நீயா நானா நிகழ்ச்சியை நான் டிவியில் கூட பார்க்க மாட்டேன், காரணம் இதுதான்! ஓபனாக பேசிய கோபிநாத்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நீயா நானா நிகழ்ச்சியை கோபிநாத் தொகுத்து வழங்கி வருகிறார். அவர் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசும் போது தான் தொகுத்து வழங்கி வரும் நீயா நானா நிகழ்ச்சியை இதுவரைக்கும் டிவியில் பார்க்கவே மாட்டேன், அதற்கு காரணம் இதுதான் என்று சில விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார். இது பலரையும் ஆச்சரியப்பட வைத்திருக்கிறது.

ரியாலிட்டி நிகழ்ச்சிக்கு பெயர் வாங்கிய விஜய் டிவியில் நீயா நானா நிகழ்ச்சிக்கு என்று தனி ரசிகர்கள் இருக்கின்றனர். இந்த நிகழ்ச்சி கடந்த 10 வருடங்களுக்கு மேலாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியை தொகுப்பாளர் கோபிநாத் தான் தொகுத்து வழங்கி வருகிறார். ஆரம்பத்தில் இந்த நிகழ்ச்சி சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமையில் ஒளிபரப்பாகி வந்த நிலையில் இப்போது ஞாயிற்றுக்கிழமை மட்டும் ஒளிபரப்பாகி வருகிறது.

Vijay TV Neeya Naana

அடிப்படை விவாதங்கள்

ஒவ்வொரு வாரமும் இந்த நிகழ்ச்சியில் மக்களின் அன்றாட வாழ்க்கையில் நடக்கும் அவலங்கள், சந்தோஷங்கள் துக்கங்கள் என பல விஷயங்களில் இருந்து விவாதங்கள் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்வதற்காக பலர் ஆர்வத்தோடு முயற்சிக்கிறார்கள். இந்த நிகழ்ச்சியின் மூலமாக பலர் பிரபலங்களாக மாறி இருக்கிறார்கள். தங்களுடைய உள்ளத்தில் இருக்கும் குமுறல்களை இந்த நிகழ்ச்சியில் கொட்டுவதால் பல கோடி மக்களை சென்றடையும் என்பதற்காக பலர் இதற்கு இதில் கலந்து கொள்கிறார்கள்.

அந்த எபிசோடு காணவில்லை

அதுபோல நீயா நானா நிகழ்ச்சி பல நேரங்களில் வைரல் கண்டன்டையும் கொடுத்திருக்கிறது. ஆனால் சில வாரங்களுக்கு முன்பு முன்மொழிக் கொள்கை பற்றிய விவாதம் நடைபெற்றது. ஆனால் அந்த எபிசோடு இப்ப வரைக்கும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகவில்லை. இது எதற்காக என்பது பலருடைய கேள்வியாக இருக்கிறது. யாருடைய தலையீட்டால் விஜய் டிவி மும்மொழி கொள்கை எபிசோடை வெளியிடவில்லை என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

நிகழ்ச்சி பார்த்தது கிடையாது

இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் கோபிநாத் நான் இந்த நிகழ்ச்சியை இதுவரைக்கும் டிவியிலோ, ஹாட்ஸ்டாரிலோ பார்த்தது கிடையாது என்று கூறியிருக்கிறார். அதற்கு என்ன காரணம் என்று அவர் சொல்லும்போது, நான் நீயா நானா நிகழ்ச்சியை டிவியில் பார்க்கவே மாட்டேன். அதற்கு காரணம் இந்த இடத்தில் நாம இப்படி பேசி இருக்கலாம், அந்த இடத்தில் அப்படி பேசி இருக்கலாம் என்ற ஒரு சிந்தனை தோன்றிவிடும்.

தவறான சிந்தனை

சில இடங்களில் பார்க்கும்போது இந்த கோட்டை நம்ம இப்படி போட்டு இருக்கக் கூடாது. இந்த இடத்தில் இது போல ஸ்டைல் செய்து இருக்கலாம். எதிர் தரப்பினர்களிடம் நாம் இப்படி பேசியது தவறு என்றெல்லாம் சிந்தனைகள் உருவாகத் தொடங்கிவிடும். அப்படி தோன்றி விட்டால் அடுத்த முறை அதை சரி செய்ய வேண்டும் என்பதற்காக நாம் ஏதாவது முயற்சிப்போம் அது சொதப்பலைதான் செய்யும்.

Vijay TV Neeya Naana

வைரல் கண்டண்ட்

ஆனால் ரியாலிட்டி எப்படியோ அதை அப்படியே வெளிப்படுத்த வேண்டும் என்பதுதான் நீயா நானா டீமின் எதிர்பார்ப்பு. அதற்காக நாங்கள் அப்படித்தான் செய்து கொண்டிருக்கிறோம். அதனால் நான் இந்த நிகழ்ச்சியை பார்க்க வேண்டும் என்று விருப்பப்படவே மாட்டேன். சில நேரங்களில் சில கண்டண்ட் வைரலாகி இருக்கிறது. அந்த நேரத்தில் பலர் எனக்கு அந்த வீடியோக்களை அனுப்பி வைப்பார்கள்.

Vijay TV Neeya Naana

கோபிநாத் அட்வைஸ்

சோசியல் மீடியாக்களில் கூட அந்த வீடியோக்கள் ட்ரெண்டாகும் போது என் கண்ணில் பட்டு இருக்கிறது. ஆனால் நான் எப்போதுமே டிவியில் ஹாட்ஸ்டாரில் அந்த எபிசோடை உட்கார்ந்து பார்த்துக்கொண்டு இருப்பது கிடையாது. இதை நாம இப்படி செய்யக்கூடாது என்ற சிந்தனை நம்முடைய மனதிற்குள் வந்துவிடும். அது போல ஒரு செயலை செய்கிறோம் என்றால் அதை அப்படியே கடந்து விட வேண்டும். நடந்து முடிந்த பிறகு நாம் அதை மாற்றி இருக்கலாம் இதை மாற்றி இருக்கலாம் என்று யோசித்து கொண்டு இருந்தால் ஒரு பிரயோஜனமும் கிடையாது. இது அடுத்த வேலையையும் கெடுத்துவிடும் என்று கோபிநாத் அட்வைஸ் கொடுத்திருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+