பர்சனல் பிரச்சனை! எல்லாரிடமும் சொல்ல முடியாது.. காரணம் எமோஷனல் தான்.. ஜிவி பிரகாஷ் ஓபன்
சென்னை: நடிகராகவும் இசையமைப்பாளராகவும் கலக்கிக் கொண்டிருக்கும் ஜிவி பிரகாஷ் தன்னைப் பற்றிய விமர்சனங்கள் குறித்து பேட்டி ஒன்றில் வெளிப்படையாக பேசி இருக்கிறார். அதோடு தன்னுடைய பாடல்கள் எல்லாமே மெலடி பாடல்களாக இருப்பதற்கு என்ன காரணம் என்று கேள்விக்கும் விளக்கம் கொடுத்திருக்கிறார்.
இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷின் பாடல்களுக்கு என்று அதிகமான ரசிகர்கள் இருக்கிறார்கள். இவருடைய ஒவ்வொரு பாடல்களும் மனதில் இருக்கும் காதலையும், அன்பையும் வெளியே கொண்டு வரும். அதுபோல சில பாடல்கள் மீண்டும் மீண்டும் கேட்பது தூண்டும் வகையில் இருக்கும். சந்தோஷத்தையும் துக்கத்தையும் சேர்ந்த ஒரு கலவையை இவருடைய பாடல்கள் கொடுக்கும்.

அதனாலயே இவர் இன்னும் அதிகமான பாடல்கள் கொடுக்க வேண்டும் என்பது பலருடைய எதிர்பார்ப்பாக இருக்கிறது. இந்த நிலையில் ஜிவி பிரகாஷ் பேட்டி ஒன்றில் கலந்து கொண்டு பல்வேறு விஷயங்கள் பற்றி பேசி இருக்கிறார். அதில் நடிப்பு மற்றும் இசைஅமைப்பு என ஜிவி பிரகாஷ் பிஸியாக இருந்தாலும் அடிக்கடி விமர்சனத்திற்குள் சிக்குவது குறித்து கேள்விக்கு பதில் அளித்திருக்கிறார்.
அப்போது உண்மையிலேயே விமர்சனங்கள் ஒவ்வொரு மனிதனுக்கு தேவைப்படுகிறது. ஏனென்றால் அந்த விமர்சனத்தை எடுத்துக் கொண்டுதான் நம்மை நாம் சரி செய்து கொள்ளலாம். ஒரு பாடலில் விமர்சனம் இருந்தால் அதை ஏற்றுக்கொள்ளலாம். அதுவே பர்சனல் விமர்சனம் என்றால் அதை எல்லார்கிட்டயும் போய் விவரிச்சுக்கிட்டு இருக்க முடியாது.
நான் என் பர்சனல் விஷயத்தை எல்லாரிடமும் சொல்ல வேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை. பர்சனல் என்பது பர்சனல் தான். நான் அரசியல் சார்ந்து ஒரு கருத்து சொல்கிறேன் என்றால் உடனே சிலர் இவருக்கு அரசியல் சார்ந்த பின்னணி இருக்கு என்று நினைப்பார்கள். ஆனால் அப்படி எனக்கு எந்த அரசியல் பின்னணியும் கிடையாது என்று விளக்கம் கொடுத்திருக்கிறார்.

அதுபோல ஜிவி பிரகாஷ் பாடல்கள் அதிகமாக மெலடி பாடல்களாக இருப்பதற்கு என்ன காரணம் என்ற கேள்விக்கும் பதில் கொடுத்திருக்கிறார். அதில் என்னுடைய பாடல்கள் மெலடி கிங்காக இருப்பதற்கு எமோஷனல் தான் காரணம். ஒரு எளிமையாக வொர்க்காகும் எமோஷனலை கொடுத்தால் அதை தாண்டி எதுவுமே கிடையாது. அதுதான் கிளாசிக் ஃபார்பாம்ன்னு என்று சொல்லுவாங்க.
எனக்கு அங்காடித்தெரு படத்தில் கதைகளை பேசும் விழி அருகே பாடல் ரொம்ப பிடிக்கும். அந்த பாடல் ரொம்பவும் நல்லா இருக்கும். முத்துக்குமார் சாருடைய வரிகளும் அந்த டியூனும் எனக்கு ரொம்ப பிடிச்ச பாடல். அதுபோல உன் பெயரை சொல்லும்போது, அன்பே அன்பே, பிறை தேடும் இரவிலே போற்ற பாடல்கள் நான் அடிக்கடி கேட்கும் பாடல்கள் என்று கூறி இருக்கிறார்.

ஜிவி பிரகாஷ் இசையமைப்பாளராக பல பாடல்களை இசை அமைத்திருந்தாலும் அவர் நடிகராக மாறி 25 படங்களை நடித்திருக்கிறார்
அதிலும் 25 ஆவது படமாக கிங்ஸ்டன் படம் வரும் மார்ச் 7ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. அதை ஒட்டி இந்த திரைப்படத்திற்காக ப்ரமோஷன் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வரும் ஜிவி பிரகாசுக்கு கிங்ஸ்டன் திரைப்படம் வெற்றி அடைய ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.
-
சிறகடிக்க ஆசை: விஜயா ஆட்டத்தை அடக்க வரும் புது மருமகள்.. சரியான பதிலடி கொடுத்த மீனா! சந்தோஷத்தில் மனோஜ் -
கேஸ் சிலிண்டர் புக்கிங்கில் 35 நாட்கள் இடைவெளி.. புதிய 5 ரூல்ஸ் தெரியுமா? மானியம் வரவில்லைனா உஷார் -
சவுதி அரேபியாவுக்கு வேட்டு வைக்கும் ஈரான்.. சூயஸ் கால்வாய்-க்கு செக்.. ஹாட்ஸ்பாட் ஆக மாறும் பாப் அல்-மண்டப்! -
தமிழக தேர்தல்.. எந்த கட்சிக்கு அரியணை ஏறும் வாய்ப்பு.. இதுவரை வந்த கருத்து கணிப்புகள்.. சொல்வது என்ன? -
கூட்டணி மாறியதால் தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட் கொடுக்கலை! ஆனால் அது உண்மைதான்! எடப்பாடி பழனிசாமி -
நகைக்கடன் வைத்த 3 பேரில் ஒருவர் கவனிக்கலனா பிரச்சனை? RBI எச்சரிக்கை என்ன சொல்கிறது? -
எத்தனை வருட சோகம்.. எவ்வளவு டிரைவர்கள் ஏக்கம்.. முடிவிற்கு வரும் தொப்பூர் கணவாய் கொடூரம்.. எப்படி? -
ரூ.1 லட்சம் கோடி இழப்பை சந்தித்த அம்பானி குடும்பம்.. பங்குச் சந்தையில் என்ன நடந்தது? -
2005ல் பல்லாவரம் ரேடியல் சாலையில் 10 லட்சத்திற்கு இடம் வாங்கியிருந்தால் இன்று என்ன விலை தெரியுமா? -
பலரின் வேட்புமனு நிராகரிக்கப்படலாம்.. போச்சு விஜய் தவெகவிற்கு இருக்கும்... பெரிய சிக்கலே இதுதான்! -
நேரம் பார்த்து அடிக்கும் சவுதி அரேபியா.. இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயரும் அச்சம்? -
அரசு பேருந்தில்.. வழித்தட டிஸ்ப்ளேவில் 'தவெக' என ஓடியதால் ஷாக்! போக்குவரத்துக் கழகம் விளக்கம்












Click it and Unblock the Notifications