ஐக்கி வெளியேறியதால் உயிரோடு இருக்க மாட்டேன்... ரசிகரின் வார்த்தையை கேட்டு அரண்டு போன ஐக்கி
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய ஐக்கியிடம் அவருடைய ரசிகர்கள் தங்கள் பாசத்தை கொட்டி வருகின்றனர்.
ஐக்கியின் வெளியேற்றம் அவருடைய ரசிகர்களை ரொம்பவே பாதித்து இருக்கிறது என்பதே ரசிகர்களின் கமெண்ட்களில் இருந்து தெரிந்து கொள்ள முடிகிறது.
ரசிகர்களின் பாசத்தை பார்த்து மிரண்டு போன ஐக்கி ரசிகர்களுக்கு ஆறுதல் கூறி வருகிறார்.

ரசிகர்களை பாதித்த வெளியேற்றம்
பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு ஒவ்வொரு சீசனிலும் ஒருசில போட்டியாளர்கள் வெளியேறுவது ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியாததாக இருக்கிறது. தங்களுடைய மனம் கவர்ந்த போட்டியாளர்களின் வெளியேற்றம் அவர்களை அதிகமாக பாதிக்கிறது என்பதை சமூக வலைதளங்களில் உலா வரும் கமெண்ட் மூலம் தெரிந்து கொள்ள முடியும். அந்த மாதிரி தான் தற்போதைய சீசனில் ஐக்கியின் வெளியேற்றம் ரசிகர்களை அதிகமாக பாதித்து இருக்கிறது. இதுவரைக்கும் அதிகமான நெகட்டிவ் கமெண்டுட்களை பெறாமல் இருந்த ஐக்கி தற்போது ரசிகர்களின் கமெண்டுட்களை பார்த்து மிரண்டு போயிருக்கிறார்.

அதிகரித்த ரசிகர்கள்
பிக் பாஸ் நிகழ்ச்சி ஐந்தாவது சீசன் தொடங்கிய முதல் நாளில் இருந்து தான் வீட்டை விட்டு வெளியேறிய கடைசி நாள் வரைக்கும் சுறுசுறுப்பாகவும் குழந்தை தனமாகவும் விளையாடிக் கொண்டிருந்த ஐக்கிக்கு நாளுக்கு நாள் ரசிகர்கள் அதிகரித்துக் கொண்டிருந்தனர். இவருடைய ஜாலியான விளையாட்டு திறனை பார்த்தும், குழந்தை போல குணத்தை பார்த்தும் பலர் இவரை இந்த நிகழ்ச்சியில் கடைசி வரைக்கும் இருக்க வேண்டும் என்று தங்களது விருப்பங்களை தெரிவித்துக் கொண்டிருந்தனர். ஆனால் தற்போது அது நடைபெறாமல் இவர் பாதியிலேயே வெளியேறி இருக்கிறார்.

பல திறமைகள் கைவசம் இருக்கு
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்பு பல திறமைகளை உள்ளடக்கிய ஒரு போட்டியாளராக தான் ஐக்கி இருந்துள்ளார். இவர் மருத்துவராகவும், பாடகராகவும், டான்ஸராகவும், ஓவிய கலைஞராகவும் பல துறைகளில் கலக்கி வருகிறார். இவருடைய கேரக்டரை பல ரசிகர்களுக்கு பிடித்ததால் தான் இவ்வளவு நாட்களாக இவருக்கு ஓட்டுப் போட்டு வந்தனர். இந்த நிலையில் இந்த வாரமும் இவர் அதிகமான ஓட்டுகள் பெற்று தான் இருந்தார். ஆனால் கடைசி நேரத்தில் இவர் வெளியேறியது ரசிகர்களுக்கு பெருத்த அதிர்ச்சியாக இருந்துவருகின்றது. ரசிகர்களின் வாக்கு எண்ணிக்கையில் இது நடந்ததா??என்று பல ரசிகர்கள் சந்தேகங்களை எழுப்பி வருகின்றனர்.

ரசிகரின் பாசம், ஐக்கியின் அறிவுரை
ஐக்கி நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய பிறகு தன்னுடைய ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இன்ஸ்டாகிராமில் லைவில் வந்துள்ளார். அப்போது அவரிடம் ஒரு ரசிகர் நீங்கள் வெளியேறியதால் நான் உயிரோடு இருக்க மாட்டேன் என்று உணர்ச்சி பெருக்கெடுத்து கூறியிருக்கிறார். இவருடைய இந்த வார்த்தையை கேட்டதும் அரண்டு போன ஐக்கிய, அந்த மாதிரி ஒரு முடிவை சொல்ல கூடாது. நான் வெளியே வந்த பிறகும் சந்தோஷமாக இருக்கிறேன். எனக்கு ரசிகர்கள் இந்த அளவிற்கு பாசத்தை தருவார்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை. உங்களுடைய பாசத்திற்கு ரொம்பவே நன்றி என்று அந்த ரசிகருக்கு பக்குவமாக அறிவுரை கூறியிருக்கிறார்.
-
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம்












Click it and Unblock the Notifications