நெப்போலியனை பார்த்ததும் நடுரோட்டில் ஹிப் ஹாப் தமிழா செய்த செயல்.. வியக்க வைத்த “அந்த” வார்த்தை

Subscribe to Oneindia Tamil

சென்னை: இசையமைப்பாளராகவும், நடிகராகவும் கலக்கிக் கொண்டிருக்கும் ஹிப் ஹாப் ஆதி தமிழா சிங்கப்பூரில் நடிகர் நெப்போலியனை பார்த்த போது என்ன நடந்தது என்று ஒரு பதிவு வெளியிட்டு இருக்கிறார். நெப்போலியன் மற்றும் ஹிப் ஹாப் ஆதி இருவரும் இணைந்து "அன்பறிவு" என்ற திரைப்படத்தில் நடித்திருந்தனர். பல வருடம் கழித்து இவர்கள் இருவரும் இப்போது மீண்டும் சந்தித்து இருக்கிறார்கள்.

ஒரு சிலரை வெளியே பார்ப்பதற்கு கரடு முரடாக இருப்பார்கள். இவர்கள் இப்படித்தான் இருப்பார்களோ என்று நினைத்துக் கொண்டிருந்தால் அவர்களிடம் பழகி பார்க்கும்போது அவர்கள் வேறுவிதமாக இருப்பார்கள். அதுபோல சில நடிகர்கள் சினிமாவில் கம்பீரமான தோற்றத்தில் நடித்துக் கொண்டிருப்பார்கள். அதே நேரத்தில் அவர்கள் பேட்டிகளில் பேசும்போது குழந்தைத்தனமாக பேசுவதையும் பார்த்திருப்போம்.

Napoleon

அதுபோல சினிமாவில் வில்லனாகவும், கதாநாயகன் ஆகவும் நடித்து மிரட்டிய நடிகர் நெப்போலியன் பற்றி நடிகர் ஹிப்ஹாப் தமிழா வெளியிட்ட பதிவு இணையத்தில் பலருடைய கருத்துக்களை பெற்று வருகிறது. நெப்போலியன் 80ஸ் காலகட்டத்தில் வில்லனாகவும், அதற்கு பிறகு கதாநாயகனாகவும் நடித்திருக்கிறார்.

அதிலும் சினிமாவில் 24 வயதில் அறிமுகமாகும் போது அவர் நடித்த வேடங்கள் எல்லாமே அதிக வயதுடைய வில்லன் கேரக்டர் தான். ஆனாலும் அதிலும் தன்னுடைய தனித்திறமையை காட்டி கதாநாயகனாக உயர்ந்து இருந்தார். பொதுவாக சினிமாவில் வில்லனாக நடித்து விட்டால் கடைசி வரைக்கும் வில்லனாகத்தான் வாய்ப்பு வரும் என்று சொல்வார்கள்.

ஆனால் நெப்போலியனுக்கு அது மாற்றம் கொடுத்து இருந்தது. ஆரம்பத்தில் வில்லனாக அறிமுகமானாலும் பிறகு அவர் கதாநாயகனாக நடிக்கும் போது மக்கள் அவரை ஏற்றுக் கொண்டனர். சில வருடங்களாக அவர் சினிமாவை விட்டு விலகி இருக்கிறார். இந்த நிலையில் தன்னுடைய குடும்பத்தோடு அமெரிக்காவில் நெப்போலியன் செட்டில் ஆகி இருக்கிறார்.

Napoleon

அவருடைய மகனுக்கு ஜப்பானில் வைத்து கடந்த நவம்பர் மாதத்தில் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகு மூன்று மாதங்கள் ஜப்பானில் இருந்து விட்டு நெப்போலியன் குடும்பத்தினர் இப்போது அங்கிருந்து கடல் வழி பயணம் மற்றும் ட்ரெயின் பயணம் மூலமாக மீண்டும் அமெரிக்காவிற்கு வந்து கொண்டிருக்கிறார்கள்.

அந்த நேரத்தில் சிங்கப்பூரில் வைத்து நடிகர் ஹிப் ஹாப் தமிழா ஆதி நெப்போலியனை சந்தித்து இருக்கிறார். ஹிப் ஹாப் தமிழா மற்றும் நெப்போலியன் இருவரும் அன்பறிவு என்ற திரைப்படத்தில் ஒன்றாக நடித்திருந்தார்கள். அதில் ஹிப் ஹாப் தமிழாவின் தாத்தாவாக நெப்போலியன் நடித்திருந்தார். இருவருடைய காம்போ ரசிகர்கள் மத்தியில் பாராட்டப்பட்டது.

இந்த நிலையில் நெப்போலியனை பார்த்தது பற்றி ஹிப்ஹாப் தமிழா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட வீடியோவில், "எத்தனை நாள் கழித்து பார்த்தாலும் அதே பாசம். என் மனம் கவர்ந்த கலைஞர், மனிதன். என் அன்புக்குரிய நெப்போலியன் அண்ணா" என்று பகிர்ந்திருக்கிறார். அதோடு அந்த வீடியோவில் அன்பறிவு திரைப்படத்தில் இடம் பெற்ற சில வசனங்களையும் ஹிப் ஹாப் தமிழா ஆதி இணைத்திருக்கிறார்

Napoleon

அதில் ஒரு இடத்தில் நெப்போலியனிடம், "என்னை பார்ப்பவர்கள் எல்லோரும் உங்க தாத்தா இப்போ நல்லா இருக்காரா என்று என்கிட்ட கேட்கிறாங்க" என்று சொல்ல, அதற்கு நெப்போலியன் சிரித்து இருக்கிறார். பிறகு ஹிப்ஹாப் தமிழா நெப்போலியனின் குடும்பத்தோடு புகைப்படங்கள் எடுத்து இருக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் அதிகமான லைக் பெற்று வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+