சைந்தவியை பிரிய காரணம் “அந்த” நடிகையா? முதல் முறை ஓபனாக விளக்கம் கொடுத்த ஜிவி பிரகாஷ்
சென்னை: நடிகராகவும் இசை அமைப்பாளராகவும் பிரபலம் அடைந்து கொண்டிருக்கும் ஜிவி பிரகாஷ் அவருடைய மனைவி சைந்தவியை பிரிந்து வாழ்வதற்கு காரணம் பிரபல நடிகை திவ்யா பாரதி என்று பரவி வந்த வதந்திகளுக்கு முதல் முறையாக மறுப்பு தெரிவித்து ஜிவி பிரகாஷ் பேசி இருக்கிறார். அதோடு தனக்கும் அந்த நடிகைக்கும் என்ன தொடர்பு என்பது பற்றியும் விளக்கம் கொடுத்திருக்கிறார்.
பொதுவாக பிரபலங்கள் என்றாலே அவர்கள் பற்றிய வதந்திகளுக்கும் கிசுகிசுக்களுக்கும் பஞ்சமே இருக்காது. பிரபலங்கள் வீட்டில் சாதாரண மக்களை போலவே சின்ன சின்ன பிரச்சனைகள் இருந்தாலும் கூட பலர் அதை பற்றி இல்லாதது பொல்லாதது எல்லாம் பேசி பெரியதாக்கி விடுவார்கள்.

அது போல தான் சில மாதங்களுக்கு முன்பு இசை அமைப்பாளர் ஜிவி பிரகாஷ் மற்றும் அவருடைய மனைவி சைந்தவி இருவரும் பிரிந்த போது இவர்கள் பற்றிய பல்வேறு வதந்திகள் பரவி வந்தது. இவர்கள் இருவரும் தங்களுடைய திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக நாங்கள் பிரிந்து கொள்கிறோம், ஆனால் நாங்கள் நண்பர்களாக எங்கள் வாழ்க்கையில் தொடர்வோம் என்று பதிவு வெளியிட்டிருந்தனர்.
ஆனாலும் ஜிவி பிரகாஷ் உடைய நடவடிக்கைகளால் தான் சைந்தவி அவரை பிரிந்து விட்டார் என்றும் ஜி.வி பிரகாஷுக்கு நடிகை திவ்யபாரதியுடன் தொடர்பு இருக்கிறது என்றும் சிலர் youtube களில் பேசிக் கொண்டிருந்தனர். இதனால் கோபமான சைந்தவி நாங்கள் இருவரும் சில தனிப்பட்ட காரணங்களால் பிரிந்து இருக்கிறோம். ஆனால் ஜிவி பிரகாஷ் உண்மையில் நேர்மையானவர் தான்.

அவரைப் பற்றி எந்த இடத்திலும் யாரும் தவறாக பேச வேண்டாம் எங்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் யாரும் தலையிடாதீர்கள் என்று பதிவு வெளியிட்டிருந்தார். இப்படியான நிலையில் ஜிவி பிரகாஷ் தொடர்ந்து தன்னுடைய இசையிலும் படங்கள் நடிப்பிலும் கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறார். சில மாதங்களுக்கும் முன்பு கூட வெளிநாட்டில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ஜிவி பிரகாஷ் மற்றும் சைந்தவி இருவரும் பிறை தேடும் நிலவிலே என்ற பாடலை பாடி இருந்தனர். அப்போது பெரிய அளவில் பேசப்பட்டது.
இந்த நிலையில் இப்போது ஜிவி பிரகாஷ் மற்றும் திவ்யபாரதி இணைந்து நடிக்கும் கிங்ஸ்டன் என்ற திரைப்படத்தின் பிரமோஷன் வேலைகளில் பிஸியாக இருக்கிறார். இந்த நிலையில் பேட்டி ஒன்றில் பேசும் போது தன்னை பற்றி பரவி வரும் வதந்திகளுக்கு மறுப்பு தெரிவித்திருக்கிறார். அதில் ஜிவி பிரகாஷ் பேசுகையில், நான் பேச்சுலர் திரைப்படத்தில் நடிக்கும் போது திவ்யபாரதியோடு சேர்ந்த நடித்ததால் தான் எனக்கும் சைந்தவிக்கும் பிரச்சினை என்று சிலர் கூறி வந்தார்கள் அது உண்மை இல்லை.

பேச்சுலர் படத்திற்கு பிறகு நான் திவ்யபாரதியை கிங்ஸ்டன் படத்தில் தான் பார்த்தேன். வெளியில் நாங்கள் சந்தித்துக் கொண்டது கிடையாது. ஆனாலும் எங்களைப் பற்றி செய்திகள் வரும்போது திவ்யபாரதி அந்த மெசேஜை ஜிவி பிரகாஷுக்கு தான் அனுப்புவாராம். எல்லோரும் என்னை பற்றி தான் சொல்றாங்க என்று கூறுவாராம். இவ்வளவுதான் எங்களுக்குள் உள்ள உறவு என்று ஜிவி பிரகாஷ் கூறியிருக்கிறார்.
அதோடு பேச்சிலர் படத்திற்கு பிறகு மீண்டும் திவ்யபாரதியை ஏன் கிங்ஸ்டன் படத்திலும் தேர்வு செய்தீர்கள் என்று கேட்கப்பட்ட கேள்விக்கு அந்த படத்தில் இருந்த விஷுவல் ரொமான்ஸ் எல்லாம் அந்த படத்திற்கு ஒர்க்கவுட் ஆனது. அதனால் இந்த படத்திலும் திவ்யபாரதி இருந்தால் சரியாக இருக்கும் என்று பட குழு முடிவு செய்தது என்று ஜீவி பிரகாஷ் கூறியிருக்கிறார்.

இது பற்றி திவ்யபாரதி பேசுகையில் ஜிவி பிரகாஷ் சாரோடு சேர்ந்து நடிப்பதால் தவறாக பேசினார்கள். எனக்கு பிறை தேடும் சாங் ரொம்ப பிடிக்கும். ஜிவி பிரகாஷ் சாரும் சைந்தவி மேமும் ஒன்றாக கான்செஸ்ர்ட் பண்றாங்க என்னும்போது எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது. இதுக்கு மேல நம்மளை டார்கெட் பண்ண மாட்டாங்க என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.
ஆனால் இப்ப ரொம்ப அதிகமாயிடுச்சு. குறிப்பா பொண்ணுங்க தான் ரொம்ப என்னை டார்கெட் பண்றாங்க. ஏன் இப்படி பண்றீங்க? அவங்க செம்ம ஜோடி தெரியுமா? ஏன் நீங்க போய் இப்படி கெடுத்தீங்க என்றெல்லாம் கமெண்ட் பண்ணுவாங்க. நான் எதுவும் ரிப்ளை எல்லாம் பண்ண மாட்டேன். பார்த்துட்டு அப்படியே விட்டுவிடுவேன் என்று திவ்யபாரதி பேசியிருக்கிறார்.

-
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல்












Click it and Unblock the Notifications