Ilaiyaraaja: "மகளின் ஆசையை நிறைவேற்றும் அப்பா!" பவதாரிணியின் நினைவாக இளையராஜா குடும்பம் செய்த செயல்
சென்னை: இசைஞானி இளையராஜா, இதுவரை 1000க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்து, 7000க்கும் அதிகமானப் பாடல்களைக் கொடுத்துத் தமிழின் இசை அடையாளமாகவேத் திகழ்பவர். 'அன்னக்கிளி' படத்தின் மூலம் 1976ல் தனதுப் பயணத்தைத் தொடங்கிய ராஜா, மேற்கத்திய மற்றும் இந்திய சங்கீதத்தை இணைத்து 'சிம்பொனி' வடிவில் இசையமைத்த முதல் இந்திய இசையமைப்பாளர் என்ற பெருமையையும் பெற்றவர்.
இப்படி இசையே உலகமாக வாழ்ந்தாலும், குடும்பத்துடன் நேரம் செலவிடவில்லை என்ற வருத்தத்தை அவ்வப்போதுப் பதிவு செய்த வந்த இளையராஜா, தற்போதுத் தனது செல்ல மகள் பவதாரிணியின் நிறைவேறாத கனவை நிறைவேற்றும் விதமாகச் செய்துள்ள ஒரு விஷயம், ரசிகர்களிடையே பெரிய நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பவதாரிணியின் இழப்பும், இசை பயணமும்
இளையராஜாவின் ஒரே மகளான பவதாரிணி, புற்றுநோய் காரணமாகக் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் இலங்கையில் உயிரிழந்தார். அவரது இழப்பு ஒட்டுமொத்தக் குடும்பத்தையும், ரசிகர்களையும் பெரிய அளவில் பாதித்தது. பவதாரிணி இளையராஜாவின் இசையில் பல பாடல்களைப் பாடியுள்ளார். அதில், 'ராசய்யா' படத்தில் இடம் பெற்ற 'மயிலே மயிலே' மற்றும் 'பாரதி' படத்தில் அவர் பாடிய 'மயில் போலப் பொண்ணு ஒண்ணு' என்ற பாடல் அவருக்குத் தேசிய விருதையும் பெற்றுத் தந்தது.
கனவு
சில நிகழ்ச்சிகளில், "தனது மகளுக்குப் பெண்களுக்காக ஆர்கெஸ்ட்ரா ஒன்றை ஆரம்பிக்க வேண்டும்" என்பது நீண்ட நாள் கனவு என்பதையும் இளையராஜா உருக்கத்துடன் கூறியிருந்தார்.
தற்போது, மறைந்த மகளின் ஆசையை நிறைவேற்றும் விதமாக, இசைஞானி இளையராஜா ஒரு சிறப்பான அமைப்பைத் துவங்கியுள்ளார். பவதாரிணியின் நினைவாக, 'பவதா மகளிர் ஆர்கெஸ்ட்ரா' (Bavatha Girls Orchestra) என்ற ஓர் அமைப்பை இளையராஜா தொடங்கியுள்ளார்.
இது 15 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கான ஆர்கெஸ்ட்ரா ஆகும். இதற்காகத் திறமையுள்ளப் பெண் பாடகர்கள் மற்றும் இசைக் கலைஞர்கள் தங்களைத் தொடர்பு கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அழைப்பு
விருப்பமுள்ளவர்கள் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்குத் தங்களின் விபரங்களை அனுப்பலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இசைக்காகவே வாழ்ந்து, இப்போது தனதுப் பெண்ணின் நிறைவேறாதக் கனவை நிறைவேற்ற, அவர் பெயரிலேயே ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கும் இளையராஜாவின் இந்தச் செயல், உண்மையிலேயே இளம் கலைஞர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. இளையராஜாவின் இந்த உணர்வுப்பூர்வமான செயலுக்காக அவருக்குப் பல தரப்பில் இருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications