800 கோடியை தாண்டிய ஜெயிலர் 2 வசூல்.. 3வது திங்கட்கிழமை திடீர் சரிவு.. நவம்பர் 2ம் தேதி நிலவரம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் வெளியான ஜெயிலர் 2 திரைப்படம் 3 வாரங்களை கடந்தும் தியேட்டரில் ஓடிக்கொண்டிருக்கிறது. ஆரம்பத்தில் இருந்த அதிரடியான வசூல் இப்போது கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வந்தாலும் உலக அளவில் 800 கோடி என்ற மிகப்பெரிய மைல்கல்லை படம் கடந்து விட்டது. நவம்பர் 2 தேதியான நேற்று படத்தின் வசூல் நிலவரம் எப்படி இருந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.

ஜெயிலர் 2 வசூல்

அக்டோபர் 15ஆம் தேதி வெளியான ஜெயிலர் 2 முதல் நாளிலிருந்து வசூலில் நல்ல வேகத்தை பிடித்திருக்கிறது. ரஜினிகாந்த்தின் முத்துவேல் பாண்டியன் கேரக்டரை மீண்டும் ஜெயிலர் 2 வில் பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக இருந்தனர். முதல் வாரத்திலேயே படம் பெரிய தொகை வசூலித்தது. முதல் 8 நாட்களில் இந்தியாவில் மட்டும் 334.35 கோடி நெட்வொர்க் கிடைத்ததாக தகவல்கள் வெளியானது.

3வது வார நிலவரம்

பிறகு 2வது வாரத்தில் வேகம் கொஞ்சம் குறைந்தாலும் படம் தொடர்ந்து நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. அந்த வாரத்தில் மட்டும் இந்தியாவில் 95.55 கோடி நெட் வசூல் கிடைத்திருக்கிறது. இதனால் முதல் இரண்டு வாரங்களின் முடிவில் இந்திய நெட் வசூல் 429.90 கோடியை தொட்டது. 3வது வாரத்தில் வார நாட்களில் வசூல் குறைந்து இருந்தாலும் கடந்த வார இறுதியில் மீண்டும் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அக்டோபர் 30ஆம் தேதி வெள்ளிக்கிழமை 5.50 கோடி நெட் வசூல் கிடைத்த நிலையில் சனிக்கிழமை 9.70 கோடியாக உயர்ந்தது. ஞாயிற்றுக்கிழமை மேலும் அதிகரித்து 11.20 கோடி வசூலை பெற்றது.

Jailer Rajinikanth Box Office

800 கோடி வசூல்

இதனால் 3வது வார இறுதியில் ஜெயிலர் 2 ரசிகர்களை திரையரங்குக்கு அழைத்து வந்தது. ஆனால் திங்கட்கிழமை ஆன நேற்று நவம்பர் 2ம் தேதி மீண்டும் குறைந்திருக்கிறது. நேற்றைய அளவில் சுமார் 3.40 கோடி நெட் வசூல் கிடைத்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை கிடைத்த 11.20 கோடியுடன் ஒப்பிடும்போது இது கணிசமான சரிவு தான். இருந்தாலும் ஒட்ட மொத்த வசூலை பார்த்தல் ஜெயிலர் 2 இன்னும் பெரிய சாதனையை தக்க வைத்திருக்கிறது.

நவம்பர் இரண்டாம் தேதி முடிவில் இந்தியாவில் படத்தின் நெட் வசூல் 459.70 கோடியாகவும் இந்திய கிராஸ் வசூல் 537.75 கோடியாகவும் இருப்பதாக தகவல்கள் கிடைத்திருக்கின்றன. மொத்தத்தில் முதல் வாரத்தில் இருந்த வேகம் இப்போது இல்லை என்றாலும் மூன்று வாரங்களை கடந்தும் 800 கோடிக்கு மேல் உலகளாவிய வசூலை பெற்றிருப்பது ரஜினிகாந்த் ரசிகர்களுக்கு உற்சாகமான செய்தி தான்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+