"ஊருக்கு போக மனசில்லை; தற்கொலைதான் வழின்னு நினைச்சேன்!" மீண்டு வந்தது பற்றி கலங்கிய இளவரசு
சென்னை: தமிழ் சினிமாவில் இப்போது குணச்சித்திர நடிகர்கள் லிஸ்ட்டில், தவிர்க்க முடியாத ஒரு பெயர்னா அது நடிகர் இளவரசு தான். அவர் ஒரு காலகட்டத்துல வில்லன், காமெடின்னு எல்லாத்தையும் கலந்து கட்டி நடிச்சு நம்ம மனசுல ஒரு தனி இடத்தைப் பிடிச்சிருக்கார். ஆனா, அவர் முதல்ல சினிமாவுக்கு வந்தது, நடிகராகனும்ங்கிற கனவுல இல்லையாம்; ஒரு ஒளிப்பதிவாளர் (சினிமடோகிராஃபர்) ஆகணும்ங்கிற ஆசையில்தானாம்!
ஆனா, இப்போ கிட்டத்தட்ட நூறுக்கும் அதிகமான படங்கள்ல நடிச்சிருக்கிற இளவரசு, தான் நடிகரானதே ஒரு பெரிய தாழ்வு மனப்பான்மை மற்றும் தற்கொலை எண்ணத்தில் இருந்து தப்பி வந்த ஒரு 'தெய்வ வாக்கு' தான் என்றுப் பேட்டி ஒன்றில் உருக்கமாகப் பேசியிருக்கிறார்.

ஒளிப்பதிவுலகில் இருந்து நடிப்பு
இளவரசு முதன்முதலில் கேமராமேன் உதவியாளராக தான் சினிமாவுல நுழைஞ்சார். அப்போ $
1985லேயே பாரதிராஜாவோட 'முதல் மரியாதை' படம்ல சின்ன வேஷம் போட்டிருந்தார். அப்புறம் 1996ல 'பாஞ்சாலங்குறிச்சி' படத்துல ஒளிப்பதிவாளரா அறிமுகமாகி, 'பெரிய தம்பி', 'நினைத்தேன் வந்தாய்', 'இனியவளே', 'மனம் விரும்புதே உன்னை'ன்னு கிட்டத்தட்ட 13 படங்களுக்கு கேமராமேனா வேலை செஞ்சிருக்கார்.
தற்கொலை எண்ணத்தில் இளவரசு
நான்ஸ்டாப் கேமராமேனா போயிட்டு இருந்த இளவரசுக்கு ஒரு கட்டத்துல பெரிய சிக்கல் வந்திருக்கு. "ஒரு 10,12 படம் பண்ணியாச்சு. நான்ஸ்டாப் கேமராமேனா போயிட்டு இருந்தேன். திடீர்னு எந்த டைரக்டரும் மார்க்கெட்ல இல்லை. நான் முழுசா ப்ளாங்க் ஆகி நின்னுட்டேன். என்ன செய்யப் போறோம்னு தெரியல. ரெண்டு குழந்தைங்க, மனைவி, வீட்டு வாடகைன்னு எல்லாமே சென்னையிலதான்."
அப்போதான் அவருக்குத் தற்கொலை எண்ணம் வந்திருக்கு. "ஊர்ல வந்து திருப்பிப் போயி வாழ முடியலைன்னு போறதுக்குப் பதிலாத் தற்கொலை பண்ணிக்கலாம்னு அந்த நிலைமைக்குப் போயாச்சு. ரொம்ப மன உளைச்சலோட இருந்தேன்." நடிக்கக் கூப்பிட்டாலும், "நடிகனா ஆகிட முடியுமானு ஒரு பெரிய குழப்பம் இருந்துச்சு. என் வேலையை விட்டுவிட்டு இன்னோர் வேலைக்குப் போறதே எனக்கு ஒரு பெரிய தாழ்வு மனப்பான்மையா இருந்துச்சு" என்று அவர் சொன்னது, பலரது மனதைத் தொட்டது.
தெய்வ வாக்கு
கேமராமேன் யூனியன் ஆபீஸ்ல கையெழுத்து போடுறதுக்காகப் போனப்போ, மூத்த ஒளிப்பதிவாளர் பி.என். சுந்தரம் சார் இவரைப் பார்த்து, "வாயா ஷூட்டிங் இல்லையா?"ன்னு கேட்டிருக்கார். இளவரசு குழப்பத்தோட, 'டைரக்டர் யாரும் சரியில்லை சார், எல்லா டைரக்டரும் ஃப்ளாப்பானதால படம் இல்லை'ன்னு புலம்பியிருக்கார். அப்போ சுந்தரம் சார், "நான் கேமராமேனா கேக்கலயா, நடிக்கப் போகலயான்னு கேட்டேன்" என்றுச் சொல்லி, இவருக்கு ஒரு நம்பிக்கையைக் கொடுத்திருக்கிறார்.
புதிய ஆரம்பம்
"நான் இதை எதிர்பார்க்கவே இல்லை அவர்கிட்ட. நிறையப் பேர் சொல்லுவாங்க, நம்ம வேலையை விட்டுப் போறோம். ஆனா, 'பேசாமப் போய் நடி'ன்னு அவரு சொன்னப்போ, வெளிய வரும்போது ஈஸியா வெளிய வந்தேன். அது ஒரு தெய்வ வாக்கு மாதிரிதான் நினைக்கிறேன். குழப்பமே இல்லாமக் கூப்பிட்ட இடத்துக்குப் போனேன். அது வரம்னு சொல்றதா? காலத்தால் ஆசிர்வதிக்கப்பட்ட மனிதன் என்பது ஒவ்வொரு விநாடியும் உணரவைக்கக்கூடிய ஒரு வாழ்க்கை சார்" என்று அவர் நெகிழ்ந்துள்ளார்.
மறக்க முடியாத கதாபாத்திரங்கள்
முழு நேர நடிகராக மாறிய இளவரசு, 2000ஆம் ஆண்டு 'வெற்றிக் கொடி கட்டு' படத்தில் நல்ல கதாபாத்திரத்தைப் பெற்றார். 'பூவெல்லாம் உன்வாசம்', 'பாண்டவர் பூமி', 'தவசி', 'ரெட்', 'ஜெமினி'ன்னு பல படங்கள்ல தவிர்க்க முடியாத நடிகரா வந்தார். 'இம்சை அரசன் 23ஆம் புலிகேசி'ல வடிவேலுவுக்கு அமைச்சரா இவர் நடிச்சக் கதாபாத்திரம் பெரிய புகழ் கொடுத்தது. 'கலகலப்பு'ல இவரது அமிதாப் கதாபாத்திரம் ரொம்பவே பிரபலம்.
உணர்ச்சிப்பூர்வ நடிப்பு
காமெடி மட்டுமில்லாம, 'முத்துக்கு முத்தாக' படத்துல தந்தை கதாபாத்திரத்துல இவர் நடிச்சது ரொம்பவே உணர்வுப்பூர்வமா இருந்துச்சு. இளவரசு, ரஜினி, விஜய், அஜித், விஜயகாந்த், சிம்பு, தனுஷ்ன்னு பல முன்னணி ஹீரோக்கள்ல இருந்து இளம் ஹீரோக்கள் வரை எல்லாருடனும் சேர்ந்து நடிச்சு, தமிழ் சினிமாவுல ஒரு தவிர்க்க முடியாத நடிகரா இப்போ வலம் வந்துட்டு இருக்கார்.
-
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ!












Click it and Unblock the Notifications