தந்தை இறந்த நேரத்திலும் கோபிநாத் செய்த செயல்.. கடமை உணர்வுக்கு அளவில்லையா? வியக்கும் காரணம்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நீயா நானா நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருக்கும் கோபிநாத் அவருடைய தந்தை மறைவின் போது செய்த செயல் குறித்த செய்தி தான் இப்போது இணையத்தில் பலராலும் பேசப்பட்டு வருகிறது. அதாவது தந்தை இறந்த சில நாட்களில் கோபிநாத் சூட்டிங்கில் கலந்து கொண்டிருக்கிறார். அதற்கு அவர் சொன்ன காரணம் தான் இப்போது பலரையும் வியக்க வைத்திருக்கிறது.
நீயா நானா கோபிநாத்துக்கு அறிமுகமே தேவை இல்லை. இவர் கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் விஜய் டிவியில் நீயா நானா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். அதற்கு முன்பு ஜெயா டிவி உட்பட ஒரு சில சேனல்களில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருந்தார். ஆனால் நீயா நானா நிகழ்ச்சியின் மூலம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலதரப்பட்டவர்களுக்கும் பிரபலமாக மாறி இருக்கிறார்.

சினிமா வாய்ப்பு
அதுபோல நீயா நானா நிகழ்ச்சியின் வெற்றிக்கு பிறகு இவருக்கு ஒரு சில திரைப்படங்களிலும் நடிக வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இவருடைய தனித்துவமான குரல் இவருக்கு பிளஸ் பாயிண்ட் ஆக இருக்கிறது. அதுபோல கோட் போட்ட நாட்டாமையாக இரண்டு தரப்பு நியாயத்தையும் கேட்டு இவர் பதில் சொல்லும் விதமும் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது. நீயா நானா நிகழ்ச்சியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக கோபிநாத் தான் இருந்து வருகிறார்.
கோபிநாத்தின் தந்தை இறப்பு
கோபிநாத்தின் தந்தை சந்திரன் ஒரு சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அதிலும் நடிகர் சூரி, விஷ்ணு விஷால் உட்பட பலர் நடித்து பிரபலமடைந்த வெண்ணிலா கபடி குழு திரைப்படத்திலும் முக்கிய கேரக்டரில் நடித்திருப்பார். அந்த திரைப்படத்தில் கபடி வீரர்களுக்கு தங்களுடைய கிராமத்தில் விருந்து வைக்கும் கேரக்டரில் கோபிநாத்தின் அப்பாதான் நடித்திருந்தார். இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் உடல்நிலை குறைபாட்டால் காலமானார்.

கடமை உணர்வு
கோபிநாத்தின் அப்பா மறைவால் அவருடைய ஒட்டுமொத்த குடும்பத்தினரும் அதிர்ச்சியில் இருக்கும் நேரத்தில் தந்தையின் காரியம் முடிந்த மூன்று நாட்களிலேயே கோபிநாத் சூட்டிங் கிளம்பி விட்டாராம். அதற்கு காரணம் நீயா நானா ஷூட்டிங் நின்று விடக்கூடாது, இந்த நிகழ்ச்சியை எதிர்பார்த்து பல மக்கள் காத்திருக்கிறார்கள் அவர்களுக்கு ஏமாற்றத்தை கொடுக்க கூடாது என்பதற்காக சூட்டிங் கிளம்பி விட்டாராம்.
கோபிநாத்தின் அண்ணன்
இந்த தகவல் இணையத்தில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. அதுபோல கோபிநாத்தின் அண்ணனும் சீரியல் மற்றும் சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கிறார் என்பது ஒரு சிலருக்கு தெரிந்திருக்கும். அதிலும் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மூன்று முடிச்சு சீரியலில் கதாநாயகனின் அப்பாவாக நடித்துக் கொண்டிருப்பவர்தான் கோபிநாத்தின் சகோதரர்.
கோபிநாத்தின் அட்வைஸ்
அதுபோல கோபிநாத் மோட்டிவேஷனாக பேசிக் கொண்டிருப்பார். ஆனாலும் தன்னுடைய தந்தை பற்றி அவர் பல இடங்களில் பெருமையாக பேசுகிறார். அவருடைய இறப்பால் தான் வருத்தத்தில் இருந்தாலும் அடுத்து என்ன நடக்க வேண்டுமோ அதை செய்தாக வேண்டும், ஒரு கஷ்டம் நடந்து விட்டது இனி அதை எதுவும் செய்ய முடியாத சூழ்நிலை இருக்கும் நிலையில் உடைந்து போய் அதே இடத்தில் அழுது கொண்டு இருந்தால் வாழ்க்கையில் அனைவருக்கும் கஷ்டம் என்று கோபிநாத் கூறி இருக்கிறார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications