விஜய் டிவி யிலிருந்து வெளியேறினாரா பிரியங்கா? ரூ.3 கோடியில் வீடு! இந்த பிரபலம் ஏதேதோ சொல்றாரே? நிஜமா
சென்னை: "மணிமேகலை போல பல ஆங்கர்களின் பிரச்சனைகள் மீடியாவில் தன்மீது வருவதால், துபாய் அல்லது லண்டன் அல்லது கனடா என ஏதாவது ஒரு இடத்தில் செட்டில் ஆக யோசித்து வருகிறார் விஜய் டிவி பிரியங்கா.. அதாவது, சென்னையே வேண்டாம் என்று பிரியங்கா நினைக்கிறார் போலும். அந்தவகையில் விரைவில் லண்டனில் தன்னுடைய கணவர் வசியுடன் செட்டில் ஆக வாய்ப்பு உள்ளது என்று மூத்த பத்திரிகையாளர் தமிழா தமிழா பாண்டியன் ஆரூடம் தெரிவித்துள்ளார்.
Kingwoods News யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள பத்திரிகையாளர் பாண்டியன், "கனடாவில் ஆரியா கனடா என்று இசைக்குழு உள்ளது.. இதனை நடத்துபவரின் தம்பிதான் வசி.. இவர்கள் ஈழத்தமிழர்கள்.. லண்டனில் வசி ஆர்.ஜே.வாக உள்ளார்.. விஜய் டிவியில் சூப்பர் சிங்கரில் வெற்றி பெறுபவர்களை கனடாவுக்கு அழைத்து சென்று, பிரம்மாண்டாக இசை நிகழ்ச்சியையும் வசி குழுவினர் நடத்துவார்கள்.

அந்தவகையில் பிரியங்காவுக்கு முதலில் அறிமுகமானதே, வசியின் அண்ணன் குடும்பத்தினர்தான்.. அவர்களின் மூலம் வசியை தெரியும்.. வசிக்கு ஏற்கனவே திருமணமாகி, மனைவி, குழந்தைகள் இருக்கிறார்கள்.. பிரியங்காவுக்கு அப்போது கணவர் விஜய் டிவியில் பணிபுரிந்து கொண்டிருந்தார்.. அதற்கு பிறகுதான் கணவரை டைவர்ஸ் செய்தார்..
வசி அண்ணனின் பிரபல இசைக்குழு
பிரபலமான நடிகர், நடிகைகளை அழைத்து, ஸ்டார் நைட், இசை நிகழ்ச்சியை லண்டனில் நடத்துவார் வசி.. இதே போன்ற நிகழ்ச்சிகளை கனடாவில் நடத்துவார் வசியின் அண்ணன். இவர்களின் நிகழ்ச்சிகளில் பங்கேற்காத பிரபலங்களே கிடையாது..
கடந்த 2022-ல் வசி, பிரியங்கா இருவருக்குமே தங்கள் துணைகளுடன் விவாகரத்து நடந்துவிட்டது.. அந்த நேரத்தில் 3 முதல் 5 கோடி பெறுமானமுள்ள வீட்டை துபாயில் சொந்தமாக வாங்கியிருக்கிறார் பிரியங்கா.. இதன் விலை தற்போது டபுள் மடங்காகியிருக்கும்.
3 கோடி ரூபாய் வீடு
ஏனென்றால், உலகிலேயே நிம்மதியாக வாழ்வதற்கு ஏற்ற இடம் நியூயார்க்.. பணக்காரர்கள் தங்களிடம் அதிகமான பணமிருந்தால், சொகுசாக வாழ்வதற்காக நியூயார்க்கை தேர்ந்தெடுப்பார்கள்.. அதைவிட ஓரளவு குறைந்த பணவசதி இருந்தால் லண்டனை தேர்ந்தெடுப்பார்கள்.. அதைவிட, குறைந்த கோடிகளை வைத்திருக்கிறார்கள் என்றால் துபாய், அதைவிட குறைந்த பணக்காரர்கள் என்றால் சிங்கப்பூரில் செட்டில் ஆவார்கள்.. இதில், ஆசிய நாட்டை சேர்ந்தவர்களுக்கு ஏற்ற இடம் துபாய், சிங்கப்பூர்தான்..
பணத்துக்காக வசியை பிரியங்கா திருமணம் செய்துகொண்டதாக சொல்கிறார்கள்.. ஆனால், வசி அந்த அளவுக்கு பணக்காரர் இல்லையாம்.. நான் விசாரிச்சிட்டேன்.. அவர் லண்டனில் நடத்திய நிகழ்ச்சிகள் எல்லாம் தோல்வியடைந்துள்ளன.. வெறும் ஆளாக, நிறைய கடனில் இருப்பதாக சொல்கிறார்கள்.. அப்படின்னா, பிரியங்காதான் வசியை காப்பாற்றுவார். இதெல்லாம் தெரிந்துதான், அன்பின் பேரில் திருமணம் செய்துள்ளார் பிரியங்கா..
லண்டனில் செட்டில்?
மணிமேகலை போல பல பிரச்சனைகள் மீடியாவில் தன்மீது வருவதால், துபாய் அல்லது லண்டன் அல்லது கனடா என ஏதாவது ஒரு இடத்தில் செட்டில் ஆக யோசிக்கிறாரே தவிர, சென்னையே வேண்டாம் என்று பிரியங்கா நினைக்கிறார் போலும்.
அதேபோல, பிரியங்கா விஜய் டிவியிலிருந்து வெளியேறி விட்டாராம்.. வசியுடன், லண்டனில் செட்டில் ஆக வாய்ப்பு உள்ளது.. ஏனென்றால், வசிக்கு ஸ்டார் நைட் நிகழ்ச்சிகளை நடத்தி ஏற்கனவே நிறைய அனுபவம் உள்ளது.. இனிமேல் பிரியங்காவும் வசியும் சேர்ந்து நிகழ்ச்சிகளை நடத்தும் திட்டமும் வைத்திருக்கிறார்களாம்..
"பிரியங்கா - வசி இசைக்குழு"
பிரியங்காவை கைப்பிடித்ததன் நோக்கமே, "பிரியங்கா - வசி இசைக்குழு" உருவாக போகிறது. அந்த இசைக்குழு, ஸ்டார் நைட்களை நடத்தும். வசியை திருமணம் செய்வதால், பிரிட்டன் குடியுரிமையை பிரியங்காவால் எளிதாக பெற முடியும்.
துபாயிலும் இசை நிகழ்ச்சிகளை இந்த தம்பதியினர் நடத்தலாம்.. துபாயில் ஏற்கனவே பிரியங்காவுக்கு வீடு இருக்கிறது.. சிங்கப்பூர், பாரீஸ், லண்டன் போலதான் துபாயும்.. ஆட்டம், பாட்டம்,கொண்டாட்டத்துக்கு துபாயில் எந்த தடையும் கிடையாது" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications