Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

செய்த புண்ணியத்திற்கு கிடைத்த பலன்.. மகள் பிறந்த மகிழ்ச்சியில் ஹரிஷ் கல்யாண்! நெகிழ்ச்சியான பதிவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ் சினிமாவில் தனித்துவமான நடிப்பாலும், இயல்பான தோற்றத்தாலும் ரசிகர்களை ஈர்த்த நடிகர்களில் ஒருவர் தான் ஹரிஷ் கல்யாண். காதல் கதாபாத்திரங்களில் மென்மையான நடிப்பையும், சென்டிமென்ட் காட்சிகளில் ஸ்டாங்கான நடிப்பால், தன்னுடைய தனி அடையாளத்தை உருவாக்கியுள்ளார். இந்த நிலையில் ஹரிஷ் கல்யாண் (Harish Kalyan Blessed With a Baby Girl) தன்னுடைய வாழ்க்கையில் கிடைத்த பெரிய சந்தோஷம் பற்றி பகிர்ந்து இருக்கிறார்.

Harish Kalyan Bigg Boss Tamil

திரைப்பயணத்தின் தொடக்கம்

2010ஆம் ஆண்டு வெளியான சிந்து சமவெளி திரைப்படத்தின் மூலம் ஹரிஷ் கல்யாண் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார். ஆரம்பத்தில் சர்ச்சைகளுடன் பேசப்பட்டாலும், அவர் தனது முயற்சியைத் தொடர்ந்து பொறியாளர், வில் அம்பு போன்ற படங்களில் நடித்து தன்னை நிலைநிறுத்திக் கொண்டார்.

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் சில படங்களில் நடித்துள்ளார். படிப்படியாக வளர்ந்த அவர், இளைஞர்களிடையே கவனிக்கப்பட வேண்டிய நடிகராக மாறினார்.

Harish Kalyan Bigg Boss Tamil

பிக் பாஸ் மூலம் கிடைத்த பிரபலம்

2017ஆம் ஆண்டு Bigg Boss Tamil நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டது அவரது வாழ்க்கையில் முக்கிய திருப்பமாக அமைந்தது. அங்கு அவரது அமைதியான குணமும், நேர்மையான அணுகுமுறையும் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தது.

அதே சீசனில் கலந்து கொண்ட Raiza Wilson உடன் ஏற்பட்ட நட்பு பின்னர் திரையில் காதலாக மலர்ந்து, இருவரும் இணைந்து நடித்த Pyaar Prema Kaadhal திரைப்படம் பெரிய வரவேற்பைப் பெற்றது. இந்த படம் இளைஞர்களிடையே கலகலப்பையும், கிசுகிசுக்களையும் ஏற்படுத்தியது.

குடும்ப வாழ்க்கை

சினிமா வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், ஹரிஷ் கல்யாண் 2022ஆம் ஆண்டு நர்மதாவை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகு குடும்ப வாழ்க்கையையும், தொழிலையும் சமநிலைப்படுத்தி வந்தார்.

மகாலட்சுமியின் வரவு - புதிய மகிழ்ச்சி

2026 மார்ச் 2ஆம் தேதி ஹரிஷ் கல்யாண் - நர்மதா தம்பதியருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த சந்தோஷமான செய்தியை அவர் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்து கொண்டார்.

அவரது பதிவில், "என் மனைவி நர்மதாவும் நானும் இன்று எங்கள் பெண் குழந்தையை வரவேற்றுள்ளோம். தாயும் மகளும் ஆரோக்கியமாக உள்ளனர். இந்த அழகான புதிய அத்தியாயத்தை தொடங்குவதில் மகிழ்ச்சி அடைகிறோம். குடும்பத்தினர் மற்றும் நலம் விரும்பிகளின் அன்புக்கும் ஆசீர்வாதங்களுக்கும் நன்றி." என்று உணர்ச்சி பூர்வமாக குறிப்பிட்டுள்ளார்.

எதிர்காலம்

இளம் தலைமுறைக்கு நெருக்கமாக இருக்கும் கதைகளை தேர்வு செய்து நடிக்கும் ஹரிஷ் கல்யாண், தற்போது குடும்ப வாழ்விலும் புதிய அத்தியாயத்தை தொடங்கியுள்ளார். சினிமாவிலும், தனிப்பட்ட வாழ்க்கையிலும் அவர் மேலும் உயரங்கள் எட்ட ரசிகர்கள் வாழ்த்தி வருகிறார்கள்.

ஹரிஷ் கல்யாண் தற்போது ஒரு வெற்றிகரமான நடிகர் மட்டுமல்ல; ஒரு மகிழ்ச்சியான கணவர் மற்றும் புதிய அப்பாவாகவும் தனது வாழ்க்கையின் இனிய தருணத்தை அனுபவித்து வருகிறார். ஏற்கனவே ஹரிஷ் கல்யாண் நடிப்பில் மட்டுமல்லாமல் பல சமூக சேவகையில் செய்து கொண்டிருக்கிறார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்து கொண்டிருக்கிறார்.

சமீபத்தில் தான் பெண்களுக்கு வரும் புற்று நோயை ஆரம்பத்திலேயே கண்டுபிடிக்கும் மிஷினை தனியார் மருத்துவமனை ஒன்று இருக்கு இலவசமாக வழங்கி இருந்தார். இதனால் பலர் ஆரம்பகட்டத்திலேயே புற்றுநோய் கண்டுபிடித்து அதற்காக சிகிச்சை எடுத்துக் கொள்ள முடியும். இதுபோன்று பல உதவிகளையும் ஹரிஷ் கல்யாண் செய்து வரும் நிலையில் இனி அவருடைய குடும்ப வாழ்க்கையிலும் அவர் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்று பலர் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+