கொலை செய்யப்பட்ட, இன்ஸ்ட்டா Zip & co நாகலட்சுமி மகன்கள் கண்ணீர்.. இந்த நிலைமை யாருக்கும் வரக்கூடாது!
சென்னை: சென்னையில் சில வாரங்களுக்கு முன்பு நடந்த, இன்ஸ்டாகிரபலம் நாகலட்சுமி மரணம் சம்பவம் இன்னும் பலரையும் அதிர்ச்சியில் இருந்து மீள விடாத நிலையில், அவருடைய இரண்டு மகன்கள் அளித்த பேட்டி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி, பார்க்கும் அனைவரையும் கண்கலங்க வைத்திருக்கிறது.

இன்ஸ்டாக பிரபலம் நாகலட்சுமி மகன்கள்
இந்த பேட்டியில் அவர்கள் மிகவும் உணர்ச்சிவசப்பட்டு பேசுகிறார்கள். அதில், "இந்த வீடியோவை பார்க்கும் யாரும், எங்கள் அப்பா எடுத்தது மாதிரி தவறான முடிவை எடுக்காதீங்க. வாழ்க்கையில் பிரச்சனை வந்தா, அதிலிருந்து வெளியே வர பல வழிகள் இருக்கு. உங்களுடைய வாழ்க்கைத் துணை முன்னேறுவது உங்களுக்கு பிடிக்கலன்னா, நீங்கள் பிரிந்து போயிடலாம். ஆனா எந்த சூழ்நிலையிலும் உயிரை விடணும்னு நினைக்காதீங்க. அப்படி ஒரு முடிவு எடுத்தா, உங்களுடைய பிள்ளைகளோட எதிர்காலம் முழுக்க கேள்விக்குறியாகிடும்" என்று அவர்கள் கண்ணீர் கலந்த குரலில் கேட்டுக்கொண்டார்கள்.
அவர்களின் வார்த்தைகளில் இருந்த வலி பலருடைய மனசைத் தாக்குகிறது. "இந்த உலகத்தில் எங்களோட நிலைமை யாருக்கும் வரக்கூடாது" என்று அவர்கள் உறுக்கமாக கேட்டுக் கொண்டனர்.
மேலும், நாகலட்சுமியின் மூத்த மகன் ரஷ்யாவில் மருத்துவம் படித்து வந்த நிலையில், இந்த சம்பவத்துக்காக உடனே படிப்பை விட்டு இந்தியா திரும்பியுள்ளார்.
படிப்பு பாதியில் நிறுத்தம்
"இப்போ என்னோட படிப்பை தொடர முடியும்னு தெரியல. என் தம்பியை நல்லா படிக்க வைக்கணும், அவனை பார்த்துக்கணும் என்பதுதான் இப்போ எனக்கு முக்கியம். அதற்காக என் கனவுகளை தியாகம் செய்ய வேண்டிய சூழ்நிலை வந்திருக்கு. வேற வழியே தெரியல" என்று அவர் மனவேதனையுடன் கூறியிருக்கிறார்.
அதோடு, "அம்மாவும் அப்பாவும் இல்லாத பிறகு எங்களுக்குன்னு யாரும் இல்லை. அம்மா இறந்த வீட்டுக்குள்ளே போகவே முடியல. அந்த வீட்டைப் பார்த்தாலே ரொம்ப கஷ்டமா இருக்கு. சாப்பிட கூட முடியாம நாங்க தவிக்கிறோம்" அவங்க இருந்த வரைக்கும் எதை சாப்பிடனும் எதை சாப்பிட கூடாதுன்னு செஞ்சு தருவாங்க. ஆனா இப்போ பல நேரம் சாப்பாடு இல்லாமல் தவிக்கிறோம் என்று அவர்கள் பகிர்ந்த துயரம் பலரையும் கண்கலங்க வைத்துள்ளது.
குழந்தைகளின் வேண்டுகோள்
நாகலட்சுமி ஆரம்பித்த சேலை கடை பிசினஸ் பற்றியும் அவர்கள் பேசினர். "அம்மாவை நம்பி இப்போ 40 குடும்பங்கள் இருக்காங்க. அந்த பிசினஸ்ஸை நாங்க தான் இப்போ கவனிக்கணும். (Zip & go) ஜிப் அண்ட் கோன்னு பெயர் வைத்தது நாங்க தான். அம்மா ஆரம்பத்தில் சாதாரணமா பெயர் வைத்திருந்தாங்க. நாங்க தான் அதை கொஞ்சம் மாடர்னா மாற்றினோம். அதுக்கப்புறம் அம்மா பல புதிய பொருட்களை உருவாக்கினாங்க. இப்போ அவங்க இல்ல, ஆனா அந்த பொறுப்பை நாங்க தான் ஏற்கணும்" என்று கூறியுள்ளனர்.
கலங்க வைத்த வார்த்தை
இறுதியாக, "இனி எங்கள மாதிரி எந்த குழந்தைகளுக்கும் இந்த நிலைமை வரக்கூடாது. யாரும் அவசர முடிவு எடுக்காதீங்க" என்று அவர்கள் கண்ணீருடன் தெரிவித்துள்ளனர். இந்த பேட்டி தற்போது சமூக வலைதளங்களில் பரவி, பலரிடமும் ஒரே கேள்வியை எழுப்பியுள்ளது, ஒரு குடும்பத்தின் பிரச்சனை இப்படியொரு முடிவுக்கு போக வேண்டியதா? அதே நேரத்தில், இந்த குழந்தைகள் எதிர்கொள்ளும் வாழ்க்கை போராட்டம் பலரையும் சிந்திக்க வைக்கிறது.
-
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
ஹென்றியும் சொல்லிட்டாரு.. சென்னை முதல் கன்னியாகுமரி வரை உடனே இதை செய்யுங்க! தமிழக அரசுக்கு கோரிக்கை -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications