18 வருட மேனேஜரை நள்ளிரவில் அடித்து விரட்டிய மூன்றெழுத்து நடிகர்! வருங்கால மனைவியால் வெளிவந்த உண்மை!
சென்னை: தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் தனது 18 வருட கால மேனேஜரை நள்ளிரவில் அடித்து விரட்டிய தகவல் ஒன்இந்தியாதமிழுக்கு பிரத்யேகமாக கிடைத்துள்ளது.
நம்பிக்கை துரோகம் என்பது பெரிய ஒரு ஏமாற்றம். நாம நம்புறவங்க நம்ம கூடவே இருந்து ஏமாத்துறாங்க என்பது தெரிய வரும்போது பெரிய அளவில் வருத்தத்தை ஏற்படுத்தும். அதே போலத்தான் இப்போ ஒரு நடிகருக்கு உருவாகி இருக்கிறது. இந்த நடிகர்,
இயக்குனர், தயாரிப்பாளர் என்று பல திறமை உள்ளவர்தான். ஒரு படத்தில் அவர் பாடி இருந்தார் அந்த படம் பல வருடங்களுக்கு இப்போது தான் ரிலீஸ் செய்யப்பட்டு பெரிய அளவில் வெற்றி பெற்றது.

அதுபோல சில நேரங்களில் ஏதாவது பேசி சர்ச்சைகளிலும் சிக்கி இருக்கிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவர் ஒரு நிகழ்ச்சியில் பேசும் போது அவருடைய உடல்நிலையில் பிரச்சனை ஏற்பட்டது. அந்த நேரத்தில் பெரிய அளவில் பேசப்பட்டது. அவர் குறித்து பல வதந்திகளும் கூட பரவி வந்தது. ஆனால் அதெல்லாம் உண்மையே இல்லை என்று தன்னுடைய படத்தின் வெளியீட்டின் போது கெத்தாக மீண்டு வந்தார்.
அதற்கு பிறகு அவர் பல வருடங்களாக ரகசியமாக காதலித்து வந்த காதலியோடு எங்கேஜ்மென்ட்டும் செய்திருக்கிறார். அவர் எங்கேஜ்மென்ட் செய்த நான்கெழுத்து நடிகையையும் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பெற வேண்டும் என்று போராடிக் கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில் தான் அந்த நடிகரின் காலை சுற்றிய பாம்பு போல மேனேஜர் என்ற போர்வையில் 18 வருஷமாக ஒருவர் இருந்திருக்கிறார். இவருடைய பெயர் கடவுள் நாராயணனின் அம்சத்தை குறிக்கும் இரண்டு எழுத்து பெயர்.
அந்த மேனேஜர் பல வருடங்களாக பணமோசடி செய்து கொண்டிருந்தார். இது குறித்து சம்பந்தப்பட்ட நடிகரிடம் அவருடைய நலம் விரும்பிகள் சொல்லி இருக்கிறார்கள். ஆனால் அந்த நடிகருக்கு மேனேஜர் மீது அவ்வளவு நம்பிக்கை இருந்திருக்கிறது அதனால் இந்த விஷயத்தை அவர் நம்பவே இல்லையாம்.
ஆனாலும் தொடர்ந்து புகார் வர அது பற்றி நடிகர் மேனேஜர் கிட்ட பேசும் போது கூட அதற்கு பாசாங்கு செய்து அந்த நடிகரிடமே நடிப்பு காட்டி இருக்கிறார் மேனேஜர்.
இதனால் இவர் ரொம்ப... நல்லவன்... என்று அந்த மேனேஜரை நடிகரும் நம்பி இருந்திருக்கிறார். ருசி கண்ட பூனை சும்மா இருக்குமா? தொடர்ந்து அந்த மேனேஜர் பண மோசடி செய்து கொண்டு இருந்திருக்கிறார்.
இந்த நிலையில்தான் அந்த நடிகருக்கு எங்கேஜ்மென்ட் நடந்திருக்கிறது. எங்கேஜ்மென்ட் முடிந்த பிறகு சில ஆதாரத்துடன் சிலர் அந்த நடிகையிடமே போய் பேசி இருக்கின்றனர்.

அதற்குப் பிறகு அந்த நடிகை சம்பந்தப்பட்ட நடிகரிடம் எடுத்து சொல்லி புரிய வைத்திருக்கிறார். சில ஆதாரங்களையும் காட்டி இருக்கிறார். இதனால் கோபமான நடிகர் சண்டை கோழியாக திமிரி நள்ளிரவில் மேனேஜரை அடித்து விரட்டி இருக்கிறார். இது குறித்து கம்ப்ளைன்ட் கூட அந்த நடிகர் கொடுக்கப் போவதாகவும் கூறப்படுகிறது.

18 வருஷமாக சம்பளம் கொடுத்து பாதுகாத்த ஒரு டாப் நடிகரை இப்படி ஏமாற்ற அந்த மேனேஜருக்கு எப்படித்தான் மனசு வந்ததோ தெரியல! ஆனாலும் சம்பவம் நடந்து சில நாட்கள் ஆனாலும் இது பற்றி இன்னும் அந்த நடிகர் வெளிப்படையாக பேசல.
இது அந்த மேனேஜரை காப்பாற்றவா? அல்லது தான் வைத்த நம்பிக்கை உடைந்து விட்டதே என்ற விரக்தியில் இருக்கிறாரா? என்று தெரியவில்லை. ஆனாலும் "கத்திரிக்காய் முற்றினால் கடைவீதிக்கு வந்து தான் ஆகணும்" என்பது போல இந்த விஷயம் இப்போ சினிமா உலகில் லீக் ஆகி இருக்கிறது. இனி அந்த நடிகர் என்ன முடிவெடுக்க போகிறார் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
-
இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கல.. விரக்தியில் விக்னேஷ் சிவன் போட்ட பதிவு.. குவியும் ஆறுதல் -
அமைதியா இருங்க... இல்லன்னா.. 83வது பிறந்தநாளில் ரசிகர்களிடம் கடுப்பான இளையராஜா! -
“வைகை அணையில் கூலி வேலை பார்த்த இளையராஜா, இசைஞானி ஆனது எப்படி? முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா?” -
அஜித் மாதிரி யாராலும் இருக்க முடியாது.. சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம்.. ரகசியங்களை உடைத்த பிரபலம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications