Kanmani Serial: வாடகைத் தாய் கதை இப்படியும் இருக்குமா?
சென்னை: சன் டிவியின் கண்மணி சீரியலில் வாடகைத் தாய் கதையை இவங்க இஷ்டத்துக்கு கொண்டு போறாங்க.
கொஞ்சமாவது பிராக்டிகலா யோசிக்க வேணாமா? எல்லா கதையும் கொண்டு போகிற மாதிரியே நாங்களும் போறோம்னா எப்படி?
எத்தனை தவறுகள் இருக்கிறது என்று பூதக் கண்ணாடி வைத்து பார்க்க வேணாம்...ஆரம்பமே தப்புத்தான்.

கன்னிப் பெண்
கன்னிப் பெண் முத்துச்செல்வி ராதாவுக்கு பதில் வாடகைத் தாயாகலாம் என்று பேசி வைத்துக்கொண்டு, ராதாவாக நடிக்கறாளாம். ராதாவாக நடிக்கும் பெண் ஒரு குழந்தைக்கு தாயானவள். கன்னிப் பெண் முத்துச்செல்வி அவளுக்கு பதில் ராதாவாக நடித்து தாயாகிறேன் என்று நிற்கும்போது டாக்டருக்கு அதை கூட கண்டுபிடிக்கத் தெரியாதா?

ஆரம்பமே தவறு
இப்படி தவறான ஒன்றை கதையில் காண்பிக்கிறோமே என்கிற கூச்சம் கதாசிரியருக்கோ இயக்குநருக்கோ இருக்காதா? டாக்டரை இவ்ளோ முட்டாளாக காண்பிக்கிறீர்கள். இதற்கு டாக்டர்கள் உங்களுக்கு கண்டனம் தெரிவித்தல் மட்டுமே நீங்கள் திருந்துவீர்கள் என்றால் அது இந்த ஜென்மத்தில் நடக்காது.அவர்களுக்கு ஆயிரத்தெட்டு ஜோலி இருக்கு.

இதெல்லாம் நாமாக
இதெல்லாம் நாமாக பார்த்து திருத்திக்க வேண்டியது. அறியாமையில் மூழ்கிக் கிடக்கும் மக்கள்தானே என்றும், இதெல்லாம் யார் பார்க்கப் போகிறார்கள் என்று நினைப்பதும் தொழிலுக்கு நீங்கள் செய்யும் துரோகம். எல்லாரும் செய்கிறார்கள் என்று ஒவ்வொருவரும் இது போல பல பிழைகளை செய்து வருகிறார்கள்.

வாடகைத் தாய்க்கு
வாடகைத் தாய்க்கு உதவிக்கு முத்துச்செல்வி போகிறேன் என்று அங்கு போய் தங்குகிறாளாம். அங்கு போனால், அவ புருஷன் கரண்ட் போயிருச்சுன்னு சொல்லி தனக்கு, தன் பொண்டாட்டிக்கு, குழந்தைக்கு என்று மூவருக்கும் விசிறிவிட சொல்கிறானாம். எந்த டாக்டருங்க இப்படி எல்லாம் வசதி செய்து கொடுக்கறாங்க?

கண்ணன் சஞ்சீவ்
தனக்கான வேலைகளை கச்சிதமாக செய்துவிடும் நடிகர் சஞ்சீவ்,கண்ணனாக இந்த சீரியலில் நடித்துவிட்டு... எடிட்டிங் பற்றி கேட்டு கேட்டு அறிந்துக் கொள்கிறார் என்று சொன்னார்கள். ஆனால், இவர்களை போன்றவர்கள் கதையிலும் கொஞ்சமா மூக்கை நுழைக்க வேண்டும் போலிருக்கிறது.
சீரியலுக்கு எப்படி வேண்டுமானாலும் கதையை எழுதுங்கள். ஆனால், மக்களை.. படித்தவர்களை முட்டாள் என்று நினைத்து கதையை எழுதாதீர்கள்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications