Mrs & Mr படத்தில் தன் பாடலை பயன்படுத்த மறுப்பு தெரிவித்த இளையராஜா! ஆனால் வனிதா இப்படி சொல்லி இருக்காங்க!
சென்னை: நடிகை வனிதா கதை எழுதி, இயக்கி, நடித்த மிஸ்ஸஸ் அண்ட் மிஸ்டர் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. இந்த திரைப்படத்தில் தான் இசை அமைத்த "ராத்திரி சிவராத்திரி" பாடலை பயன்படுத்தியதற்காக தடை விதிக்க கோரி இளையராஜா வழக்கு தொடுத்து இருந்திருக்கிறார். அதே நேரத்தில் இந்த பாடல் சர்ச்சை குறித்து வனிதா ஃபிலிமி பீட் தமிழுக்கு விளக்கம் கொடுத்திருக்கிறார்.
சமீப காலமாகவே பழைய பாடல்களை இப்போதுள்ள திரைப்படத்தில் பயன்படுத்தும் ட்ரெண்டிங் இருக்கிறது. ஆனால் ஒரு சிலர் இதனாலையே சர்ச்சையில் சிக்குகின்றனர். சமீபத்தில் வெளியான குட் பேட் அக்லி உட்பட பல திரைப்படங்கள் இந்த சர்ச்சையில் சிக்கி இருக்கின்றன. அதிலும் அதிகமான திரைப்படங்களில் இசையமைப்பாளர் இளையராஜாவின் பாடல்கள் பயன்படுத்தப்படும் போது அந்த பாடல்களுக்கு உரிமை கோரி இளையராஜா வழக்கு தொடர்ந்து கொண்டிருக்கிறார்.

ஆனாலும் ஒரு சிலர் தொடர்ந்து தங்களுடைய திரைப்படங்களில் இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். தன்னிடம் முறையாக அனுமதி வாங்காமல் சிலர் பாடலை பயன்படுத்துவது எனக்கு வருத்தம் அளிக்கிறது என்று தன்னுடைய அறிக்கையில் இளையராஜா குறிப்பிட்டு வருகிறார். இந்த நிலையில் இன்று நடிகை வனிதா விஜயகுமார் நடித்துள்ள மிஸஸ் அண்ட் மிஸ்டர் திரைப்படம் என்று திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்தில் இடம்பெற்ற ராத்திரி சிவராத்திரி என்ற பாடல் இப்போது புதிய சர்ச்சையில் சிக்கி இருக்கிறது.
இந்த படத்தில் இடம்பெற்ற பாடல் இளையராஜா ஏற்கனவே இசையமைத்திருந்த பாடல். அதனை அனுமதி இல்லாமல் பயன்படுத்தியதற்காக தற்போது இளையராஜா குற்றசாட்டுடன் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்திருக்கிறார். இந்த வழக்கு வரும் திங்கள்கிழமை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது. சட்ட ரீதியான பின்னணி மற்றும் காப்புரிமை சட்டங்கள் அடிப்படையில் இது ஒரு முக்கிய வழக்காக கருதப்படுகிறது.
இந்த நிலையில் இது குறித்து ஏற்கனவே ஃபிலிமி பீட் தமிழுக்கு வனிதா கொடுத்த பேட்டி இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் தொகுப்பாளினி வனிதாவிடம் எந்த படத்தில் இளையராஜா சாரின் "ராத்திரி சிவராத்திரி" என்ற பாடலை பயன்படுத்துகிறீர்களே அதற்கு காப்பிரைட் பிரச்சனை எதுவும் வரவுமா? என்று கேட்க, அதற்கு வனிதா அப்படி வருவதற்கு வாய்ப்பில்லை சமீப காலமாகவே இளையராஜா சாரின் பாடலை பல படங்களில் பயன்படுத்துகிறார்கள். ஆனால் அவரிடம் அதற்கு முறையான அனுமதி கேட்க மறந்து விடுகிறார்கள். ஆனால் நான் இதற்கு இளையராஜா சாரிடம் அனுமதி கேட்டேன்.
நான் சின்ன வயதில் இருந்தே இளையராஜா சாரின் வீட்டில் வளர்ந்து இருக்கிறேன். அவருடைய மகன்கள் எல்லோருமே எனக்கு நல்ல நண்பர்கள்தான். இப்ப கூட கார்த்திக் எனக்கு ரொம்பவும் நெருக்கமான நண்பராக இருந்து வருகிறார். அதனால் நான் முறைப்படி அனுமதி வாங்கி தான் இந்த பாடலை படத்தில் வைத்திருக்கிறேன் இந்த பாடலின் உரிமை சோனி மியூசிக் இருக்கிறது அங்கேயும் நான் அனுமதி வாங்கி விட்டேன் இளையராஜா சாரை போல யாராலும் மியூசிக் போட முடியாது அதனால் நான் அவருடைய பாடலையே பயன்படுத்தி இருந்தேன் அது அந்த பாடல் இந்த படத்திற்கு கச்சிதமாக பொருந்தும் என்று நான் நினைக்கிறேன். அதனால் அந்த பாடலை நான் பயன்படுத்தினேன் என்று வனிதா விளக்கம் கொடுத்திருக்கிறார் ஆனால் வனிதா சொல்வதற்கும் இப்போது இளையராஜா செய்வதற்கும் முரண்பாடு இருக்கிறது என்று பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
-
இளையராஜாவை பிறந்தநாளில் சந்தித்த மாரி செல்வராஜ் உருக்கம்.. சிஎம் விஜய் பற்றி ஒரே வார்த்தையில் பதில் -
அமைதியா இருங்க... இல்லன்னா.. 83வது பிறந்தநாளில் ரசிகர்களிடம் கடுப்பான இளையராஜா! -
“வைகை அணையில் கூலி வேலை பார்த்த இளையராஜா, இசைஞானி ஆனது எப்படி? முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா?” -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து -
"நான்கு” தலைமுறையாக மாஸ் காட்டும் "இசைஞானி..” இளையராஜாவின் வாழ்க்கையில் நடந்த 10 ஆச்சரிய சம்பவங்கள்! -
83 வயதில் இசைஞானி இளையராஜாவின் காப்பி ரைட்ஸ் போராட்டம்.. இளைஞர்கள் அறிய வேண்டிய பாடம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications