லண்டன் நிகழ்ச்சியில் சைந்தவியை பார்த்த அந்த நொடி! பிரிந்தாலும் மாறாத மரியாதை! ஜிவி பிரகாஷ் நெகிழ்ச்சி
சென்னை: இயக்குநர் மு.மாறன் இயக்கத்தில், இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி. பிரகாஷ், கதாநாயகி தேஜு அஸ்வினி நடிப்பில் உருவாகியுள்ள 'பிளாக் மெயில்' திரைப்படம், வரும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. சாம் சி.எஸ் இசையமைத்துள்ள இந்தப் படத்தில், ஒரே ஒரு பாடலுக்கு டி.இமான் இசையமைத்துள்ளார். படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியாகி, படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

பிளாக் மெயில்- துரோகம் குறித்த கதை
'பிளாக் மெயில்' திரைப்படம் குறித்து Behindwoods TV யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் ஜி.வி. பிரகாஷ் மனம் திறந்து பேசினார். "பிளாக் மெயிலை நாம் வாழ்க்கையில் ஏதாவது ஒரு சந்தித்து இருப்போம். அதைத்தான் இந்த படத்தில் இயக்குநர் அழகாகச் சொல்லி இருக்கிறார். படத்தின் கதை கேட்டதும், எனக்கு மிகவும் பிடித்துவிட்டதால், இந்த படத்தில் நடிப்பதற்கு ஓகே சொல்லிவிட்டேன்," என்றார்.
மேலும், "நம்மைப் பற்றித் தெரியாதவர்கள் யாரும் நமக்குத் துரோகம் செய்ய மாட்டார்கள். ஆனால், நமக்குத் தெரிந்த, நாம் உயிராக நினைத்த நண்பர் நமக்குத் துரோகம் செய்வான். அவன் தான் நமக்கு பெரிய எதிரியாகவே இருப்பான் என்பதைத் தான் இந்த படத்தில் சொல்லி இருக்கிறோம்," என்று படத்தின் மையக்கருத்தை விளக்கினார். தனது சொந்த அனுபவம் குறித்துப் பேசிய ஜி.வி. பிரகாஷ், "இந்த உலகத்தில் இருக்கிறோம் என்றால், நிச்சயம் பல துரோகத்தை நாம் சந்தித்து கடந்து தான் வந்திருப்போம். ஆனால், அந்தத் துரோகம், நாம் உயிராக நினைத்த நண்பரிடம் இருந்தோ, உறவிடம் இருந்தோ, யாரிடம் இருந்து வருகிறது என்பதைப் பொருத்துத்தான் அதன் வலி இருக்கும். அதுவும் ஒரு கட்டத்திற்கு மேல் புரிந்து விட்டதால், நாம் நம் வாழ்க்கையில் அடுத்து என்ன செய்யப்போகிறோம் என்பதை நோக்கி நடக்க ஆரம்பித்து விட்டேன்," என்று உணர்வுபூர்வமாகத் தெரிவித்தார்.
சைந்தவியுடனான சந்திப்பு
அண்மையில், லண்டனில் ஜி.வி. பிரகாஷ் நடத்திய இசைக் கச்சேரி ஒன்றில், அவரது முன்னாள் மனைவியும், பாடகியுமான சைந்தவி கலந்து கொண்டு பாடியது சமூக வலைத்தளங்களில் வைரலானது. அப்போது, இருவரும் நேருக்குநேர் பார்த்துச் சிரித்துக் கொண்ட வீடியோ இணையத்தில் டிரெண்டானது. இதுபற்றிப் பேட்டியில் கேள்வி எழுப்பப்பட்டபோது, ஜி.வி. பிரகாஷ் மிகத் தெளிவாகப் பதிலளித்தார்.
பள்ளித் தோழிக்கு மரியாதை
"சைந்தவியை எனக்கு 2001-ல் இருந்து தெரியும். அவர் என் பள்ளித் தோழி என்பதால், அவருக்குக் கொடுக்க வேண்டிய மரியாதை, கௌரவத்தை நான் கொடுக்கிறேன். அவர் ஒரு திறமையான பாடகி. அவருக்குக் கொடுக்க வேண்டிய மரியாதையை நான் எப்போதும் கொடுப்பேன்," என்று ஜி.வி. பிரகாஷ் உறுதிபடத் தெரிவித்தார்.
பிரிவுக்குப் பிறகும் இணைந்த தொழில் பயணம்
ஜி.வி. பிரகாஷ் மற்றும் சைந்தவி இருவரும் எதனால் பிரிந்தார்கள் என்பது குறித்துப் பகிரங்கமாகத் தெரிவிக்கப்படவில்லை. இருப்பினும், இவர்கள் இருவரும் நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ஒரே காரில் வந்தது குறிப்பிடத்தக்கது. பிரிவுக்குப் பிறகும், அவர்கள் இருவரும் தொழில் ரீதியாக இணைந்து பணியாற்றுவது குறித்த விமர்சனங்கள் எழுந்தபோது, ஜி.வி. பிரகாஷ் அதற்கும் விளக்கமளித்தார்.
"நாங்கள் இருவரும் தொழிலில் இணைந்து பணியாற்றுவதில் எந்தச் சிக்கலும் இல்லை. நாங்கள் ஒருவரையொருவர் மதிக்கிறோம் என்பதால், எங்களால் இணைந்து பணியாற்ற முடிகிறது. இருவரும் பிரிந்திருந்த போதிலும், தொழிலில் சக கலைஞருக்கு என்ன மரியாதை கொடுக்கப்படுமோ, அதை இருவரும் எப்போதும் கொடுத்துக் கொள்வோம்," என்று ஜி.வி. பிரகாஷ் கூறினார். இது தொழில்முறை மரியாதையையும், பரஸ்பர நல்லிணக்கத்தையும் எடுத்துக்காட்டுகிறது.
ஜி.வி. பிரகாஷ் மற்றும் சைந்தவி இருவருமே தங்கள் தனிப்பட்ட வாழ்க்கைப் பிரச்சனைகள், பிரிவுகள் எதுவாக இருந்தாலும், கலை மற்றும் தொழில் ரீதியாக ஒருவருக்கொருவர் மதிப்பளித்து, தொடர்ந்து இணைந்து பணியாற்றும் குணம் பலருக்கும் ஓர் எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications