இனி நீயா நானா தொகுப்பாளர் டிடி..? அவரே சொன்ன தகவல்.. கோபிநாத் என்ன சொல்லி இருக்கார் பாருங்க
சென்னை: தொகுப்பாளர் டிடி என்ற திவ்யதர்ஷினி சமீபத்தில் தான் தொகுத்து வழங்க ஆசைப்படும் நிகழ்ச்சி குறித்து பேட்டியில் பேசி இருக்கிறார்.
அதில் நீயா நானா நிகழ்ச்சி பற்றி டிடி சொன்ன கருத்துக்கும் பதிலுக்கும் கோபிநாத் தன்னுடைய விளக்கத்தையும் கொடுத்திருக்கிறேன்.'

இந்த நிலையில் டிடி மற்றும் கோபிநாத் பேசிய வீடியோஸ் வைரல் ஆகி வரும் நிலையில் அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
விஜய் டிவியின் செல்லப்பிள்ளை என்று சொல்லும் அளவிற்கு அதிகமான நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக இருந்த டிடி தன்னுடைய பயணத்தை ஸ்கூல் காலேஜ் படிக்கும்போது அங்கிருக்கும் மேடைகளில் தொடங்கி இருக்கிறார். தான் ஸ்கூலில் படித்துக் கொண்டிருக்கும் போது நடிகர் விஜய் சிறப்பு விருந்தினராக வந்திருந்த நிலையில் அவரிடமும் தொகுப்பாளராக மாறி, டிடி விஜயிடம் கேள்வி கேட்டு அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி இருந்தாராம்.
அப்படி இளம் வயதிலேயே தொகுப்பாளராக தன்னுடைய பாதையில் அடி எடுத்து வைத்த டிடிக்கு விஜய் டிவியில் டிடி வித் காபி என்ற நிகழ்ச்சி கிடைக்கும் போது பெரும் பிரச்சனைகளுக்கு இடையில் தான் கிடைத்திருக்கிறது. சேனல் தரப்பில் இருந்து டிடியை நம்பி அந்த நிகழ்ச்சி கொடுக்கலாமா என்று ரொம்பவே ஆரம்பத்தில் யோசித்து இருக்கிறார்கள். அதற்கு டிடி எனக்கு ஒரு எபிசோடு நடத்த மட்டும் வாய்ப்பு பாருங்கள் அது சரி இல்லை என்றால் நீங்கள் மாற்றிவிடலாம் என்று கூறிவிட்டு தான் இந்த நிகழ்ச்சியில் தொகுப்பாளராக நிகழ்ச்சியை தொடங்கி இருக்கிறார்.
ஆனால் டிடி எதிர்பார்த்தது போலவே அவர் தொகுத்து வழங்கிய விதம் அதிகமான ரசிகர்களை கவர்ந்திருந்தது. அதன் தொடர்ச்சியாகவே விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் வாய்ப்பு டிடிக்கே கிடைத்தது. இந்த நிலையில் சமீபத்தில் டிடியும் தொகுப்பாளர் கோபிநாத்தும் ஒரு நிகழ்ச்சியில் மாறி மாறி இன்டர்வியூ எடுத்துக்கொண்டனர். அப்போது விஜய் டிவி நிகழ்ச்சியில் இனி நீ எந்த நிகழ்ச்சி தொகுத்து வழங்க வேண்டும் என்று நினைக்கிறாய் என்று கோபிநாத் டிடி இடம் கேட்கிறார்.

அதற்கு டிடி நான் எல்லா நிகழ்ச்சியும் தொகுத்து வழங்கியாச்சு. இன்னும் இருப்பது நீயா நானா நிகழ்ச்சி மட்டும் தான் என்று சொல்ல, அதற்கு கோபிநாத் இதைத்தான் நானும் எதிர்பார்த்தேன் என்று சொல்லி கொண்டிருக்கிறார். அதற்கு டிடி ஆனால் உங்கள் மாதிரி என்னால் அதில், அந்த இடத்துக்கு தகுந்த மாதிரி பேசி நிகழ்ச்சியை கொண்டு போக முடியுமா என்று தெரியாது என்று கூறுகிறார்.
அத்தோடு நானும் ஒரு ரகசியத்தை சொல்லணும். இது நீ என்னுடைய நிகழ்ச்சியை பிடிச்சிருக்கு அதை நான் எடுத்து நடத்தணும் என்று சொன்னதால் நான் சொல்றேன் என்று நினைக்க வேண்டாம். ஆனால் எனக்கும் டிடி வித் காபி என்கிற மாதிரி ஒரு நிகழ்ச்சி தொகுத்து வழங்க ரொம்பவே ஆசை. அந்த மாதிரி நிகழ்ச்சி இனி வந்தால் அதில் ஒரு முறையாவது தொகுத்து வழங்க வேண்டும் என்பது என்னுடைய விருப்பம் என்று கோபிநாத் கூறி இருக்கிறார்.
-
Blast Movie Review: ப்ளாஸ்ட் படம் எப்படி இருக்கு? கதை இதுதான்! அர்ஜுனுக்கு கம்பேக்? முழு விமர்சனம் இதோ! -
உருவத்தை பார்த்து சிரித்தவர்கள் இன்று மகளை பார்த்து வியக்கிறார்கள்... டிஷ்யூம் பட நடிகர் கின்னஸ் பக்ரு நெகிழ்ச்சி -
இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கல.. விரக்தியில் விக்னேஷ் சிவன் போட்ட பதிவு.. குவியும் ஆறுதல் -
பிரச்சனை இருந்தது.. விட்டு கொடுக்க மனசு இல்ல.. ஆனாலும், கருப்பு படம் குறித்து நடிகர் இந்திரன்ஸ் உருக்கம் -
உருவ கேலியால் உடைந்த மனம்... அந்த நடிகர் கேட்ட கேள்வியால் கதறி அழுதேன்.. நடிகை ஊர்வசி உருக்கம் -
அஜித் மாதிரி யாராலும் இருக்க முடியாது.. சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம்.. ரகசியங்களை உடைத்த பிரபலம் -
"40 வயசுல 25 வயசு மாதிரி இல்லை..." சர்ச்சைகளுக்கு மத்தியில் திரிஷா போட்ட பதிவு! யாருக்கு கொடுத்த பதில்? -
சிறகடிக்க ஆசை: முத்துக்கு இவ்வளவு பெரிய சோதனையா? பைனான்சியர் சொன்ன கண்டிஷன்.. நெஞ்சுவலியில் அண்ணாமலை -
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications