அண்ணா சீரியலில் நடிகர்,நடிகை வாங்கும் சம்பளம் இவ்வளவுவா?அதிக சம்பளம் வாங்கும் பிரபலம் யார் தெரியுமா?
சென்னை: விஜய் டிவியில் விரைவில் ஒளிபரப்பாக இருக்கும் அண்ணா சீரியலில் கதாநாயகனாக மிர்ச்சி செந்தில் நடிக்கிறார்.
இதுபோல கதாநாயகியாக நித்யா ராம் நடிக்கிறார்.
இந்த சீரியல் நடிகர்கள் வாங்கும் சம்பள விபரங்கள் தற்போது வெளியாகி இருக்கிறது.
ஒரு விஜேவாக இருந்த மிர்ச்சி செந்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பான மதுர சீரியல் மூலமாக சின்னத்திரையில் அறிமுகமாகி சரவணன் மீனாட்சி சீரியல் மூலமாக அதிகமான ரசிகர்களை கவர்ந்து பட்டி தொட்டி எல்லாம் பிரபலம் அடைந்து விட்டார். இந்த சீரியலின் இவருக்கு கிடைத்த வரவேற்பால் ஒரு சில திரைப்பட வாய்ப்புகளும் அவருக்கு கிடைத்து வந்தது.

ஆனால் திரைப்படங்களில் பெரிய அளவில் அவருக்கு வெற்றி கிடைக்கவில்லை என்ற நிலையில் தான் மீண்டும் இவர் சின்னத்திரையில் அறிமுகமானார். நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் மூலமாக மீண்டும் சின்னத்திரை ரசிகர்களை கவர்ந்த மிர்ச்சி செந்தில் தற்போது ஜீ தமிழில் முதல்முறையாக அறிமுகம் ஆகிறார். இவர் இதுவரைக்கும் விஜய் டிவி சீரியல்களில் நடித்து வந்த நிலையில் தற்போது வேறு சேனலுக்கு மாறி இருப்பது இவருடைய ரசிகர்களின் மத்தியில் குழப்பத்தை ஏற்படுகிறது.
இந்த நிலையில் அண்ணா சீரியலில் நான்கு தங்கைகளுக்கு ஒரு அண்ணனாக தங்கைகளை காக்கும் ஒரு அரணாக மிர்ச்சி செந்தில் நடிக்கிறார். ஏற்கனவே நாம் இருவர் நமக்கு இருவர் சீசன் 2 சீரியலில் இவர் அண்ணன் தங்கச்சி சென்டிமென்ட்டில் தான் நடித்திருந்தார். அதுபோல இந்த சீரியல் இருக்குமா என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் இவர் இந்த சீரியலுக்காக நடிப்பதற்காக ஒரு நாளைக்கு 28000 சம்பளம் வாங்குவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அதுபோல இவருக்கு ஜோடியாக நடிகை நித்யா ராம் நடிக்கும் நிலையில் அவர் இந்த சீரியலுக்காக ஒரு நாளைக்கு 23 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்குவதாகவும் தகவல்கள் பரவி வருகிறது.












Click it and Unblock the Notifications