7 கோடி வாங்குன இசையமைப்பாளரால் ஹிட் கொடுக்க முடியல.. எங்க பாடலை ஏன் எடுக்கணும்? கங்கை அமரன் கேள்வி
சென்னை: மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படத்திற்கு பிறகு குட் பேட் அக்லி திரைப்படத்தில் தன்னுடைய பாடல்களை பயன்படுத்தியதற்காக இளையராஜா தயாரிப்பு நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பி இருந்தார். இந்த நிலையில் இளையராஜாவின் தம்பியான கங்கை அமரன் தன்னுடைய அண்ணனுக்கு சப்போர்ட் செய்து பிரபல இசைஅமைப்பாளரை தாக்கி பேசி இருக்கிறார்.
குட் பேட் அக்லி திரைப்படத்தில் தன்னுடைய மூன்று பாடல்களை பயன்படுத்தியதற்காக இளையராஜா விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார். இது இணையத்தில் பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. இளையராஜா செய்தது சரி என்று சிலர் கூறி வந்தாலும் இளையராஜா பணத்திற்காக இப்படி அழைக்கிறாரே என்று சிலர் அவரை விமர்சித்து வருகிறார்கள்.

ராயல்டிக்கு விளக்கம்
இந்த நிலையில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட கங்கை அமரன் இது பற்றி பேசியிருக்கிறார். அப்போது இளையராஜா தன்னுடைய பாடல்களுக்கு ராயல்டி கேட்பது சரியான விஷயம் தான். நாங்க ஏற்கனவே சர்வதேச விதிமுறைகளை கடைபிடித்து வருகிறோம். இந்த விதிமுறைகள் இந்தியாவில் கடைபிடிக்கப்படுகின்றன. இந்த விதிமுறைகளை மைக்கேல் ஜாக்சன் தான் கொண்டு வந்தார்.
கங்கை அமரன் பேட்டி
முதலில் நாங்கள் சரஸ்வதி ஸ்டோர்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்தோம். அவர்கள் படத்தின் பூஜை அன்று பத்தாயிரம் ரூபாய் கொடுப்பார்கள். ஆனால் அதற்குப் பிறகு சில படங்களின் கேசட்டுகள் அதிகமாக விற்றாலும் எங்களுக்கு பணம் கிடைக்கவே இல்லை. அப்போதுதான் நாங்கள் இதுபோன்ற பிரச்சனை இருப்பதையே அறிந்து கொண்டோம். பிறகு என்னுடைய அண்ணன் எந்த படமானாலும் அதற்கான இசை உரிமையை வாங்கிக் கொள்வார்.
பெருமிதம்
இளையராஜாவின் பாடல்களை எஸ்பிபி மேடையில் பாடுவதற்கு ஆரம்பத்தில் தடை விதித்திருந்தார். அதற்கு நான் சண்டை போட்டேன். பிறகு மேடைகளில் தன்னுடைய பாடல்களை பாடுவதற்கு இளையராஜா தடை போடவில்லை. ஆனால் ஏழு கோடி ரூபாய்க்கு நீங்கள் ஒரு இசையமைப்பாளரை வைத்திருக்கிறீர்கள். அவர் போட்ட பாடல்களுக்கு கைதட்டு வராமல் எங்களுடைய பாடல்களுக்கு ரசிகர்கள் கைதட்டுகிறார்கள். அப்படி இருக்கும் போது கூலி எங்களுக்கு தானே வரவேண்டும்.
அண்ணனுக்கு சப்போர்ட்
எங்களுடைய பெயரை போடாமல் மற்றொரு இசையமைப்பாளர்களுக்கு கோடிகள் கொடுத்தும் அவரால் நாங்கள் கொடுத்த இசையை கொண்டு வர முடியவில்லை இளையராஜாவிடம் இந்த பாடல்களை பயன்படுத்த வேண்டும் என்று அனுமதி ஆரம்பத்திலேயே கேட்டிருந்தால் அவர் இலவசமாகவே கொடுத்திருப்பார். ஆனால் அனுமதி கேட்காமல் பயன்படுத்தியதால் தான் அவர் கோபப்படுகிறார்.
கங்கை அமரன் ஆதங்கம்
இதனால் இளையராஜாவுக்கு பணத்து ஆசை கிடையாது. எங்களிடமே அதிகமான பணம் இருக்கிறது. அதை எப்படி செலவு செய்வது என்று தான் நாங்கள் யோசித்துக் கொண்டிருக்கிறோம். சிலர் இப்போ அஜித் படத்தில் இந்த பாடலை பயன்படுத்தியதற்காக இளையராஜா நோட்டீஸ் அனுப்பி இருக்கிறாரே என்று கேட்கிறார்கள். அது முக்கியம் கிடையாது. உங்கள் இசையமைப்பாளரை வைத்து அப்படி இசையை கொடுக்க முடியவில்லை.
இசையமைப்பாளர் பற்றி விமர்சனம்
எங்களுடைய பாடல்கள் தான் படத்தில் இருந்து வெற்றிக்கு கொண்டு வந்தது. எங்களுடைய சொத்தை எப்படி அடுத்தவர்கள் பயன்படுத்த முடியும் என்ற கோபம் தான் எங்களுக்கு இருக்கிறது வேறு எதுவும் இல்லை என்று பேசி இருக்கிறார். கங்கை அமரன் இவ்வளவு கோபமாக பேசியது இசை அமைப்பாளர் ஜிவி பிரகாஷ் பற்றி தான் இது கூறப்படுகிறது. ஆனால் ஜிவி பிரகாஷ் பெயரை கங்கை அமரன் எந்த இடத்திலும் சொல்லவில்லை ஆனாலும் ஜீவி பிரகாஷ் தான் குட் பேட் அக்லி திரைப்படத்தின் இசையமைப்பாளர் என்பதால் அவரை தான் கங்கை அமரன் கூறுகிறார் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications