் செய்தனர். ஆனால், ஐபில்லை ஜியோ சினிமாஸ் மூலமாக இலவசமாக தந்தார்கள். இதனால் ஹாட் ஸ்டார் டவுன் ஆகிவிட்டது.. சப்ஸ்ரைபர்களும் பெரிதாக சப்போர்ட் செய்யவில்லை. இந்த நஷ்டத்தை சமாளிக்கவே, ஹாட்ஸ்டாரே ஜியோவை தந்துவிட்டது.

அம்பானி கலர்ஸ் டிவி

அம்பானியின் கலர்ஸ் டிவி, ஸ்டார் விஜய்யை வாங்கியிருக்கிறது.. இதற்கு காரணம், தமிழகத்தில் செயல்பட்டு வரும் பெரிய பெரிய மீடியாக்கள் பெரும்பாலும் அம்பானியின் கைக்கு செல்ல வேண்டும் என்பதால்தான். இத்தனைக்கும் ஏற்கனவே கலர்ஸ் சேனல் தனியாக இயங்கி வருகிறது. அப்படியிருக்கும் ஹாட் ஸ்டாரை வாங்குவதற்கு சில காரணங்கள் உள்ளன. அப்படியானால், கலர்ஸ் சேனலையும், ஹாட் ஸ்டாரையும் ஒன்றாக இணைத்து செயல்படுத்தபபோகிறார்களா? என்ற சந்தேகம் எழலாம். அப்படி எதுவுமே இருக்காது.

கலர்ஸை பொறுத்தவரை, ஏராளமான நிகழ்ச்சிகளை நடத்தியும் பெரிதாக சோபிக்கவில்லை. ஆனால், விஜய் டிவி சக்ஸஸ் அதிகமாக உள்ளது.. எனவே, விஜய் டிவியில் விரைவில் மாற்றங்களை கொண்டுவர கலர்ஸ் விரும்புகிறது. இதில், முதல் மாற்றமாக, சென்னை வளசரவாக்கத்தில் இயங்க வரும் கலர்ஸ் டிவியை, ஈக்காட்டுத்தாங்கலில் இயங்கி வரும் விஜய் டிவி ஆபீசுக்கே கொண்டு வர போகிறார்களாம்.

குறைக்கப்படும் பணியாளர்கள், தொகுப்பாளர்கள்

இரண்டாவதாக, கலர்ஸ் டிவி நிகழ்ச்சிகள் குறைக்கப்பட்டுள்ளன., இதனால் அங்கு பணியாற்றும் பணியாளர்களிளின் எண்ணிக்கையையும் பாதியாக குறைத்துவிட்டனர்.. கலர்ஸ் டிவியின் பெரும்பாலான நிகழ்ச்சிகளை சுருக்கிவிட்டு, ஒரு டம்மி டிவியாக கலர்ஸ் சேனலை வைத்து கொண்டு, விஜய் டிவியின் பிரதான நிகழ்ச்சிகளை அதில் ஒளிபரப்பு செய்வார்கள். அப்படியானால் நீயா நானா கோபிநாத் தலைதப்பிப்பாரா? மகாபா தப்பிப்பாரா? தெரியவில்லை.

நீயா நானா நிகழ்ச்சியை கோபிநாத்துதான் நடத்த வேண்டும் என்று பலரும் விரும்புகிறார்கள். கோபிநாத்தை பொறுத்தவரைக்கும், அவருக்கு ஒரு மன வருத்தம் உள்ளது.. அதாவது, தமிழ்நாட்டில் இருந்து, தமிழ் பிரமுகர்களை தலைமை பொறுப்பில் வைத்தே விஜய் டிவியை இதுநாள் வரை செயல்படுத்தினார்கள்.. ஆனால், இனிமேல் மும்பையிலிருந்து விஜய் டிவியை நடத்த போகிறார்களாம். அதாவது மும்பையிலிருந்து வரும் உத்தரவுகளின்படியே, இங்கு சென்னையில் விஜய் டிவி சேனல் செயல்படும்.

மகாபா - பிரியங்கா

அதேபோல, குக் வித் கோமாளி நிகழ்ச்சியை மீண்டும் கலர்ஸ் சேனலில் கொண்டு வரப்போவதாகவும், மீண்டும் புகழை அந்த சேனலுக்கு கொண்டு வரப்போவதாகவும் சொல்கிறார்கள்.. சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தற்போது மகாபா, பிரியங்கா நடத்தி வரும்நிலையில், இதே சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை கலர்ஸ் சேனல் நடத்த போகிறதாம். ஆனால் மகாபா மட்டும் அதில் இடம்பெறுவார் என்றும், பிரியங்கா அந்த நிகழ்ச்சியில் பங்கேற்க மாட்டார் என்றும் சொல்கிறார்கள்.

பிரியங்கா, இப்போதைக்கு வெளியே சென்றது நிர்வாக மாற்றத்தினால் மட்டுமேதானே தவிர, அவரது திருமணத்தினால் கிடையாது. பிரியங்காவின் திருமணத்துக்கும், இந்த நிர்வாக மாற்றத்தக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை..

அதேசமயம், விஜய் டிவியில் இனி எந்தெந்த நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவார்கள்? எந்தெந்த நிகழ்ச்சிகளை நிராகரிக்க போகிறார்கள் என்று தெரியவில்லை. புது நிர்வாகம் வந்துள்ளதால், புது புது நிகழ்ச்சிகள், புதுபுது தொகுப்பாளர்களை பணியில் நியமிப்பார்கள்.

இன்னும் 3 மாதத்தில் விடை

மொத்தத்தில் விஜய் டிவிக்கு வேறு ஒரு வடிவம் கொடுக்கலாம் என்று திட்டமிட்டு வருகிறார்கள். ஆனால், ஒரு சேனலுக்கு வடிவம் கொடுப்பது என்பது அவ்வளவு சாதாரண விஷயம் கிடையாது.

ஏற்கனவே மக்களிடம் புகழ்பெற்ற சேனல்களை ஒரேடியாக தூக்கிபோட்டுவிட்டு, புது நிகழ்ச்சிகளை ஒளிபரப்பினால், அதை மக்கள் உடனடியாக ஏற்று ஆதரவு தருவார்களா தெரியவில்லை. எனவேதான், விஜய் டிவியின் ரசிகர்களின் கருத்தையும் கவனத்தில் கொண்டுதான் நிகழ்ச்சிகள் தீர்மானிக்கப்படும்..

விஜய் டிவி கைமாறி 4 மாதம் ஆகிவிட்டது என்றாலும், இன்னும் சேனல் பொலிவுபடுத்தப்படவில்லை.. இதற்கெல்லாம் இன்னும் 3 மாசத்தில் இதற்கு விடை கிடைத்துவிடும்" என்று தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+