எனக்கு ஒரு வியாதி இருக்கிறது... அனைவரையும் அதிர வைத்த அண்ணாச்சி
சென்னை: தனக்கு ஒரு ஸ்பெஷல் வியாதி இருப்பதாக இமான் அண்ணாச்சி கூறியுள்ளார்.
இமான் அண்ணாச்சியின் பேச்சை கேட்டு ரசிகர்கள் அதிர்ந்து போய் உள்ளனர்.
அட அதனால் தானா எலிமினேஷனை குறித்து முன்னரே கணிக்க முடிகிறதா என்று நெட்டிசன்கள் தங்கள் பங்குக்கு கலாய்க்க தொடங்கி விட்டார்கள்.

மாறாத வட்டார மொழி
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்னரே இமான் அண்ணாச்சிக்கு அதிகமான ரசிகர்கள் இருந்து வந்தனர் தன்னுடைய காமெடி திறமையால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரையும் ரசிக்கவைக்கும் ஒரு நடிகராக பலருக்கும் பரிச்சயமானவர் தான்.
ஆனால், தன்னுடைய வட்டார மொழியிலேயே திரைப்படங்களிலும் சிறப்பு நிகழ்ச்சிகளிலும் பேசி அனைவரையும் கவர்ந்து வந்துள்ளார். பல கல்லூரி நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினராகக் தொகுப்பாளராகவும் சென்று அனைத்து தரப்பு மக்களையும் ரசிகர்களாக கொண்டவர் தான் அண்ணாச்சி.

ஃபீலான ரசிகர்கள்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இமான் அண்ணாச்சி ஒரு போட்டியாளராக அறிமுகமாகிறார் என்று தெரிந்ததும் இவருடைய ரசிகர்கள் அவருடைய பெயர் கெட்டுப் போய்விடுமோ என்று பயந்து வந்தனர். ஆனால் முதல் வாரத்தில் இவருடைய பெர்பாமன்ஸ் பார்த்ததும் ரசிகர்கள் இவருக்கு ஆதரவு கொடுக்கத் தொடங்கி விட்டனர். பல இடங்களில் இவர் அடுத்தவர்களின் கருத்தை கேட்க்கவில்லை என்று பலர் குறை கூறியும் வருகின்றனர். இவரை ரசிக்கும் ரசிகர்கள் அதிகமாக இருக்கத்தான் செய்கின்றார்கள். அவர்கள் அண்ணாச்சியின் வெளியேற்றத்தால் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து பார்ப்பதையே கூட விட்டு விட்டார்களாம்.

வித்தியாசமான திறமை
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருக்கும்போது மட்டுமல்லாமல் தனக்கு எப்போதுமே ஒரு வியாதி இருக்கிறது. அது ஒரு சில வாரங்களோ வருடங்களுக்குப் பிறகு என்ன நடக்கும் என்பது முன்னரே தெரிந்து விடுகிறது. அப்படித்தான் நான் ஒவ்வொரு வாரமும் இந்த வாரம் யார் வெளியே செல்வார்கள் என்று எதிர்பார்த்து கூறியிருந்தேன். அதுபோல தான் பல வாரங்களில் நடந்திருந்தது அதுபோல தன்னுடைய வெளியேற்றத்தின் போது கூட அதற்கு முன்பே இவர் கணித்து விட்டாராம்.

பாட்டு ஜோசியர்
ஏற்கனவே பிக்பாஸ் வீட்டிற்குள் ஒவ்வொரு வாரமும் வெளியேற்றப்படும் போட்டியாளர்களின் பெயர்கள் வரும் பாடலை வியாழக்கிழமை தோறும் போட்டு வருகிறார்களாம். இதை கணித்து பாட்டு ஜோசியர் ஆகவும் இமான் அண்ணாச்சி இருந்துள்ளார். அது மட்டுமல்லாமல் தன்னுடைய வித்தியாசமான திறமையால் வாழ்க்கையில் பின் நாட்களில் நடப்பது எல்லாம் இவருக்கு முன்பே தெரிந்து விடுகிறது என்று கூறியுள்ளார். இதை கேட்பவர்கள் எப்படி நினைப்பார்களா தெரியாது!! ஆனால் இதை நினைத்து பல நேரங்களில் தான் பெருமை பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications