விக்ரமிற்கு எதிரியாக மாறும் போலீஸ்காரர்.. இனியாவிற்கு தெரிய வந்த சோனாலி பற்றிய உண்மைகள்..அடுத்து?
சென்னை: இனியா சீரியலில் ஏற்கனவே இனியாவிற்கு தன்னுடைய திருமணத்தில் சோனாலி வந்திருக்கும் ரகசியம் தெரிந்துவிட்டது.
இந்த நிலையில் சோனாலி வந்த விஷயத்தை என்னிடம் எதற்காக விக்ரம் சொல்லவில்லை என்று இனியாவிற்கு சந்தேகம் வருகிறது.
இனியாவிற்கு சோனாலி பற்றிய ரகசியம் தெரிந்து விடக்கூடாது என்று விக்ரம் போராடிக் கொண்டிருக்கிறார்.

மனம் மாறிய விக்ரம்
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இனியா சீரியல் தற்போது நல்ல விறுவிறுப்பான கதை களத்தோடு ஒளிபரப்பாகி வருகிறது. ஏற்கனவே பொல்லாதவன் ஆகவும் பெண்களை மதிக்க தெரியாதவராகவும் இருந்த விக்ரம் இனியாவை பார்த்த பிறகு இனியா மீது காதல் கொண்டு தன்னுடைய கேரக்டரையே மாற்றி இருக்கிறார். இனியாவிற்காக எல்லாமே விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையில் இருக்கும் நிலையில் ஆரம்பத்தில் விக்ரம் செய்த செயல்கள் எல்லாம் இப்போது இனியாவிற்கு தெரிந்து கொண்டிருக்கிறது.

கொஞ்சம் பயமாகத்தான் இருக்கிறது
தன்னுடைய அப்பாவோடு சேர்ந்து விக்ரம் செய்த செயல்கள் இனியாவிற்கு தெரிந்ததால் இனியா விக்ரம் உடன் சண்டையிட்டு தனித்தனியாக பிரிந்து இருக்கின்றனர். இந்த நிலையில் தான் அப்பாவிடம் பேசியது தெரிந்ததும் இனியா அப்படி ரியாக்ட் பண்ணுகிறார் என்றால் சோனாலி விஷயத்தில் நாம் இதுவரைக்கும் செய்த ரகசியங்கள் எல்லாம் தெரிந்தால் என்ன ஆகும் என்று விக்ரம் பயத்தில் இருக்கிறார்.

சோனாலியை பார்த்த இனியா
ராஜேஷின் பெற்றோர் தங்களுடைய பிள்ளையை கண்டுபிடித்து தருமாறு விக்ரமிடம் வந்து புகார் அளிக்கினர். அப்போது விக்ரமனின் முகம் மாறி அவர் பயப்படுவதை பார்த்த இனியா குழப்பம் அடைகிறார். பின்னர் இனியாவிற்கு விக்ரமனின் தங்கை வந்து கல்யாண ஆல்பத்தை காட்ட அந்த ஆல்பத்தில் சோனாலி இருப்பதை பார்த்து இனியா அதிர்ச்சி அடைகிறார்.

இனியாவிற்கு வந்த ஃபோன் கால்
இந்த நிலையில் இன்றைய ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் விக்ரம் தன்னை பற்றிய உண்மை தெரிஞ்சதுக்கே இனியா வெறுக்கிறாளே, சோனாலி பற்றிய உண்மை தெரிஞ்சா என்ன என்ன செய்வாளோ தெரியல? அவளை மீட் பண்ண வைக்க கூடாது என சொல்லிக்கிட்டு இருக்கும்போது அதை இன்னொரு போலீஸ் பார்த்துவிட்டு இனியாவிற்கு ஃபோன் பண்ணி சோனாலி இருக்கிற இடம் எனக்கு தெரியும் என்று கூற, இனியா ஷாக் ஆகிறார். இந்த நிலையில் இனியாவிற்கு சோணாலி பற்றிய உண்மை தெரிந்தால் என்ன ஆகும் என்பது ரசிகர்கள் ஆர்வத்தோடு காத்திருக்கின்றனர்.
-
குடும்பங்களுக்குள் புகுந்து அவதூறு.. ‘குற்றம் நிரூபித்தால் உயிரோட விடக்கூடாது!’ குஷ்பு ஆவேச பேட்டி -
22 வயசுல அமலா பாலுக்கு அம்மா.. இப்போ அரசு வேலையில் கலக்கும் நடிகை! மைனா பூவிதாவின் மறுபக்கம் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
“விஜய் - அஜித் சாதனைக்கு ஓவர்டேக் போட்ட சூர்யா!.. 12 நாளில் ‘கருப்பு’ காட்டிய பாக்ஸ் ஆபிஸ் மாஸ்!” -
Khushbu: “ரவி மோகன் பற்றிய கேள்வி”.. குஷ்புவின் ரியாக்ஷன்.. ஒரே வார்த்தையில் பதிலடி -
“ஒரு சூப்பர் ஸ்டார் நடிகர் செய்த துரோகம்.. சினிமாவை விட்டே போனேன்” - சோனா பேட்டி.. கிளம்பிய சர்ச்சை -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்?












Click it and Unblock the Notifications