உசுரே நீதானே! ஜானகியின் சென்னை ராயப்பேட்டை வீடு.. தலைகாணிக்கடியில் மலைத்த என்எஸ்கே! அதுதான் எம்ஜிஆர்
சென்னை: மோகினி என்ற படத்தின்போது, நாளிதழில் ஜானகி அம்மாவின் படத்தை பார்த்து அசந்து போனாராம் எம்ஜிஆர்.. பார்ப்பதற்கு அப்படியே தன்னுடைய முதல் மனைவி போலவே ஜானகி இருந்தாராம்.. அப்போது எம்ஜிஆரைவிட ஜானகிக்கு அதிக சம்பளம்.. பிறகு ஜானகியுடன் இணைந்து நடித்தபோது இருவருக்குள்ளும் காதல் மலர்ந்தது என்று மூத்த பத்திரிகையாளர் சபிதா ஜோசப் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
King 24x7 என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள மூத்த பத்திரிகையாளர் சபிதா ஜோசப், "கலைவாணர் மீது அதிக மரியாதை வைத்திருந்தவர் எம்ஜிஆர்.. கலைவாணருக்கும் எம்ஜிஆர் மீது பிரியம் அதிகம்..

ஒருமுறை கலைவாணரிடம் சிலர், "பாகவதர், பியூ சின்னப்பா, உங்களை விடவா, எம்ஜிஆருக்கு கூட்டம் கூடிவிட போகுது? என்று மூட்டி விட்டனர்..
அதற்கு கலைவாணர், "அப்படியெல்லாம் சொல்லக்கூடாது.. எங்களுக்கெல்லாம் சேர்ந்த கூட்டம் மொத்தமாக எம்ஜிஆருக்கு சேர்ந்து வருகிறது.. சேரட்டுமே.. அவன் நல்லவன்.. முன்னுக்கு வரட்டுமே" என்றாராம்..
மொடா குடிகாரர்
அதேபோல ஒருமுறை கலைவாணர் மது அருந்தி கொண்டிருந்தாராம்.. அப்போது மொடா
குடிக்காரர் ஒருவர் வருவதை பார்த்ததுமே, குடித்து கொண்டிருந்த மதுவை உடனே மறைத்து வைத்து கொண்டாராம் என்எஸ்கே.. பிறகு அந்த நபர் சென்றதுமே., எம்ஜிஆர் வந்துள்ளார்.. அப்போதும் என்எஸ்கே தான் அருந்தி கொண்டிருந்த மதுவை மறைத்து வைத்து கொண்டாராம்..
இதையெல்லாம் அருகிலிருந்து பார்த்து கொண்டிருந்த நபர், "ஏன் இப்படி மதுவை மறைத்து வைக்கறீங்க" என்று கேட்டாராம். அதற்கு என்எஸ்கே "முதலில் வந்தவன் மொடா குடிகாரன்.. மறைத்து வைக்கலேன்னா இதையும் பிடுங்கி குடித்துவிடுவான்.. 2வது வந்த தம்பி எம்ஜிஆர்.. அவருக்கு நான் குடிப்பது பிடிக்காது.. அந்த அன்புக்கு மரியாதை தரணும்னு என்பதற்காகவே மறைத்து வைத்தேன்" என்றாராம்.
எம்ஜிஆர் செய்த பணஉதவி
ஒருமுறை என்எஸ்கே உடல்நலம் குன்றி மருத்துவமனையில் படுத்திருந்தார்.. யார் பண உதவி செய்தாலும் என்எஸ்கே அதை ஏற்றுக்கொள்ள மாட்டார் என்று எம்ஜிஆருக்கு தெரியும்.. அதனால் என்எஸ்கேவை பார்த்துவிட்டு, அங்கிருந்து கிளம்பி வந்துவிட்டார் எம்ஜிஆர்..
எம்ஜிஆர் சென்ற சிறிது நேரத்தில் என்எஸ்கேவிடம் பணஉதவி பெறுவதற்காக சிலர் சென்றிருக்கிறார்கள்.. என்ன செய்வதென்றே தெரியாமல் என்எஸ்கே, "ராமச்சந்திரன் போயாச்சா?" என்று கேட்டபடியே, தன்னுடைய தலைகாணியை எடுத்து பார்த்துள்ளார்.. அப்போது தலைகாணிக்கு அடியில் பண நோட்டுக்கள் இருந்தை கண்டு விக்கித்துபோனார் என்எஸ்கே.. ராமச்சந்திரன் வைத்துவிட்டு போனது என்று அப்போதுதான் என்எஸ்கேவுக்கும் தெரிந்துள்ளது.
கர்ப்பிணி மனைவி
கலைவாணர் இறந்து, அவருடைய வீடு ஏலத்தில் போனபோது, அந்த வீட்டை மீட்டு தந்ததும் எம்ஜிஆர்தான்.. கலைவாணரின் மகனுக்கான படிப்பு செலவு, பிள்ளைகளின் திருமண செலவு அத்தனையும் செய்தார் எம்ஜிஆர்.
எம்ஜிஆருக்கு முதல்மனைவி இறந்ததுமே, 2வது மனைவியை கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைத்தார்கள்.. அவரது பெயர் சதானந்தவதி.. கேரளாவை சேர்ந்தவர்.. சதானந்தவதி கர்ப்பமாக இருந்தபோது, காசநோய் தாக்கி இறந்துவிட்டார்.. முதல்மனைவிக்கும் குழந்தை உண்டானது.. 2வது மனைவியும் கர்ப்பிணியாக இருந்தபோது TB பாதிப்பு ஏற்பட்டது..
ரிக்ஷாவில் போன மனைவி
அப்போதெல்லாம் எம்ஜிஆருக்கு சம்பளம் குறைவு என்பதால், மயிலாப்பூர் மருத்துவமனை சிகிச்சைக்காக ரிக்ஷாவிலேயே மனைவியை அழைத்து சென்று வருவாராம் எம்ஜிஆர்.
அப்போதுதான், மோகினி என்ற படத்தின்போது, நாளிதழில் ஜானகி அம்மாவின் படத்தை பார்த்து அசந்து போனாராம் எம்ஜிஆர்.. பார்ப்பதற்கு அப்படியே தன்னுடைய முதல் மனைவி போலவே ஜானகி இருந்தாராம்.. அப்போது எம்ஜிஆரைவிட ஜானகிக்கு அதிக சம்பளம்.. பிறகு ஜானகியுடன் இணைந்து நடித்தபோது இருவருக்குள்ளும் காதல் மலர்ந்தது..
ஒருபடத்தின் ஷூட்டிங்குக்காக ஜானகி கல்கத்தா போகும்போது, அந்த படத்தின் டைரக்டரிடம், "அண்ணே, என் உயிரையே உங்களுடன் அனுப்பி வைக்கிறேன், பத்திரமாக பார்த்துக்குங்க" என்று சொல்லி அனுப்பினாராம் எம்ஜிஆர்.
ஜானகி சென்னை ராயப்பேட்டை வீடு
நான்கைந்து படங்கள் ஜானகியும், எம்ஜிஆரும் சேர்ந்து நடித்தார்கள்.. 2வது மனைவி சதானந்தவதி அப்போது படுக்கையில் கிடந்தபோது எம்ஜிஆர்தான் கண்ணும் கருத்துமாக கவனித்து கொண்டார்.. சதானந்தவதியை பார்ப்பதற்காக ஜானகி அம்மாவும் அப்போது எம்ஜிஆர் வீட்டுக்கு வருவாராம்..
ராயப்பேட்டையிலுள்ள தற்போது கட்சி அலுவலகம்தான், ஜானகி அம்மா சொந்தமாக சம்பாதித்து வாங்கிய வீடாகும்.. அங்கிருந்துதான், சதானந்தவதியை பார்க்க அடிக்கடி வருவார் ஜானகி அம்மா.. பிறகு தான் சொந்தமாக வாங்கிய அந்த வீட்டையே, அதிமுக கட்சிக்காகவே தந்துவிட்டார் ஜானகி அம்மா" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.
-
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications