எதிர்நீச்சல் சீரியலில் வெற்றிக்கு காரணமே இவங்கதான்.. அறிமுகப்படுத்திய நடிகை ஹரிப்ரியா
எதிர்நீச்சல் சீரியலின் வெற்றிக்கு இயக்குனர், கதை ஆசிரியர், ஒளிப்பதிவாளர் தான் காரணம் என நடிகை ஹரிப்பிரியா புகைப்படம் வெளியிட்டிருக்கிறார்.
சென்னை: எதிர்நீச்சல் சீரியலின் ஒரு ஆண்டு முடிவடைந்த வெற்றியை சீரியல் அணியினர் சமீபத்தில் கொண்டாடி இருந்தனர்.
சீரியலில் நடிக்கும் நடிகர்கள் பலருக்கும் பரிச்சயம் ஆனாலும் சீரியலின் வெற்றிக்கு இவர்கள்தான் காரணம் என நடிகை ஹரிப்ரியா புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
எதிர்நீச்சல் சீரியலில் வெற்றிக்கு வெளியே முகத்தை காட்டாமல் இருக்கும் இயக்குனர், வசனகர்த்தா, ஒலிப்பதிவாளர் தான் காரணம் என ஹரிப்பிரியா வெளியிட்ட புகைப்படத்தை ரசிகர்கள் பகிர்ந்து வருகிறார்கள்.

முதல் ஆண்டு கொண்டாட்டம்
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்த சீரியல் இந்த வாரத்தில் கிராமப்புறங்கள் மற்றும் நகரப்புறங்களில் அதிகமான டிஆர்பி அளவில் பெற்று முன்னேறி இருக்கிறது. இந்த நிலையில் இந்த சீரியலில் சமீபத்தில் ஒரு ஆண்டு நிறைவு விழாவை பிரம்மாண்டமாக கொண்டாடி இருந்தனர். சீரியலின் அணியினர் அனைவருக்கும் இயக்குனர் ட்ரீட் வைத்து கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்து பல புகைப்படங்கள் வெளியாகி இருந்தது.

நந்தினி வெளியிட்ட ரகசியம்
எதிர்நீச்சல் சீரியலில் இயக்குனராக திருச்செல்வம் இருந்து வருகிறார். சீரியலின் கதை ஆசிரியராக நடிகை மற்றும் டப்பிங் ஆர்டிஸ்ட் ஆகவும் கதை ஆசிரியராகவும் இருக்கும் நடிகை ஸ்ரீ வித்யா இருந்து வருகிறார். இந்த சீரியலில் ஒளிப்பதிவாளராக சந்தானம் இருந்து வருகிறார். இவர்கள்தான் இந்த சீரியலில் வெற்றிக்கு உண்மையான காரணமாக இருக்கிறார்கள் என்று இந்த சீரியலில் நந்தினி கேரக்டரில் நடிக்கும் நடிகை ஹரிப்பிரியா தன்னுடைய சமூக வலைத்தள பக்கங்களில் புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். இது ரசிகர்களின் மத்தியில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

விரும்பி பார்க்க காரணம்
கோலங்கள் சீரியலில் இயக்குனராகவும் நடிகராகவும் நடித்த திருச்செல்வம் பல வருடங்களுக்குப் பிறகு இயக்கும் சீரியலாக எதிர்நீச்சல் சீரியல் இருந்து வருகிறது. இது தற்போதைய சூழ்நிலையில் அதிகமாக கிரஞ்ச் இல்லாத சீரியலாக இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இளைஞர்கள் முதல் பெரியோர்கள் வரை இந்த சீரியலை விரும்பி பார்த்து வருகிறார்கள். குறிப்பாக வில்லனாக மிரட்டும் ஆதி குணசேகரனின் கேரக்டர் நிஜமாக இருப்பதாகவே தோன்றுகிறது என்றும், இது பக்கத்து வீட்டில் ஒரு நபர் இருப்பது போன்று இருந்தாலும் இவர் செய்யும் வில்லத்தனத்தை பலர் திட்டி வந்தாலும் வில்லன் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று பாராட்டியும் வருகிறார்கள்.

வெற்றிக்கு காரணம் இவர்கள் தான்
இந்த சீரியலில் கதாநாயகிகள் அதிகமாக மேக்கப் இல்லாமல் நடிப்பது இந்த சீரியலுக்கு ஒரு முக்கியமான ப்ளஸ் ஆக இருந்து வருகிறது. எந்த இடத்திலும் எதார்த்தமான ஒரு சூழ்நிலையை காட்டி வரும் இந்த சீரியலை பின்னாடி இருந்து வேலை செய்பவர்கள் இவர்கள்தான். இவர்களால்தான் இந்த சீரியல் இந்த அளவிற்கு ரசிகர்களை ரசிக்க வைத்திருக்கிறது. எதார்த்தமான வசனம் அதிக ஓவர் ஆக்டிவ் இல்லாத வசனத்திற்கு காரணம் இவர்தான் என்று தற்போது பலருக்கும் தெரிய வைத்திருக்கிறது. அது மட்டும் அல்லாமல் இந்த சீரியலில் நடிகைகள் அதிகளவில் மேக்கப் போடாவிட்டாலும் அந்த இடத்தில் கேமராவின் உதவியோடு குவாலிட்டியை கொடுப்பதற்கு சந்தானம் தான் என்று தற்போது ஹரிப்பிரியா பாராட்டிய புகைப்படம் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
-
"40 வயசுல 25 வயசு மாதிரி இல்லை..." சர்ச்சைகளுக்கு மத்தியில் திரிஷா போட்ட பதிவு! யாருக்கு கொடுத்த பதில்? -
உருவத்தை பார்த்து சிரித்தவர்கள் இன்று மகளை பார்த்து வியக்கிறார்கள்... டிஷ்யூம் பட நடிகர் கின்னஸ் பக்ரு நெகிழ்ச்சி -
அஜித் மாதிரி யாராலும் இருக்க முடியாது.. சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம்.. ரகசியங்களை உடைத்த பிரபலம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications