சென்னை புறநகர் மக்களின் கொடூர பயணம்.. இன்னும் கொஞ்சம் இரக்கம் காட்டலாம் தெற்கு ரயில்வே

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஒரு நாள் விவசாயியாக வாழ்ந்து பார்க்க வேண்டாம்..ஒரு நாள் விவசாயி கூட இருந்து பாருங்க.. அவங்க கஷ்டம் உங்களுக்கு புரியும் என்று சினிமா படத்தில் ஒரு வசனம் வரும். அதேபோல் தான் சென்னை புறநகரில் வாழ்ந்து சென்னைக்கு தினமும் மின்சார ரயிலில் வேலைக்கு போக வேண்டாம்.ஒரே ஒரு நாள் செங்கல்பட்டு அல்லது அரக்கோணத்தில் இருந்து கிண்டி வரை மின்சார ரயிலில் காலை மாலை வந்து பாருங்கள். அவர்களின் கஷ்டம் எப்படிப்பட்டது என்று புரியும். மிக மோசமான நெரிசலுக்கு நடுவில் தான் பீக் அவர்ஸில் மக்கள் பயணிக்கிறார்கள். மின்சார ரயில் விவகாரத்தில் தெற்கு ரயில்வே இன்னும் கூட கொஞ்சம் இரக்கம் காட்டலாமே என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

நீண்ட வருடங்கள் கழித்து சென்னையின் புறநகர் பகுதியில் மீண்டும் குடியேறிய நபருக்கு கிண்டியில் உள்ள அலுவலகத்தில் வேலைக்கு போனார். காலையில் பீக் அவர்ஸில் பொத்தேரியில் இருந்து ஏறினார். இரக்கமே இல்லாத அளவிற்கு கூட்டம்..இப்படியுமாக மூச்சு முட்ட வைப்பார்கள் என்று பக்கத்தில் உள்ளவர்களிடம் கேட்டுள்ளார். அவர் எடுத்த உடனேயே ஊருக்கு நீங்கள் புதுசா என்று கேட்டுள்ளார். அதற்கு அவர்.. இல்லை. பல ஆண்டு கழித்து சென்னையில் மீண்டும் வேலைக்கு வந்துள்ளேன் என்றார். அப்போது சக பயணி, இங்கு காலையில் எப்போதுமே இப்படித்தான்.மின்சார ரயிலில் சென்னை போனால் பீக் அவர்ஸில் மூச்சுவிடக்கூட முடியாது..

Southern Railway could show a bit more compassion toward the people living in the Chennai suburbs

மிக கடுமையான கூட்டமே இருக்கும். காலையில் ஏறும் போது, நசுக்குவார்கள்.. மாலையில் வீடு திரும்பும்போது, துவட்டிவிடுவார்கள். வீட்டிற்கு சென்றால், அழுப்பில் படுத்த உடன் தூக்கம் வந்துவிடும். எதையுமே நினைக்கக்கூட தோன்றாது. இதுதான் சார் நல்லது. விலைவாசி, வீட்டு பிரச்சனை, ஆபீஸ் பிரச்சனை என எதையுமே நினைக்க வேண்டியதே இல்லை பாருங்க என்றார் கிண்டலாக..

அவர் சொல்வது ஒரு வகையில் உண்மை தான். ஏனெனில் மிக கடுமையான நெரிசலில் தினமும பயணிக்கும் மக்கள் அதற்காக ஓடிக்கொண்டே இருப்பார்கள். காலையில் 8 மணிக்கு சென்றால், இரவு 8 மணிக்கு வீட்டிற்கு வருகிறார்கள். அப்படியே துணிகளை துவைத்து சாப்பிட்டுவிட்டு படுத்தால், மறுபடியும் காலை 8 மணிக்கு கிளம்பி, இரவு 8 மணிக்கு வீடு திரும்புவது, இப்படியே வாரத்தில் ஆறு நாட்கள் ஓடுகிறது. ஞாயிறு ஒரே நாளில் அந்த வாரத்திற்கு தேவையான அனைத்தையும் வாங்கிவிட்டு, வீட்டு வேலைகளே முடிக்கவே நேரம் முடிந்துவிடும். மறுபடியும் எந்திரம் போல் ஓடுகிறது.

இதில் மின்சார ரயில்களில் பயணித்து வேலை செய்யும் மக்கள், அதற்காக கொடுமையான மற்றும் கசப்பான அனுபவங்களை தினமும் சந்திக்கிறார்கள். ஒரு நாள், இரண்டு நாள் என்றால் பரவாயில்லை.. இன்னைக்கும் லேட்டாகவே வருகிறதே என்று புலம்பியபடி ரயிலில் பயணிப்பது என்பது சென்னை புறநகர் மக்களின் வாடிக்கையாக உள்ளது. லேட்டாகவே செல்வோம். தாமதமாக சென்றால் யார் கேட்க முடியும்.. ஏன் தாமதம் என்று யாருமே கேட்க முடியாது என்ற மனநிலையில் ரயில்களை பல நாட்கள் தாமதமாகவே இயக்குவதாக பயணிகள் குற்றம்சாட்டுகிறார்கள்.

செங்கல்பட்டு-கடற்கரை வழித்தடம் மட்டுமல்ல, கும்மிடிப்பூண்டி-சென்ட்ரல், அரக்கோணம்-சென்ட்ரல் வழித்தடத்திலும் மிக கடுமையான நெரிசல் தினசரி ஏற்படுகிறது. பீக் அவர்ஸ்களில் ரயில் சேவையை அதிகரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது- குறிப்பாக பாஸ்ட் ரயில்களை இன்னும் அதிகமாக்கினால் பயனுள்ளதாக இருக்கும் என்று பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Southern Railway could show a bit more compassion toward the people living in the Chennai suburbs

அதேபோல் பொத்தேரி, காட்டாங்குளத்தூர், மறைமலைநகர் பகுதிகளில் எங்குமே மேம்பாலம் இல்லாத காரணத்தால் ஒவ்வொரு நாளும் 120 முறை அந்த பகுதிகளில் ரயில்வே கேட்டையும் அவர்கள் சந்திக்கிறார்கள். ஒருமுறை இருமுறை ரயில் செல்லும் பகுதிகளுக்கு கூட சுரங்கப்பாதை அமைக்கும் தெற்கு ரயில்வே, காட்டாங்குளத்தூர், பொத்தேரி,மறைமலைநகரை மட்டும் அப்படியே விட்டுவிட்டதாக கவலை தெரிவிக்கிறார்கள் புறநகர் பகுதி மக்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+