இளையராஜா அலற விட்ட அஜித்குமாரின் குட் பேட் அக்லி டீம்.. எதுக்கு இவ்ளோ பணத்தாசை? கோர்ட் என்ன சொல்லுமோ
சென்னை: நடிகர் அஜித் குமார் நடித்த 'குட் பேட் அக்லி' திரைப்படத்தில், அனுமதி பெறாமல் தனது பாடல்களை பயன்படுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து இசையமைப்பாளர் இளையராஜா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார். தொடர்ந்து இந்த பிரச்சனை விஸ்வரூபமெடுத்து வரும்நிலையில், இதுகுறித்து சினிமா விமர்சகர் வலைப்பேச்சு அந்தணன் தன்னுடைய பேட்டி ஒன்றில் விரிவாகவே பேசியிருக்கிறார்.
மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில், நடிகர் அஜித் குமார் நடிப்பில் 'குட் பேட் அக்லி' படம் சமீபத்தில் அண்மையில் வெளியானது. இந்த படத்தில், 'இளமை இதோ இதோ, ஒத்த ரூபாயும் தாரேன், என் ஜோடி மஞ்சக் குருவி' ஆகிய பாடல்கள் இடம் பெற்றுள்ளன.

தன்னுடைய இந்த பாடல்களை அனுமதியில்லாமல் பயன்படுத்தியுள்ளதாகக் கூறி இசையமைப்பாளர் இளையராஜா சார்பில் அவரது வழக்கறிஞர்கள் கே.தியாகராஜன், ஏ.சரவணன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.
இளையராஜா காப்பிரைட்
அந்த மனுவில், "அனுமதியில்லாமல் பயன்படுத்திய பாடல்களை படத்தில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும், 5 கோடி ரூபாய் இழப்பீடு கோரியும் அனுப்பிய நோட்டீசுக்கு பதிலளித்த தயாரிப்பு நிறுவனம், சட்டப்பூர்வ உரிமையாளரிடம் இருந்து பாடல்களை பயன்படுத்த அனுமதி பெற்றதாக கூறியிருக்கிறது. ஆனால் அந்த உரிமையாளர் யார்? என்பதை தெரிவிக்கவில்லை" என்று கூறப்பட்டுள்ளது.
தன்னுடைய அனுமதியில்லாமல் பாடல்களை பயன்படுத்தியது பதிப்புரிமைச் சட்டத்துக்கு விரோதமானது என்பதால், திரைப்படத்தில் பாடல்களை தொடர்ந்து பயன்படுத்த தடை விதிக்க வேண்டும். இதுவரை பயன்படுத்தியதற்காக உரிய இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும் என கோரப்பட்டுள்ளது. இந்த வழக்கு நீதிபதி செந்தில்குமார் முன்பு, இன்றையதினம் விசாரணைக்கும் வரவுள்ளது.
5 கோடி ரூபாய்
இப்படிப்பட்ட சூழலில், Media Circle என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள சினிமா விமர்சகர் வலைப்பேச்சு அந்தணன், "குட் பேட் அக்லி படத்தின் காப்பிரைட் பிரச்சனைக்காக 5 கோடி ரூபாய் கேட்டுள்ளார் இளையராஜா.. இது தற்போதைய புதிய செய்திதான்.. இந்த காப்பிரைட் பிரச்சனை தொடர்ந்தவாறே உள்ளது.. நீதிமன்றம் இந்த விவகாரங்களில் தலையிட்டு, ஒரு முடிவை சொல்ல வேண்டும்..
இளையராஜாவும் தன்னுடைய பாடல்களுக்கான காப்பிரைட் வைத்திருக்கிறார்.. ஆனால் சம்பந்தப்பட்ட ஆடியோ நிறுவனமும் காப்பிரைட் வைத்திருக்கிறது. இதனால் 2 பேருமே உரிமை கேட்கிறார்கள்.. இதுதான் தயாரிப்பாளர்களுக்கு சிக்கலாக எழுகிறது.
பணம் திருப்பி தரப்படுமா
தயாரிப்பாளர்களை கேட்டால், ஆடியோ கம்பெனியிடமிருந்து அனுமதியை பெற்றுவிட்டதாகவும், நாங்கள் எதற்காக இளையராஜாவிடமும் அனுமதி பெற வேண்டும்? என்று கேட்கிறார்கள். அத்துடன், ஆடியோ கம்பெனியிடம் பெற்ற அனுமதியையும் கோர்ட்டில் ஆதாரமாக வைத்துள்ளார்கள்.. இதுபோன்ற ஆதாரங்களை நீதிமன்றம் பரிசீலித்து, அனைத்தும் சரி என்று சொல்லிவிட்டால், எல்லா பிரச்சனைக்கும் உடனே தீர்வு கிடைத்துவிடும்.
அதுமட்டுமல்ல, காப்பிரைட் உரிமையானது, சம்பந்தப்பட்ட ஆடியோ நிறுவனத்துக்குதான் சொந்தம் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துவிட்டால், இளையராஜா ஏற்கனவே காப்பிரைட்டுக்காக வாங்கிய பணத்தையெல்லாம் திருப்பி தர வேண்டியிருக்கும் சூழலும் உருவாகலாம்.. ஆனால் நீதிமன்றம் ஏன் விரைந்து தீர்ப்பு தராமல் உள்ளது என தெரியவில்லை..
எதுக்கு இந்த பேராசை
இளையராஜாவுக்கு எதுக்கு இந்த பணப்பேராசை என்றுதான் பலரும் கேட்கிறார்கள்.. ஒருசிலருக்கு வேண்டுமானால் வெறும் காப்பிரைட் அனுமதியை மட்டும் இளையராஜா தந்திருக்கலாம்.. ஆனால், பலரிடம், "அவருக்கு மட்டும் கொடுத்தீங்க, எனக்கும் கொடுங்க" என்றுதான் கேட்கிறாராம்.. எனவே இளையராஜா அந்த அளவுக்கு காசு விஷயத்தில் பெருந்தன்மையாக விட்டதில்லை.
அதேபோல இதுபோன்ற விஷயங்களை எல்லாம் இளையராஜா நேரடியாக பேசுவதில்லை.. காப்பிரைட் நோட்டீஸ் அனுப்புவது உள்ளிட்ட விஷயங்களை இளையராஜாவிடமுள்ள லீகல் டீம்தான் பேசும்.. இவ்வளவு பணத்தை தந்துவிட்டு போங்க என்று சொல்வதும் இந்த டீம்தான்" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications