நடிகர் பாக்யராஜ் செய்த சின்ன மிஸ்டேக்.. கவுண்டமணியின் தலையெழுத்தே மாறி போச்சு! ரகசியம் உடைந்தது
சென்னை: காமெடி கேரக்டரிலும் குணச்சித்திர கேரக்டரிலும் இவரை மிஞ்ச ஆளே கிடையாது என்று பெயர் எடுத்தவர்களில் ஒருவர்தான் நடிகர் கவுண்டமணி. இவர் 70ஸ் இறுதி காலகட்டத்தில் சினிமாவில் தன்னுடைய நடிப்பை தொடங்கி அதற்கு பிறகு 80களில் திரைப்படங்களில் நடித்து 90களில் கவுண்டமணியின் கால் சீட்டுக்காக பல நடிகர்கள் காத்திருந்த காலமும் உண்டு.
அதுபோல காமெடி நடிகர்களில் முதல் முறையாக லட்சத்தில் சம்பளம் வாங்கியவரும் கவுண்டமணி தான். இந்த நிலையில் கவுண்டமணி பற்றி நடிகரும் இயக்குனருமாக இருக்கும் பாக்யராஜ் சில தகவல்களை பகிர்ந்து இருக்கிறார். அது இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகர் கவுண்டமணி ரஜினி, கமல், சத்யராஜ், பிரபு, கார்த்திக், சரத்குமார், விஜயகாந்த் என்று பல நடிகர்களுடன் இணைந்து செய்த காமெடி சினிமா ரசிகர்கள் மத்தியில் இப்போதும் ரசிக்கப்பட்டு வருகிறது. பல நூறு படங்களில் தனியாக காமெடி டிராக் செய்து வந்த கவுண்டமணி ஹீரோக்களோடு சேர்ந்து படம் முழுக்க முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்திருக்கிறார்.
திரைப்படத்தில் முக்கியமான சமயத்தில் கூட இவருடைய காமெடி அங்கு பலரையும் சிரிக்க வைத்து விடுவது இயல்புதான். அதிலும் நடிகர் செந்தில் மற்றும் கவுண்டமணி காமெடிக்கென்று அதிகமான ரசிகர்கள் உண்டு. அதிலும் கரகாட்டக்காரன் திரைப்படத்தில் செந்தில் மற்றும் கவுண்டமணி காமெடி காட்சிகள் பெரிய அளவில் வெற்றி பெற்றது.
ஆனால் கவுண்டமணியை சினிமாவில் தூக்கி விட்டவர் பாக்கியராஜ் தான் என்பது பலருக்கும் தெரியாது. பாக்கியராஜ் ஆரம்ப காலகட்டத்தில் சென்னைக்கு வந்து நடிகராகவும் இயக்குனராகவும் வேண்டும் என்று முயற்சிகள் எடுத்து பாரதிராஜாவிடம் உதவியாளராக சேர்ந்த போது கவுண்டமணி நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்தாராம். அப்போது சினிமாவில் நடிக்க வேண்டும் என்று ஆசையில் இருந்த கவுண்டமணியை பாக்கியராஜ் தான் பாரதிராஜாவிடம் அறிமுகம் செய்து வைத்து 16 வயதினிலே திரைப்படத்தில் ரஜினியோடு வரும் காட்சிகளில் நடிக்க வைத்திருந்தாராம்.
அது போல பாரதிராஜா இயக்கிய கிழக்கே போகும் ரயில் படத்தில் கவுண்டமணிக்கு படம் முழுக்க நடிக்கும் வாய்ப்பையும் வாங்கி கொடுத்திருக்கிறார். ஆரம்பத்திலேயே தன்னுடைய நடிப்பால் ரசிகர்களின் மத்தியில் பிரபலமாக தொடங்கிய கவுண்டமணி அடுத்தடுத்து தன்னுடைய திறமையால் பல படங்களில் நடித்து வந்தார். இந்த நிலையில் தான் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பாக்கியராஜ் கவுண்டமணி என்ற பெயர் அவருக்கு எப்படி வந்தது என்பதை பற்றி சொல்லியிருக்கிறார்.
அதாவது கவுண்டமணியின் உண்மையான பெயர் மணி மட்டும் தானாம். அப்போது பாக்கியராஜ் இயக்கிய திரைப்படத்தில் அவருடைய பெயரை போடுவதற்கு அவருடைய பெயர் என்னப்பா என்று கேட்டிருக்கிறார். அப்போது அங்கு இருந்தவர்கள் கவுண்டமணி என்று சொல்ல இவரும் எழுதி கொடுத்து விட்டனராம். ஆனால் அதற்கு பிறகு தான் அவருடைய பெயர் மணி என்றும் அவர் நாடகங்களில் நடிக்கும் போது இல்லாத வசனத்தை கூட கவுண்டராக கொடுப்பதால் அவரை நாடகங்களில் கவுண்டர் மணி என்று சொல்லி வந்ததை அங்கிருந்தவர்கள் சொல்லி இருக்கிறார்கள். ஆனால் படத்தில் கவுண்டமணி என்ற பெயர் வந்து விட்டதால் அதுவே அவருடைய பெயராக பிறகு மாறிவிட்டது என்று பாக்கியராஜ் கூறியிருக்கிறார்.
-
நடிகர் அரசியல்வாதியாக கூடாதா? அதுவும், ஓம் சக்தி... பராசக்தி டயலாக்.. வில்லங்க கேள்விக்கு MS பாஸ்கர் பதிலடி -
ஜல்லிக்கட்டு மட்டுமில்ல.. மதுரை கிடா சண்டையை உலகிற்கு கொண்டு வந்த மலையாள இயக்குநர்! பின்னணி நெகிழ்ச்சி -
மாநகரம் ஸ்ரீ-யா இது? மீண்டும் பழைய நிலை, மாஸ் லுக்.. இளம் பெண்ணுடன் உருக்கமான போஸ்ட்! -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம்












Click it and Unblock the Notifications