அவசரப்படாதீங்க.. இதுக்கெல்லாமா ஜெயம் ரவி இப்படி முடிவெடுப்பது? ரவி மோகனுக்கு ரசிகர்கள் ஒரே அட்வைஸ்
சென்னை: உலகிலேயே மிகச்சிறந்த தம்பதி என்னுடைய அப்பா, அம்மாதான்.. இருவரும் மிகச்சிறந்த கணவன் மனைவி.. என்னுடைய அப்பா சிறுவயதிலிருந்தே கடும் உழைப்பாளி.. " என்று ஜெயம் ரவி நெகிழ்ந்து சொல்லி உள்ளார்.. இந்த தகவலை பயில்வான் ரங்கநாதன் பகிர்ந்து கொண்டுள்ளார்.
தன்னுடைய பெயரை ரவி மோகன் என்று மாற்றிக் கொண்டதற்கு பிறகு, ஜெயம் ரவியின் அணுகுமுறையில் நிறைய மாற்றங்கள் தென்படுவதாக கூறுகிறார்கள். தன்னுடைய படங்கள் குறித்த ப்ரோமோஷனில் பேசும்போதெல்லாம் அவரது பேச்சில் பாசிடிவ் தன்மை காணப்படுவதாகவும், மோடிவேஷனாகவே அவரது பேச்சு உள்ளதாகவும் சொல்கிறார்கள்.

டான்ஸ்: போதை காலம் திரும்புதடி என்ற அவரது பாடலுக்கு, ஜெயம் ரவியின் டான்ஸில் புதுவித்தியாசத்தை ரசிகர்களால் பார்க்க முடிந்தது.. சமீப காலமாகவே பல பேட்டிகள், புரமோஷன்களில் கலந்து கொண்டு வரும் ஜெயம் ரவியிடம் பாசிடிவ் மாற்றங்கள் தென்படுவது, அவரது ரசிகர்களுக்கும் மிகுந்த மகிழ்ச்சியை தந்து வருகிறதாம்.
இந்நிலையில், King 24X7 என்ற யூடியூப் சேனலுக்கு பயில்வான் ரங்கநாதன் தந்துள்ள பேட்டியில், "புத்தாண்டு முதல் தன்னுடைய பெயரை ரவி மோகன் என்று மாற்றியிருக்கிறார் ஜெயம்.. செய்தியாளர்களிடம் இவர் சந்தித்து பேசியபோது, நிறைவேறாத ஆசை என்ன என்று கேட்டார்கள். ஜெயம் ரவி சொல்லும்போது, இமயமலை போகணும்னு ஆசை. விரைவில் செல்ல போகிறேன் என்றார்.
பல கார்கள்: தொடர்ந்து ஜெயம் ரவி சொல்லும்போது, "12 வருடமாக ஒரே காரை வைத்திருந்தேன், இப்போது பல கார்களை வைத்து கொள்ள ஆசைப்படுகிறேன்.. என்னிடம் 3 கார்கள் இருக்கின்றன.. வெளிநாட்டு காரையும் வைத்திருக்கிறேன்.. நானும், என்னுடைய அக்காவும் நிறைய சண்டை போட்டுக்குவோம்..
உலகிலேயே மிகச்சிறந்த தம்பதி என்னுடைய அப்பா, அம்மாதான்.. இருவரும் மிகச்சிறந்த கணவன் மனைவி.. என்னுடைய அப்பா சிறுவயதிலிருந்தே கடும் உழைப்பாளி.. அவர் உழைத்து கொண்டுவரும் சொற்ப பணத்தில்தான், 3 பிள்ளைகளையும் என் அம்மா வளர்த்தார்.. என் அம்மா, அப்பா சத்தம் போட்டு பேசிக்கூட நாங்கள் பார்த்தது இல்லை.. எங்கள் மீது அன்பு, பாசம் வைத்திருப்பவர் அம்மா.. எனக்கு நிறைவேறாத ஆசை என்றால் அது இமயமலைக்கு போகாமல் உள்ளதுதான்.. விரைவில் இமயமலை செல்வேன்" என்றார்.
பிரிந்த சோகம்: ஆனால், இவ்வளவும் ஜெயம் ரவி பேசும்போது, மனைவியை பிரிந்த சோகம் அவரது முகத்தில் தெரிந்தது.. அதேபோல இவர்கள் இருவரும் இணைவதற்கு வாய்ப்பு இல்லை என்றே தெரிகிறது" என்று பயில்வான் ரங்கநாதன் கூறியிருக்கிறார்.
"எனக்கு என்று எந்த ஆசையும் இல்லை. நான் இமயமலைக்கு சென்று செட்டிலாகிவிடுவேன்" என்று விரக்தியோடு ஜெயம் ரவி பேசவும், ரசிகர்கள் திரண்டு வந்து, அப்படியெல்லாம் பேசாதீங்க ரவி.. ஒரு படம் தோல்வி அடைந்தால் என்ன, அடுத்த படம் ஹிட் கொடுக்கும்... அதற்காக இப்படியெல்லாம் முடிவு எடுக்க கூடாது என்று அட்வைஸ்களை அக்கறையுடன் சொல்லி வருகிறார்களாம்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications