இன்ஸ்டாகிராம் பிரபலம் டூ பாடி பில்டர்.. சாதித்து காட்டிய சேலம் பொண்ணு.. இவங்க யாருன்னு தெரியுதா?
சென்னை: சமூக வலைத்தளங்கள் பலருடைய வாழ்க்கையை மாற்றி அமைத்து இருக்கிறது. அந்த வகையில் இன்ஸ்டாகிராம் மூலம் பிரபலம் அடைந்த பிரியங்கா மஸ்தானி காமெடி வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களின் மத்தியில் பிரபலமாக இருக்கும் நிலையில் இன்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் சேலம் மாவட்டத்தில் முதல் பெண் பாடி பில்டராக மாறி இருக்கிறேன் என்ற மகிழ்ச்சியான செய்தியை பகிர்ந்து இருக்கிறார்.
இணையத்தின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்திருக்கும் நிலையில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை காலை எழுந்ததும் கையில் எடுக்கும் முதல் பொருள் செல்போனாக தான் இருக்கிறது. அதில் whatsapp, facebook, instagram என்று பல ஆப்புகள் புதியது புதியதாக இருக்கும் நிலையில் தங்களுடைய நேரங்களை அதில் அதிகமானோர் செலவழித்து வருகிறார்கள். ஆனால் ஒரு சிலர் அதை சரியாக பயன்படுத்தி அடுத்த கட்ட வளர்ச்சிக்கு கொண்டு போகிறார்கள்.

தங்களுடைய திறமையை இது போன்ற சமூக வலைத்தளங்களில் காட்டி பலரையும் வியக்க வைப்பது மட்டுமல்லாமல் காசு பார்த்தும் வருகிறார்கள். சில வருடங்களுக்கு முன்பு டிக் டாக் செயலி பாப்புலராக இருந்தபோது அதில் பலர் வீடியோ வெளியிட்டு மக்கள் மத்தியில் பிரபலமடைந்து இப்போது சின்னத்திரை, வெள்ளித்திரைகளையும் கலக்கிக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு ஆதாரமாக பலரை சொல்லலாம். ஒரு சிலர் தங்களுடைய பொன்னான வாழ்க்கையை அழித்த கதையும் உண்டு.
ஆனால் ஒரு சிலர் இந்த சமூக வலைத்தளங்களை சரியாக பயன்படுத்தி பலருடைய வாழ்க்கையை மாற்றி அமைத்திருக்கிறார்கள். திரைப்பட நடிகர்கள் நடிகைகளுக்கு இருக்கும் அளவிற்கு இப்போது இந்த சமூக வலைத்தளத்தில் வீடியோக்களை வெளியிடும் பிரபலங்களுக்கும் இருக்கிறார்கள் என்பது தான் உண்மை. அதனால் தான் அவர்கள் பல பொருள்களை ஓசிக்கு வாங்கி அதை ப்ரோமோஷன் செய்து காசு பார்த்து வருகிறார்கள்.

ஆனால் யார் எப்படியோ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிரியங்கா மஸ்தானி என்ற ஐடியில் இருக்கும் பெண் இப்போது சேலம் மக்களை பெருமைப்பட வைத்திருக்கிறார். அதாவது இவர் இன்ஸ்டாகிராமில் பிரியங்கா மஸ்தானி என்ற பெயரில் அதிகமான காமெடி மற்றும் க்யூட்டான வீடியோக்கள் வெளியிட்டுக் கொண்டிருக்கிறார். இவருடைய வீடியோக்களில் ஆபாசங்கள் இல்லாமல் பார்க்கும் மக்களின் மனதை கவரும் விதத்தில் இருந்து வருகிறது.
இதனாலையே இவருக்கு நாளுக்கு நாள் ரசிகர்கள் கூட்டம் பாலோவர்ஸாக மாறிக் கொண்டிருக்கிறார்கள். இப்ப வரைக்கும் இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 1464 போஸ்ட் போட்டிருக்கிறார். அதே நேரத்தில் இவரை 650கே பாலோவர்ஸ் பாலோ பண்ணிக் கொண்டிருக்கின்றனர். இப்படியான நிலையில் தான் இன்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் க்யூட்டான ஒரு வீடியோ பகிர்ந்து இருக்கிறார்.
இதுவரைக்கும் இவர் பாவாடை தாவணியிலும் சுடிதாரிலும் அதிகமாக வீடியோ போட்டு இருந்தார். ஆனால் இன்று பாடி பில்டருக்கான போட்டிகளில் கலந்து கொண்டு தங்கப்பதக்கம் பெற்றிருக்கிறார். அதை தன்னுடைய ரசிகர்களிடம் பகிர்ந்து இருக்கிறார். அதில் இந்த மகிழ்ச்சியான நாளில் நன்றியுணர்வுடன் உணர்கிறேன். இது என் வாழ்க்கையில் எனது முதல் தங்கப் பதக்கம்...

நீங்கள் என் மீது காட்டிய நம்பிக்கையை நான் உண்மையிலே பாராட்டுகிறேன். உங்கள் ஆதரவுக்கு நான் நன்றி உள்ளவனாக இருக்கிறேன் என்று தனக்கு பிட்னஸ் சொல்லிக் கொடுத்த ஐடியை டேக் செய்து இருக்கிறார். மேலும் எனது வெற்றிக்கு பின்னால் இருக்கும் அனைவருக்கும் நன்றி. சேலம் மாவட்டத்தில் முதல் பெண் பாடி பில்டர் என்பதில் நான் பெருமை கொள்கிறேன் என்று கூறி இருக்கிறார்.
அதுபோல உங்களுக்கு எதுவும் இல்லாமல் இருக்கலாம் ஆனால் நீங்கள் ஒரு அடியை எடுத்து வைத்துக் கொண்டே போகும்போது ஒரு நாள் நீங்கள் திரும்பிப் பார்க்கும்போது மலை உச்சியில் இருப்பீர்கள் என்று அதற்கு ஒரு கேப்ஷனும் கொடுத்திருக்கிறார். இந்த நிலையில் இந்த பதிவிற்கு அதிகமான ரசிகர்கள் வாழ்த்துக்கள் கூறி வருகிறார்கள்.

அதோடு இவருடைய சாதனையால் சேலம் மாவட்டத்தை சார்ந்த பெண்களுக்கு மேலும் உத்வேகம் கொடுக்கும் வகையில் இருக்கும் என்பது பலருடைய கருத்தாக இருக்கிறது. இவரை இதுவரைக்கும் காமெடி வீடியோக்களில் காமெடியாக பார்த்த ரசிகர்களுக்கு இன்று சிரித்துக் கொண்டே ஒரு சிங்கம் மேடையில் நிற்பது போன்று இருக்கிறது என்று கமெண்ட்களை கொட்டுகிறார்கள்.












Click it and Unblock the Notifications