"அடுத்தவர்களால் எங்களுக்கு விவாகரத்து ஆகவில்லை!" 24 வருட நட்பு இனி..! சைந்தவி திடீர் பதிவு
சென்னை: பாடகி சைந்தவி அவருடைய கணவரான இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷை விவாகரத்து செய்யப்போவதாக சில தினங்களுக்கு முன்பு அறிவித்திருந்தார். அவரைப் போலவே ஜிவி பிரகாஷும் தாங்கள் பிரிய போவதாக அறிவித்திருந்தார். அதைத்தொடர்ந்து இவர்கள் இருவர் பற்றிய செய்திகள் அதிகமாக பகிரப்பட்டு வந்தனர். இந்த நிலையில் சைந்தவி இன்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புது பதிவு ஒன்று வெளியிட்டு இருக்கிறார்.
அதில் நானும் ஜீவி பிரகாஷும் மனம் ஒத்து போய் பிரியப் போகிறோம் என்று சொன்ன பிறகு ஏராளமான youtube சேனல்களில் நாங்கள் ஏற்கனவே பேசிய விஷயங்களை மேலும் சில செய்திகளை சேர்த்து புனையப்படுவதை பார்ப்பது வருத்தம் அளிக்கிறது. எங்கள் விவாகரத்து வெளியே உள்ள அடுத்தவர்களால் ஏற்படவில்லை. மேலும் ஒருவரின் குணாதிசயத்தை ஆதாரம் இல்லாமல் தோராயமாக படுகொலை செய்வது ஏற்றுக்கொள்ள முடியாது.

நாங்கள் விவாகரத்து செய்ய வேண்டும் என்ற முடிவு எங்கள் முன்னேற்றத்திற்காக இருவரும் பரஸ்பரமாக எடுத்தோம். ஜிவி பிரகாஷும் நானும் பள்ளி பருவத்தில் இருந்து 24 வருடங்களாக நண்பர்களாக இருந்தோம். அந்த நட்பை தொடர்ந்து பேணுவோம்.. நன்றி...! என்று அந்த பதிவில் சைந்தவி கூறியிருக்கிறார்.
ஏற்கனவே சில தினங்களுக்கு முன்பு ஜிவி பிரகாஷ் வெளியிட்ட பதிவில் புரிதலும் போதுமான விவரங்கள் இல்லாமல் அனுமானத்தின் பெயரில் இரு மனங்கள் இணைவது, பிரிவது குறித்து பொதுவெளியில் விவாதிக்கப்படுவது துரதிஷ்டவசமானது. பிரபலமாக உள்ள நபராக இருப்பதாலே ஒருவரின் தனிப்பட்ட வாழ்வில் அத்துமீறி நுழைவது... தரம் தாழ்ந்த விமர்சனங்கள் வைப்பதும் ஏற்புடையதல்ல.

தங்களின் கற்பனைக்கு வார்த்தைகள் மூலம் வடிவம் கொடுத்து சமூக ஊடகங்களில் வெளிப்படுத்துவதால் அது யாரோ ஒரு தனிநபரின் வாழ்க்கையை பாதிக்கும் என்பதை உணராத அளவிற்கு தமிழர் மாண்பு குறைந்து விட்டதா? இருவரும் பரஸ்பரம் ஒப்புக்கொண்டு பிரிந்ததன் பின்னணியையும், காரணங்களையும் என்னுடன் நெருங்கிய பழகிய நண்பர்கள் உறவினர்கள் நன்கு அறிவார்கள்.
அவர்களிடமும் ஆலோசித்து பின்பு தான் இருவரும் இந்த முடிவை மேற்கொண்டோம். எங்களை பிரபலங்களாக உருவாக்கிய உரிமையிலையே அல்லது என் தனிப்பட்ட வாழ்க்கை மீது தங்களுக்கு இருந்த பேரன்பின் வெளிப்பாடாகவோ தங்களின் ஆதங்கமான விமர்சனங்கள் இருந்தாலும் சம்பந்தப்பட்டவர்களின் மனதை அது மிகவும் காயப்படுத்துகிறது என்பதை உணர்த்தவே இதை பதிவிடுகிறேன்.
ஒவ்வொரு தனிமனிதரின் நியாயமான உணர்வுக்கும் மதிப்பளியுங்கள். தங்களின் பேரன்புக்கும் ஆதரவுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி என்று கூறி இருந்தார். அதைத்தொடர்ந்து இப்போது சைந்தவியும் தங்கள் இருவரை பற்றி பரவி வரும் நெகட்டிவ் கமெண்ட்களுக்கும் செய்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் விளக்கம் கொடுத்திருக்கிறார்.
நாங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டவில்லை என்றாலும் சிலர் சமூக வலைத்தளத்தில் அவர்களின் கற்பனைக்கு தகுந்தது போல அடுத்தவர்கள் மீது குறை சொல்லி வருகிறார்கள். அதை நிறுத்திக் கொள்ளுங்கள் என்று சைந்தவி மற்றும் ஜிவி பிரகாஷ் இருவரும் வேண்டுகோள் வைத்து இருக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications